அம்மாவிற்கும் மகளுக்கும் இடையே வெறும் 16 வயது மட்டுமே வித்தியாசம் என்பது இன்றும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு உண்மையாகும்.

பொதுவாக ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையே 3 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

அதே சமயம் பெண்ணின் திருமண வயது 21. இதை பலரும் கடைபிடித்தாலும், இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை திருமணம் ஆங்காங்கே நடந்து வருகிறது. ஆனால் 80-90ஸ் காலக்கட்டத்தில் பெண்ணுக்கு 15-16 வயதில் திருமணம் செய்து வைப்பது நடைமுறையில் இருந்த்து.

அந்த வகையில், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த இரு நடிகைகளின் வயது வித்தியாசம் 16 வயது. அவர்கள் இருவரும் தாய் மகள். பாலிவுட் திரையுலகில் நட்சத்திரத் தாய்களையும் அவர்களது பிள்ளைகளையும் பற்றிப் பேசும்போதெல்லாம், ரசிகர்கள் வியப்புடன் கவனிக்கும் ஒரு விஷயம் டிம்பிள் கபாடியா மற்றும் அவரது மகள் ட்விங்கிள் கண்ணா இடையிலான வயது வித்தியாசம் தான்.

 

அம்மாவிற்கும் மகளுக்கும் இடையே வெறும் 16 வயது மட்டுமே வித்தியாசம் என்பது இன்றும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு உண்மையாகும்.

டிம்பிள் கபாடியா தனது 15-வது வயதில் ‘பாபி’ (Bobby) திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே, அவர் அப்போதைய சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கண்ணாவைத் திருமணம் செய்து கொண்டார்.

தனது திரைப்பயணத்தின் தொடக்கத்திலேயே அவர் தாயானதே, இந்த மிகக் குறைந்த வயது வித்தியாசத்திற்கு முக்கியக் காரணமாகும்.

தற்போது டிம்பிள் கபாடியாவிற்கு 68 வயதும், மகள் ட்விங்கிள் கண்ணாவிற்கு 52 வயதும் ஆகிறது. வயது வித்தியாசத்தைக் காட்டிலும், இவர்கள் இருவரும் பொது மேடைகளில் தோன்றும் போது இன்றும் சகோதரிகளைப் போலவே காட்சியளிக்கின்றனர் என்பதே ரசிகர்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.

இவர்களின் லுக் மற்றும் ஸ்டைலைப் பார்க்கும் போது, இவர்கள் இருவரும் தாய் – மகள் என்று நம்புவதற்கே கடினமாக இருப்பதாகப் பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வயதானாலும் டிம்பிள் கபாடியா இன்றும் திரையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். சமீபத்தில் வெளியான ‘பதான்’ மற்றும் ஹாலிவுட் படமான ‘டெனெட்’ (Tenet) போன்றவற்றில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மறுபுறம், ட்விங்கிள் கண்ணா நடிப்பிலிருந்து விலகி இருந்தாலும், ஒரு சிறந்த எழுத்தாளராகவும் (Author) மற்றும் தயாரிப்பாளராகவும் தனது முத்திரையைப் பதித்து வருகிறார்.

1986-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக விக்ரம் படத்தில் டிம்பிள் கபாடியா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

ட்விங்கிள் கண்ணாவின் கணவர் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷைகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், டிம்பிள் கபாடியாவின் இளைய மகள், ரான்கி கண்ணா பிரஷாந்த் நடிப்பில் வெளியான மஜ்னு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

Share.
Leave A Reply