யாழ்ப்பாணம் – கோப் பாய் தேசிய கல்வியியற் கல்லூரிக்கு அருகாமை யில் காணி பிணக்கு காரணமாக 59 வயதான இரு பிள்ளைகளின் தந்தை நேற்று திங்கட்கிழமை மாலை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் மத்தி கோப்பாயில் வசிக்கும் செல்லத்துரை செல்வ ரஞ்சன் (வயது 59) நபரே குறித்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட தாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில்

மேலும் தெரியவருவது:

குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை மாலை வேளை தனது தோட்டக்கா ணிக்கு நீர் பாய்ச்கிக் கொண்டிருந்த சமயம் அருகில் உள்ள வீட்டார் காணிப்பாதைப் பிரச்சினை தொடர் பில் முரண்பட்டுள்ளனர்.

முரண்பாடு முற்றிய நிலையில், தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவ ரின் மண் வெட்டியை பறித்து அந்த நபர் மீது தாக்கியதில் பிடரி பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அக் காயத்தின் வழியாக அதிக இரத்தம் வெளியேறிய நிலையில் சம்பவ இடத்திலேயே வீழ்ந்து அவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கொலையாளிகள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ள நிலையில் இரண்டு பேர் பொலிஸாரி னால் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றைய நபர் ஒருவர் தலைமறைவாகி உள்ளனர்.

தலைமறைவான வரைக் கைது செய்வதற்கான நடவ டிக்கைகளில் கோப்பாய் பொலிஸார் ஆரம்பித்திருந்தனர்.

Share.
Leave A Reply