உலகம் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கிறது. சில மாபெரும் சக்திகள் எழுச்சியடைகின்றன மற்றவை மறைந்துபோகின்றன. உண்மையில், இன்று உள்ள பல நாடுகள் முந்தைய காலங்களில் இருந்ததில்லை.

மேலும் சில பழைய நாடுகள் இப்போது இல்லை. அப்படியான மிகவும் சுவாரஸ்யமான நாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

யுகோஸ்லாவியா

யுகோஸ்லாவியா 1918- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, கராஜார்ஜெவிக் இராஜ குடும்பம் நாட்டை வழிநடத்தியது. 1941-ல் ஜெர்மனி உள்ளிட்ட பல சட்டசபை மற்றும் ராணுவ மோதல்களை யுகோஸ்லாவியா சமாளித்தது. இதையடுத்து, மதம் மற்றும் இனம் சார்த்த காரணங்களால் நாடு பிரிய ஆரம்பித்தது.

வெஸ்ட் புளோரிடா

1810-ல் அமெரிக்கர்கள் பேட்டன் ரூஜ் கோட்டையை கைப்பற்றிய நிலையில் ஸ்பெயினியர்களிடமிருந்து கட்டுப்பாட்டை எடுத்தனர். இதனால் ரெபப்ளிக் ஆஃப் வெஸ்ட் புளோரிடா (Republic of West Florida) உருவானது. சில நாட்கலுக்கு பின்னர் இந்த குடியரசு நாடு அமெரிக்காவுடன் இணைந்தது. வெஸ்ட் புளோரிடா ஒரு மாதத்திற்கும் குறைவான காலம் தான் சுதந்திரமாக இருந்ததாக கூறப்படுகிறது.

வெர்மோண்ட்

1777-ல் பிரிட்டிஷ் பேரரசிலிருந்து சுதந்திரம் பெற்றவுடன் வெர்மோண்ட் நியூயார்க் காலனியிலிருந்து தனித்துவமாக்கும் அரசமைப்பை உருவாக்கியது.

பின்னர், கனடாவுடன் மீண்டும் பிரிட்டிஷ் பேரரசில் சேரும் வாய்ப்பு குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதே சமயம் அமெரிக்கா உடன் சேருவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில், வெர்மோண்ட் அமெரிக்காவின் 14-வது மாநிலமாக இணைந்தது.

திபெத்

14-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் திபெத் சுதந்திரமான நாடாக தான் இருந்தது.

1913-ல் திபெத் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. இது 1949 வரை நிலைத்தது. 1949-ல் சீனாவின் மக்கள் குடியரசு (People’s Republic of China) படை அந்த பகுதியில்நுழைத்து திபெத்தில் சீனாவின் அதிகாரத்தை அதிகாரபூர்வமாக நிறுவியது.

டெக்சாஸ்

19-ஆம் நூற்றாண்டில் டெக்சாஸ் மெக்சிகோவிலிருந்து சுதந்திரத்தை அறிவித்து, ரெபப்ளிக் ஆஃப் டெக்சாஸ் (Republic of Texas) ஆகியது.

1836-ல் மட்டுமே அமெரிக்கா இந்த சுதந்திரத்தை அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டது. இதையடுத்து, டெக்சாஸ் அமெரிக்கா உடன் சேருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. சில சட்ட மாற்றங்கள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு, 1845-ல் டெக்சாஸ் அமெரிக்காவின் 28-வது மாநிலமாக இணைந்தது.
International News

Share.
Leave A Reply