– சரணடைந்த 600 இற்கு மேற்பட்ட பொலீசாரை விடுதலைப்புலிகள் படுகொலை செய்தனர். இது இலங்கையின் நவீன வரலாற்றில் ஒரே நாளில் நிகழ்ந்த இழப்பு ஆகும்.

– ஜே வி பி இனரது எதிர்ப் புரட்சி நடவடிக்கைகள் 1989 இன் இறுதிப் பகுதியில் தோற்கடிக்கப்பட்டன.

– புலிகள் மேற்கொண்ட ஆயுத ஒப்படைப்பு

கடந்த பகுதியில் இந்திய சமாதானப் படையினர் தமிழ்ப் பிரதேசங்களில் நிலைப்படுத்தப்பட்ட காரணத்தால் முரண்பாடுகள் புதிய பரிமாணத்தினைப் பெற்றதாகப் பார்த்தோம்.

அதாவது இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்பு முயற்சிகளுக்கு அமைவாக சென்றதைப் பாரத்தோம். அதாவது சமாதானத்தை தோற்றிவிப்பதாக வருவிக்கப்பட்ட இந்தியப் படையினர் தற்போது புதிய பரிமாணத்தை நோக்கிச் சென்றுள்ள நிலமைகளைப் பார்த்தோம்.

இந்திய சமாதானப்படை – விடுதலைப் புலிகள் முறுகல் நிலை

இந்திய சமாதானப் படையினர் வடக்கு – கிழக்கில் நிலை கொண்ட அதே வேளை இலங்கை ராணுவத்தினருக்குப் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

அதாவது ராணுவத்தினர் குறிப்பிட்ட பிராந்தியத்திலுள்ள முகாம்களுக்குள் மட்டுமே முடக்கப்பட்டனர். இது ராணுவத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்காவிடினும் அரசாங்கத்தின் உத்தரவு என்பதால் அதை மதிக்கும் கட்டாய நிலை ஏற்பட்டது.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையப்பட்டு அவை சமாதானப் படையினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

பதிலாக சமாதானப் படையினர் வடக்கு, கிழக்கிற்கான அதிகாரப் பரவலாக்க அடிப்படையிலான அரசியல் தீர்வை அடைவதற்கான புறசூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இதன் விளைவாக 13 வது அரசியல் யாப்பு திருத்தம் மூலமான மாகாணசபைகள் தோற்றம் பெற்றன. இந்த ஒப்பந்தத்தினை பிரபாகரன் ஏற்றுக் கொள்வதை உறுதி செய்யூம் நோக்கில் அவர் இந்தியாவில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டார்.

வன்முறையும், இரத்த வெறியும் பிடித்த பிரபாகரன் ஆயூதங்களை ஒப்படைப்பதில் தயக்கம் காட்டினார்.

ஆயூதங்களை ஒப்படைக்கும் நிகழ்வின் போது ஏ கே 47 போன்ற நவீன ரக ஆயூதங்களை மறைத்து பயன்படுத்த முடியாத. உள்ளுரில் தயாரிக்கப்பட்ட பழமையான ஆயூதங்கள் சிலவற்றையே அங்கு ஒப்படைத்தார். இந்த நிகழ்வுகளின் பின்னரே பிரபாகரன் இலங்கை திரும்ப அனுமதிக்கப்பட்டார்.

இவ் வேளையில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கடல் வழியாக ஆயுதங்களைக் கடத்துவதை இந்திய ராணுவம் கண்டு பிடித்தது.

இதன் விளைவாக அவர்களில் சிலர் இந்தியக் கடற்படைகளினால் தடுத்து வைக்கப்பட்டனர். இவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரபாகரன் கோரிக்கை விடுத்தார்

இவை தாமதமானதால் தடுத்து வைக்கப்பட்டவர்களில் சிலர் சைனைட் அருந்தி தம் உயிர்களை மாய்த்துக் கொண்டனர்.

இதனால் கோபமடைந்த பிரபாகரன் யாழ்ப்பாணத்திலிருந்த இந்தியப் படைகள் மீது தாக்குதல் தொடுத்தார்.

புலிகள் மேற்கொண்ட ஆயுத ஒப்படைப்பு

இவை இம் முரண்பாடுகளின் இன்னொரு பரிமாணத்தை நோக்கிச் சென்றன. அவ் வேளையில் விடுதலைப் புலிகளின் பலம் கிட்டத்தட்ட 2000 பேர் எனவும் அவர்களில் பாதிப்பேர் யாழ். பிராந்தியத்திற்குள் செயற்பட்டனர்.

இவற்றிற்குப் பதிலிடை கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் யாழ். குடாநாட்டினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாரிய தாக்குதலை ஆரம்பித்தது.

இத் தாக்குதல்களில் விமானங்கள், டாங்கிகள் பயன்படுத்தப்பட்டதால் அவை மிகவும் செலவினம் மிகுந்ததாக மாறின. இதனால் யாழ்ப்பாண தாக்குதலில் மட்டும் அண்ணளவாக 1000 படையினர் உயிரிழந்தனர்.

இம் முரண்பாடுகள் வடக்கிலும், கிழக்கிலுமாக சுமார் இரண்டு வருடங்கள் நீடித்தது. 1989ம் ஆண்டு இந்திய சமாதானப்படையினர் விலகிச் சென்ற போது ஒட்டு மொத்தத்தில் சுமார் 2000 வீரர்கள் இழக்கப்பட்டனர்.

இவர்கள் மிக நவீன ரக ஆயூதங்களைப் பயன்படுத்திய போதிலும் விடுதலைப்புலிகளை தீர்மானகரமான விதத்தில் தோற்கடிக்க முடியவில்லை.

இதன் விளைவாக இந்திய – இலங்கை உறவுகள் மிக மோசமான அளவிற்குப் பின் தள்ளப்பட்டன. இப் போரின் இறுதிக் கால கட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மறைமுகமாக விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இதனால் இந்தியப் படைகள் தாம் ஒரு தெளிவான இலக்கோ, முடிவோ தெரியாத நிலையிலிருப்பதை உணர்ந்தனர்.

இக் காலகட்டத்தில் இலங்கை ராணுவம் ஒதுக்குப் புறமாகவே வெறும் பார்வையாளர் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அவ்வப்போது இலங்கை இ இந்திய ராணுவத்தினர் பொது வைபவங்களில் அனுபவங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

The Indian Peace keeping Forces returned from Sri Lanka

இந்திய சமாதானப்படையினர் இலங்கையில் தரித்திருந்த வேளையில் இலங்கை அரசிற்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன் விளைவாக முதலாவது ஆரம்ப பேச்சுவார்த்தைகளும், போர் நிறுத்தமும் ஏற்பட்டது. இருப்பினும் இவை அர்த்தமுள்ள விதத்தில் முன்னேற்றம் பெறவில்லை.

விடுதலைப்புலிகள் சந்தர்ப்பவாத செயற்பாட்டாளர்களாகவும், சமாதானத்தில் நம்பிக்கை அற்றவர்களாகவும் காணப்பட்டனர்.

இதன் விளைவாக தமது படைகளை இலங்கையில் வைத்திருப்பது அர்த்தமற்றது எனவும், அது எதிர் விளைவுகளைத் தோற்றுவிக்கலாம் என்பதால் தமது படைகளை பல இழப்புகளின் பின்னர் மீளப் பெற்றனர்.

இக் கால வேளையில் சரத் பொன்சேகா கிழக்கு மாகாணத்தில் ஒரு பற்றாலியனின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டார்.

இதன் விளைவாக விடுதலைப்புலிகள் மீளவும் தமது பலமான இடங்களுக்குத் திரும்பினர். அதே வேளை தெற்கில் ஜே வி பி எனப்படும் எதிர்க் கிளர்ச்சி மார்க்ஸிஸ்ட் – லெனினிஸ்ட் இயக்கம் புதிய எதிர்ப்பு நிலமைகளைத் தோற்றுவித்தது.

இதுவரை வெறும் பார்வையாளராகச் செயற்பட்ட ராணுவம் தற்போது எதிர்ப்புரட்சி போராட்டங்களுக்கு தெற்கில் முகம் கொடுக்க நேரிட்டது.

ஜே வி பி இனரது எதிர்ப் புரட்சி நடவடிக்கைகள் 1989 இன் இறுதிப் பகுதியில் தோற்கடிக்கப்பட்டன.

இதன் விளைவாக ராணுவம் சிறிது கால அமைதியை அனுபவித்தது. வடக்கு- கிழக்கில் அவ் வேளையில் போர் நிறுத்தம் செயற்பாட்டில் இருந்தது.

இந்த அமைதியும் 1990 இன் நடுப் பகுதியில் சிதைந்தது. சிவில் குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் பல விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

இதன் காரணமாக, கிழக்கு மாகாணத்தில் பொலீஸ் மற்றும் ராணுவ நிலைகள் மீது தாக்குதலைத் தொடுத்தார்கள்.

இத் தாக்குதலைத் தடுக்குமாறு அரசாங்கம் ராணுவத்திற்கு உத்தரவிட்டது. அரசின் தவறான கணக்கின் காரணமாக, அங்கு விடுதலைப்புலிகள் அங்குள்ள பொலீஸ் நிலையங்களைச் சுற்றி வழைத்திருந்த நிலையில். ஜனாதிபதி அப் பொலீஸ் நிலையங்களில் தரித்திருந்த பொலீசாரை பின்னர் பேசி விடுவிக்கலாம் எனக் கருதி சரணடையுமாறு பணித்தார்.

ஆனால் சரணடைந்த 600 இற்கு மேற்பட்ட பொலீசாரை விடுதலைப்புலிகள் படுகொலை செய்தனர். இது இலங்கையின் நவீன வரலாற்றில் ஒரே நாளில் நிகழ்ந்த இழப்பு ஆகும்.

இவ்வாறான பாரிய இழப்பிற்குப் பின்னரும் ராணுவம் பல ராணுவ மற்றும் பொலீஸ் நிலையங்களை மீளப் பெற்றது.

இந்த வெற்றியின் முன்னணியில் சரத் பொன்சேகா தலைமையிலான சிங்க படைப் பிரிவினரே காரணமாக அமைந்தனர்.

இதன் விளைவாக போர் நிறுத்த ஏற்பாடு முற்றாக முறிந்தது. இதுவே ஈழப் போர் 2 இற்குக் காரணமாக அமைந்தது. இப் போர் என்பது உள்ளுர் பயங்கரவாதிகளுக்கு எதிரானது என்பதற்கு அப்பால் பிராந்திய அரசுகளையூம் உள்ளிளுக்கும் வகையில் மாற்றம் பெற்றது.

அடுத்த பகுதியில் ஈழப் போர் 2 இன் பரிமாணங்களைப் பார்க்கலாம்.

….

தொடரும்……….

(இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்.’: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம் (“Army Commander’s Promise to the Nation – I Shall Not Leave This War Behind to the Next Army Commander”)‘ என்ற நூலின் தமிழ் மொழிச் சுருக்கம்

மொழிபெயர்ப்பு : வி. சிவலிங்கம்;

வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்க! ‘இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்.’:சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம்’ ! -பகுதி – 3)

 

Share.
Leave A Reply