“இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை தான் நிறுத்தாவிட்டால், 35 மில்லியன் மக்கள் இறந்திருப்பார்கள் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
நேற்று 100 நிமிடங்களுக்கு மேல் ஆற்றிய யூனியன் உரையில், மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் போரை அவர் நிறுத்தியாக தெரிவித்தார்.
“நான் பதவியேற்ற முதல் 10 மாதங்களில், எட்டுப் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன்… இதில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான மோதலும் அடங்கும்,
அது ஒருவேளை அணு ஆயுதப் போராகக்கூட மாறியிருக்கக்கூடும். எனது தலையீடு மட்டும் இல்லையென்றால், 3.5 கோடி (35 மில்லியன்) மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறினார்.’ என தெரிவித்தார்.
2026 100வது முறை…கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இந்தியா-பாகிஸ்தான் போரை தான்தான் முடிவுக்கு கொண்டுவந்ததாக ட்ரம்ப் தெரிவித்து வருகிறார்.
தற்போது வரை சுமார் 100 முறை இதே கருத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் ட்ரம்பின் இந்தக் கூற்றுக்கு இந்தியா தொடர்ந்து மறுப்புதெரிவித்து வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் போர் மட்டுமின்றி, கம்போடியா – தாய்லாந்து, கொசோவோ -செர்பியா, இஸ்ரேல் – ஈரான், எகிப்து – எத்தியோப்பியா, ஆர்மீனியா – அஜர்பைஜான், காங்கோ – ருவாண்டா, மற்றும் காசா போர் ஆகியவற்றையும் நிறுத்தியதாக கூறினார்.
தற்போது காசா போர் மிக குறைந்த அளவிலேயே நடந்துவருவதாகவும் தெரிவித்தார்.ஒரு கட்டத்தில், சில ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிரம்பின் உரையில் குறுக்கிட்டனர்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக அவர், ‘இது வேடிக்கையாக இல்லையா? இவர்கள் நோயுற்ற (மனநிலை பாதிக்கப்பட்ட) மனிதர்கள்’ என்று கூறினார்”,
#WATCH | Addressing the 2026 State of the Union, United States President Donald Trump says, “… In my first 10 months, I ended eight wars… Pakistan and India would have had a nuclear war. 35 million people said the Prime Minister of Pakistan would have died if it were not for… pic.twitter.com/GnrgJKtjID
— ANI (@ANI) February 25, 2026

