“இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் அரசு விதித்த கூடுதல் இறக்குதி வரிகள் செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இதன் மூலம் இந்தியா – அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தமும் சிக்கலை சந்தித்துள்ளது. தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான 9 பேர் அடங்கிய அமர்வு, வரி விதிப்பு தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அமெரிக்க நாடாளுமன்றத்தை அதிபரால் மீற முடியாது.
1974ஆம் ஆண்டு வர்த்தக சட்டத்தின் கீழ் அவசர சூழலை பயன்படுத்தி இந்த வரிகளை விதிக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை என்று தெரிவித்தது.
மேலும், வரி விதிப்பானது தேசிய பாதுகாப்பு தொடர்பான அவசர நடவடிக்கை என்ற டிரம்ப் தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், நீதிபதிகளைக் கடுமையாக விமர்சித்தார்.
டிரம்ப் பேசியதாவது, நாட்டிற்கு நன்மையான முடிவை எடுக்க துணிச்சல் இல்லாத இந்த நீதிபதிகள் ஒரு அவமானம். அவர்கள் தங்களின் குடும்பத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டனர்.
8/ The Systematic Abuse
Trump described the broken system:
“If any one of the nearly 700 federal judges disagreed with the policy of a duly elected president, he or she could block that policy from going into effect for many years.”
Democracy vs. judicial tyranny. pic.twitter.com/Cy9xnZK8Kh
— Karl Mehta (@karlmehta) June 28, 2025
தீர்ப்பளித்த நீதிபதிகள் பெயரளிவில் தான் குடியரசுவாதிகள், ஆனால் தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியினரின் வளர்ப்பு நாய்களாக மாறிவிட்டனர்.
அவர்களுக்கு தேசப்பற்றோ, அரசியலமைப்பின் மீது விசுவாசமோ இல்லை. நான் கோடிக்கணக்கான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றேன்.
ஆனால் இந்த நீதிபதிகள் முட்டாள்கள். அவர்கள் அந்நிய சக்திகளின் விருப்பங்களுக்கு கட்டுப்படுகிறார்கள்.
அதேநேரம் ஒன்பது பேர் கொண்ட அமர்வில் எனது கொள்கைக்கு ஆதரவாக நின்ற நீதிபதிகள் தாமஸ், அலிட்டோ மற்றும் கவனோ ஆகியோரை வலிமையும் துணிச்சலும் மிக்கவர்கள்\” என்று தெரிவித்தார்.
June 28, 2025 தீர்ப்பளித்த நீதிபதிகள் பலர் முன்னர் டிரம்ப் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டிருந்ததும் அவர்கள் தற்போது டிரம்ப்புக்கு எதிராக தீர்பளித்துள்ளதே டிரம்ப் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது.
இதற்கிடையே உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தாலும், தான் விதித்த வரிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று டிரம்ப் பிடிவாதமாகக் கூறியுள்ளார்.
அதேநேரம் அனைத்து நாடுகளுக்கும் தாற்காலிகளமாக 10 சதவீத கூடுதல் வரியையும் விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். “,

