டெஹ்ரான்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானை சுற்றி டொனால்ட் டிரம்ப் போர்க்கப்பல், போர் விமானங்களை குவித்துள்ளார்.

இந்நிலையில் தான் அமெரிக்காவின் போர்க்கப்பல்களை மூழ்கடிக்கும் வகையில் ஈரானிடம் முக்கிய ஆயுதம் உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

இதுதொடர்பான மோதலில் கடந்த ஆண்டு ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா குண்டுகளை வீசியது

மேலும் ஈரான் அணுஆயுதம் தயாரிக்கமாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய டிரம்ப் கூறி வருகிறார்.

இதுதொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே 2 கட்டஙகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

போர்க்கப்பல் – போர் விமானங்கள்

இதற்கிடையே தான் ஈரானை சுற்றி அமெரிக்கா போர் விமானங்கள், போர்க்கப்பல்களை குவித்து வருகிறது.

மேலும் இன்னும் சில நாட்களில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா தற்போது மத்திய கிழக்கில் எஃப் 22, எஃப் 35, எஃப் 16 ரக போர் விமானங்களை குவித்துள்ளது.

அதுமட்டுமின்றி வானிலேயே எரிபொருள் நிரப்பும் விமானங்கள், போர்க்கப்பல்களையும் அமெரிக்கா குவித்துள்ளது.

700 கிமீ தொலைவில்…

போர்க்கப்பல்களை எடுத்து கொண்டால் 2 பெரிய போர்க்கப்பல்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது.

ஈரானில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் எனும் விமானம் தாங்கி போர்க்கப்பலை அமெரிக்கா நிலைநிறுத்தி உள்ளது.

அதற்கு பாதுகாப்பாக 9 டெஸ்ட்ராயர் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் போர்ட் என்ற போர்க்கப்பலும் கப்பலும் ஈரானை நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளது.

ஈரான் கொடுத்த வார்னிங்

இது ஈரானுக்கு டென்ஷனை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் இதுதொடர்பாக ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அளித்தபேட்டியில், ‛‛இந்த 2 பிரமாண்டமான அமெரிக்க போர்க்கப்பல்களை மூழ்கடிக்கும் ஆயுதம் ஈரானிடம் உள்ளது.

அமெரிக்கா தாக்கினால் உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும்” என்று வார்னிங் செய்தார்.

அமெரிக்காவை ஒப்பிடும்போது ஈரானின் ஆயுத பலம், படை பலம் மிகவும் குறைவானது. இதனால் ஈரானால், அமெரிக்காவின் போர்க்கப்பல், விமானம் தாங்கி போர்க்கப்பல்களை தாக்கி அழிக்க முடியுமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இந்நிலையில் தான் நிபுணர்கள் முக்கிய விஷயத்தை கூறியுள்ளனர்.

அமெரிக்காவை எதிர்க்க தயார்

அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு நடுவே ஈரானும் தனது போர் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் படை வீரர்கள் போர் பயிற்சி மேற்கொண்டனர். மேலும் ரஷ்யாவுடன் சேர்ந்து ஈரான் இன்று கடற்படை போர் பயிற்சியை தொடங்கி உள்ளது.

இது ஈரானும், அமெரிக்காவை எதிர்க்க முழு வீச்சில் தயாராவதை காட்டுகிறது.

கலீஜ் பார்ஸ் ஏவுகணை

Khalij fars missile

மேலும் ஈரானிடமும் வலிமையான ஏவுகணைகள் உள்ளன. ‘கலீஜ் பார்ஸ்’ பாலிஸ்டிக் ஏவுகணை (Khalij Fars missile) ஏவுகணை என்பது போர்க்கப்பல்களுக்காகவே பிரத்யேகமாக ஈரான் தயாரித்து வைத்துள்ளது. இந்த ஏவுகணைகள் போர்க்கப்பல்களை குறிவைத்து துல்லியாக தாக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

இது ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு வேகத்தில் சீறிப்பாயும். கடலில் நகரும் போர் கப்பல், விமானம் தாங்கி போர்க்கப்பல்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட இந்த ஏவுகணையை இடைமறித்து அழிவது மிகவும் கடினமாகும். இதுதான் ‛கலீஸ் பார்ஸ்’ பாலிஸ்டிக் ஏவுகணையின் சிறப்பாகும்.

 டார்பிடோ ஏவுகணை (Torpedo missile)

அதேபோல் ஈரானிடம் ‘ஹவுட்’ என்ற அதிவேக டார்பிடோவும் (Super-Fast Torpedo Hout) உள்ளது. டார்பிடோ என்பது நீருக்கடியில் சென்று தாக்கும் ஏவுகணையாகும். ஈரானிடம் உள்ள ஹவுட் டார்பிடோ மணிக்கு 360 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

சாதாரண டார்பிடோக்களை விட பல மடங்கு வேகமாக நீருக்கடியில் பயணிக்கக்கூடியது. இதையும் பிற கடற்படைகளால் எளிதில் கண்டுபிடித்து இடைமறிக்க முடியாது.

இது அமெரிக்காவுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது.

‛ஃபத்தா’ ஏவுகணை al fattah missile iran

மேலும் ஈரானிடம் ‘ஃபத்தா’ எனப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உள்ளது.

இந்த ஏவுகணை வான்பாதுகாப்பு அமைப்பையும் தாண்டி தாக்கும் தன்மை கொண்டது. இதுதவிர ஈரான் வசம் நவீன ட்ரோன்கள் உள்ளன. தற்கொலை ட்ரோன்கள் என்று அழைக்கப்படும்

‘ஷாஹித்'(Shahid), ‘அபாபில்'( Ababil) போன்ற ட்ரோன்கள் உள்ளன. இந்த ட்ரோன்கள் மற்றும் அதிவேக படகுகளை கொண்டு ஒரே நேரத்தில் ஈரானால், அமெரிக்காவின் போர்க்கப்பல்களை தாக்க முடியும்.

 

Share.
Leave A Reply