நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று வெளிப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளி க்கும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் 54,285 ரூபா கொடுப்பனவாக வழங்கப் படுகிறது. மாதாந்த உபசரிப்புக் கொடுப்பனவாக 1,000 ரூபா செலுத்தப்படு கிறது.

மாதாந்த சாரதிக் கொடுப்ப னவாக 3,500 ரூபா வழங்கப்படுவதுடன், பொதுமக்கள்
பாதுகாப்பு மற்றும் பா ராளுமன்ற விவகார அமைச்சின் ஊடாக சாரதி ஒருவரைப் பெற்றுக்கொண்டால், குறித்த உறுப்பினருக்கு சாரதிக் கொடுப்பனவு வழங் கப்பட மாட்டாது.

தொலை பேசிக் கொடுப்பனவாக 50,000 ரூபாவும், போக் குவரத்துக் கொடுப்பனவாக 15,000 ரூபாவும், அலுவலகக் கொடுப்பனவு ஒரு இலட்சம் ரூபாவாகும், அத்துடன் கூட்டங்களுக் கான கொடுப்பனவாக நாளொன்றுக்கு 2,500 ரூபா செலுத்தப்படுகின்றது.

நாடாளுமன்ற அமர்வுக ளில் கலந்துகொள்வதற்காக நாளொன்றுக்கு 2,500 ரூபாவும், குழுக்கூட்டக் கொடு ப்பனவாக நாளொன் றுக்கு 2,500 ரூபாவும், பாராளுமன்ற அமர்வுகள் இல்லாத நாட்களில் நடை பெறும் குழுக்கூட்டங்க ளுக்காக நாளொன்றுக்கு 2,500 ரூபா வழங்கப் படும்.

மேலும், ஒவ்வொரு பா ராளுமன்ற உறுப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு உள்ள தூரத்தை அடிப்படையாகக் கொண்டும், தேசியப் பட்டி யல் உறுப்பினர்க ளுக்கு 419.76 லீற்றர் டீசலை அடிப்படையாகக் கொண்டும், ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதியன்று சந்தையில் உள்ள ஒரு லீற்றர் டீசலின் அங்கீகரிக்கப்பட்ட விலைக்கு அமைய எரிபொருள் கொடுப்பனவு வழங்கப் படுவதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

படிகள் அனைத்து அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள்
அமர்வுப் படி ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்திற்கும் சமுகமளிப்பதற்காக ரூ. 2,500/=.
குழுப் படி அமர்வு இல்லாத தினங்களில் குழு நடைபெறும்போது ஒவ்வொரு குழுக் கூட்டத்திற்கும் சமுகமளிப்பதற்காக ரூ. 2,500/=. (அமர்வு தினங்களில் நடைபெறும் குழுக்கூட்டத்திற்கு சமுகமளிப்பதற்கு படியெதுவும் செலுத்தப்படுவதில்லை.)
அலுவலகப் படி அலுவலகமொன்றைப் பராமரிப்பதற்கு ரூ. 100,000/= வழங்கப்படுகின்றது.

 

படிகள் கௌரவ அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கௌரவ உறுப்பினர்கள்
உறுப்பினர்களின் படி பாராளுமன்றத்தால் செலுத்தப்படுவதில்லை ரூ. 54,285.00
கேளிக்கைப் படி ரூ. 1,000/=
ஓட்டுநர்களின் படி ரூ. 3,500.00
(அரசாங்கத்தால் அவருக்கு ஓட்டுநரொருவர் வழங்கப்படாவிடின் மாத்திரமே கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓட்டுநர்களின் படி செலுத்தப்படுகின்றது)
எரிபொருள் படி பாராளுமன்றத்திலிருந்து ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்ட தேர்தல் மாவட்டத்திற்கான தூரம் மற்றும் ஒவ்வொரு மாதத்தினதும் முதலாவது தினத்தில் 1 லீற்றர் டீசலின் அங்கீகரிக்கப்பட்ட சந்தை விலை ஆகியவற்றின் அடிப்படையில் எரிபொருள் படிகள் செலுத்தப்படுகின்றன.(உ+ம்: கொழும்பு 283.94 லீற்றர்கள், கம்பஹா மற்றும் களுத்துறை 355.58 லீற்றர்கள்)
தொலைபேசிப் படி நிலையான இணைப்பு மற்றும் கையடக்கத் தொலைபேசிக்காக மாதாந்தம் ரூ. 50,000.00 வழங்கப்படும். (தொலைபேசி விலைப்பட்டியல்களுக்கான கொடுப்பனவுகளோ அல்லது மீளளிப்புகளோ இல்லை)
தனிப்பட்ட பணியாட்டொகுதியினருக்கான போக்குவரத்துப் படி அலுவலகத்தின் 04 தனிப்பட்ட பணியாட்டொகுதி உறுப்பினர்களின் போக்குவரத்து செலவுகளுக்காக மாதாந்தம் ரூ. 10,000/= செலுத்தப்படுகின்றது (ஒவ்வொருவருக்கும் ரூ. 2,500/= வீதம்)
இலவச தபாற்கட்டண வசதிகள் ரூ. 350,000/= பெறுமதியான முத்திரைகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் வருடாந்தம் வழங்கப்படுகின்றன. (காலாண்டிற்கு ரூ. 87,500/=)
Share.
Leave A Reply