“கொழும்பு:டி20 உலகக் கோப்பை தொடரின் 46-வது லீக் ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரின் பிரேமதாசா மைதானத்தில் நடந்தது.
இதில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது.
கேப்டன் மிட்செல் சான்ட்னர் 26 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ரச்சின் ரவீந்திரா 32 ரன்னும், மெக்கன்சி 31 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை சார்பில் தீட்சனா, சமீரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கமிந்து மெண்டிஸ் 31 ரன்னும், வெல்லாலகே 29 ரன்னும் எடுத்தனர்.
இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.நியூசிலாந்து சார்பில் ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டும், மேட் ஹென்றி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.”,

