கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் நேற்று திங்கட்கிழமை அறுவடை செய்த
நெல்லை  உலர விட்டுக்கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்க விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியினைச் சேர்ந்த பத்மநாபன் அகிலன் (வயது 21) என்பவரே இச் சம்பவத்தில் உயிரிழந் துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத் தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேற்படிச் சம்பவத்தில் உயிரிழந்தவர் வட்டக்கச்சி இராமநாதபுரம் மகாவித் தியாலய வரலாறு பாட ஆசிரியர் பரமேஸ்வரி பத்மநாபனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply