முன்னாள் லிபிய தலைவர் கேணல் முஅம்மர் கடா­பியின் மகன்­மார்களில் இரண்­டா­ம­வரும் மற்றும் மிக முக்­கி­ய­மா­ன­வ­ரு­மான சைஃப் அல் –­ இஸ்லாம் கடாபி கடந்த 3ம் திகதி லிபிய தலை­நகர் திரிப்­போ­லிக்கு தென்­மேற்கே 85 மைல் தொலைவில் அமைந்­துள்ள ஜின்டான் நகரில் படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

அவர் தங்­கி­யி­ருந்த வீட்டைத் தாக்­கிய “முக­மூடி அணிந்த நான்கு நபர்­களால்” அவர் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

சில பிரி­வி­னரால் ஒரு காலத்தில் லிபி­யாவில் கடா­பியின் அடுத்த அர­சியல் வாரி­சாக கரு­தப்­பட்ட 53 வய­தான சைஃப் அல்–­ (Saif al-Islam Gaddafi,) இஸ்­லாமின் இறுதிச் சடங்­கிற்­காக, மேற்கு லிபிய நக­ர­மான பானி­வா­லிட்டில் ஆயி­ரக்­கணக்­கான மக்கள் கூடினர்.

2011 அரபு வசந்த எழுச்­சிக்குப் பின் லிபி­யாவைப் பிள­வு­ப­டுத்தி அதன் ஸ்திர­மின்­மைக்கு வழி­வ­குத்த பிள­வு­களை இங்கு கூடிய சனத்­திரள் கோடிட்டுக் காட்­டு­வ­தாக அமைந்­தது.

மக்கள் ஒரு காலத்தில் அமைதி நல்­லி­ணக்கம் மற்றும் செழிப்­புடன் வாழ்ந்த, இந்த வள­மான நாட்டை சைஃப் அல்-­–­ ­ (Saif al-Islam Gaddafi,) இஸ்­லாமின் கொலை மேலும் சீர்­கு­லைக்கும்.

Khalifa Haftar

1969ல ஆம் ஆண்டு முஅம்மர் கடா­பி­யுடன் இணைந்து மன்னர் இத்­ரிஸை ஆட்­சியில் இருந்து தூக்­கி­யெ­றிந்து அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­ய­வரும், பின்னர் கடா­பி­யுடன் கருத்து வேறு­பாடு கொண்டு அமெ­ரிக்­காவில் தஞ்சம் புகுந்து, அங்கு 20 ஆண்­டுகள் வாழ்ந்­த­வ­ரு­மான கடா­பியின் முன்னாள் சகாவும் இன்று லிபி­யாவின் யுத்த பிர­பு­வு­மாக உள்ள கலீஃபா ஹாஃப்டார் (Khalifa Haftar) தான் இந்தக் கொலையால் பய­ன­டையும் முக்­கிய நப­ராக இருப்பார்.

வர­வி­ருக்கும் தேர்­தல்­களில் போட்­டி­யிடத் திட்­ட­மிட்­டுள்ள நேரத்தில் நாட்டை மீண்டும் ஒரு வள­மான தேச­மாக மேம்­ப­டுத்­து­வ­தாக உறு­தி­ய­ளித்து, மக்கள் மத்­தியில் மிகவும் பிர­ப­ல­மாகி இருந்த நிலையில் சைஃப்பின் மரணம் சம்­ப­வித்­துள்­ளது.

லிபி­யாவில் அவர் ஒரு­போதும் உத்­தி­யோ­க­பூர்வ பதவி நிலை­களில் இருந்­த­தில்லை. ஆனால், 2000 முதல் 2011 வரை அவ­ரது தந்­தைக்கு அடுத்­த­ப­டி­யாக இரண்­டா­வது நிலையில் அவர் கரு­தப்­பட்டார்.

முஅம்மர் கடாபி

அவரின் தந்தை முஅம்மர் கடாபி அமெ­ரிக்­க-­பிரான்ஸ் மற்றும் இஸ்­ரேலின் ஆத­ர­வுடன் லிபிய எதிர்ப்புப் படை­களால் வேட்­டை­யா­டப்­பட்டு சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. அத்­தோடு கடா­பியின் பல தசாப்த கால ஆட்­சியும் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டது.

Saif al-Islam Gadhafi

லண்டன் பொரு­ளா­தார கல்­லூ­ரியில் படித்­த­வரும், சர­ள­மாக ஆங்­கிலம் பேசு­ப­வ­ரு­மான சைஃப் அல்இ–­ ஸ்லாம், (Saif al-Islam Gadhafi) ஒரு முற்­போக்கு சிந்­தனை கொண்ட கொள்கை போக்கை முன்­வைத்தார். அத்­தோடு 2000 ஆம் ஆண்­டு­களின் ஆரம்பம் முதல் மேற்­கத்­திய நாடு­க­ளுடன் லிபி­யாவின் உற­வு­களை சீர் செய்­வ­தற்­கான முயற்­சி­களில் முக்­கிய பங்கு வகித்து வந்தார்.

லிபியா தனது பேர­ழிவு ஆயு­தங்­களை கைவி­டு­வது, மற்றும் 1988 ஆம் ஆண்டில் இடம்­பெற்ற ஸ்காட்­லாந்தின் ‘லொக்­கர்பி பான் ஆம்’ விமான குண்­டு­வெ­டிப்பில் கொல்­லப்­பட்ட 103 பேரின் குடும்­பங்­க­ளுக்கு இழப்­பீடு வழங்­கு­வது குறித்த பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு அவர் தலைமை தாங்­கினார்.

அவர் அர­சியல் அரங்கில் ஒரு சீர்­தி­ருத்­த­வா­தி­யா­கவும் தன்னை நிலை­நி­றுத்திக் கொண்டார். அர­சி­ய­ல­மைப்­புக்கும் மனித உரி­மை­க­ளுக்கும் மதிப்­ப­ளிக்­கு­மாறு அவர் அழைப்பு விடுத்தார். உல­க­ளா­விய ரீதியில் நிர்­வா­கங்­களை சீர்­தி­ருத்­து­வதில் சிவில் சமூ­கத்தின் பங்கு குறித்து அவர் ஆய்வுக் கட்­டுரை ஒன்­றையும் வெளி­யிட்­டி­ருந்தார்.

அவர் எந்­த­வி­த­மான உத்­தி­யோ­க­பூர்வ பத­வி­க­ளையும் வகிக்­க­வில்லை, என்­றாலும் கூட சைஃப் அல்-­ –­ இஸ்லாம் (Saif al-Islam Gadhafi)  ஒரு காலத்தில் தனது தந்தை முஅம்மர் கடா­பிக்குப் பிறகு லிபி­யாவில் மிகவும் சக்­தி­வாய்ந்த நப­ராக கரு­தப்­பட்டார்.

2011 ஆம் ஆண்டில் கடா­பியின் நீண்ட ஆட்­சிக்கு எதி­ராக ஒரு கிளர்ச்சி வெடித்த போது சைஃப் அல்-­–­இஸ்லாம் (Saif al-Islam Gadhafi) உட­ன­டி­யாக தனது பல்­வேறு வித­மான நட்­பு­க­ளை­விட, குடும்ப மற்றும் குல விசு­வா­சத்தைத் தெரிவு செய்து கிளர்ச்­சி­யா­ளர்கள் மீது மிரு­கத்­த­ன­மான ஒடுக்­கு­மு­றையின் சிற்­பி­யாக மாறினார். கிளர்ச்­சியில் ஈடு­பட்­ட­வர்­களை அவர் எலிகள் என்று வர்­ணித்தார்.

கிளர்ச்­சியின் போது ரோய்ட்டர்ஸ் செய்தி சேவை­யிடம் பேசிய அவர் “நாங்கள் இங்கே லிபி­யாவில் போரா­டு­கின்றோம் இங்கே லிபி­யாவில் இறக்­கின்றோம்” என்றார்.

இரத்த ஆறுகள் ஓடும் என்றும் அர­சாங்கம் கடைசி ஆண், பெண் மற்றும் புல்லட் வரை போராடும் என்றும் அவர் எச்­ச­ரித்தார்.

கிளர்ச்­சி­யா­ளர்கள் தலை­நகர் திரிப்­போ­லியைக் கைப்­பற்­றிய பிறகு சைஃப் அல்-­–­இஸ்லாம் ஒரு நாடோடி பழங்­கு­டி­யி­னரைப் போல உடை­ய­ணிந்து அண்டை நாடான நைஜ­ருக்கு தப்பிச் செல்ல முயன்றார்.

அப்­போது அபு பக்கர் சாதிக் பிரிகேட் என்ற பிரிவின் போரா­ளிகள் அவரை ஒரு பாலை­வன சாலையில் அடை­யாளம் கண்டு பிடித்­தனர். அவ­ரது தந்தை சந்­தே­கத்­திற்­கி­ட­மான பிரெஞ்சு முக­வர்­களால் சுட்டுக் கொல்­லப்­பட்ட ஒரு மாதத்­திற்குப் பிறகு அவரை மேற்­கத்­திய நக­ர­மான ஜின்­டா­னுக்கு அனுப்பி வைத்­தனர்.

அடுத்த ஆறு ஆண்­டுகள் அவர் ஜின்­டானில் காவலில் வைக்­கப்­பட்­டி­ருந்தார். இந்த தடுப்புக் காவல் வாழ்வு கடா­பியின் கீழ் அவர் வாழ்ந்த கவர்ச்­சி­யான வாழ்க்­கை­யி­லி­ருந்து வெகு தொலைவில் இருந்­தது.

அந்த வாழ்க்­கையின் போது அவ­ரது செல்லப் பிரா­ணி­க­ளாக புலிகள் இருந்­தன. வேட்­டை­யாட பருந்­து­களைப் பயன்­ப­டுத்­தினார். மேலும், லண்டன் செல்லும் போதெல்லாம் பிரிட்டிஷ் உயர் மட்ட சமூ­கத்­துடன் தொடர்பில் இருந்தார்.

2015 ஆம் ஆண்டில் திரிப்­போ­லியில் உள்ள நீதி­மன்­றத்தால் சைஃப் அல்-­–­இஸ்லாமுக்கு போர்க்­குற்­றங்­க­ளுக்­காக மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அவரை துப்­பாக்கி அணியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. ஹேக்கில் உள்ள சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றமும் அவரைத் தேடி வந்­தது.

அது அவ­ருக்கு எதி­ராக “கொலை மற்றும் துன்­பு­றுத்­த­லுக்­காக” கைது பிடி­வி­றாந்து பிறப்­பித்­தது. 2017 ஆம் ஆண்டில் பொது மன்­னிப்புச் சட்­டத்தின் கீழ் போரா­ளி­களால் அவர் விடு­விக்­கப்­பட்ட பின்னர், தான் படு­கொலை செய்­யப்­ப­டு­வதைத் தவிர்ப்­ப­தற்­காக, சைஃப் ஜின்­டானில் பல ஆண்­டு­களை மறை­மு­க­மாக கழித்தார்.

இவற்றை எல்லாம் தாண்டி சர்­வ­தேச அளவில் புகழ்­பெற்ற நடு­நிலை பேச்­சு­வார்த்­தை­யாளர் மற்றும் செல்­வாக்கு செலுத்­து­ப­வ­ராக சைஃப் அல்-­–­இஸ்லாம் பல வெற்­றி­க­ளையும் முக்­கிய பாத்­தி­ரங்­க­ளையும் தன்­வசம் கொண்­டி­ருந்தார். அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் உள்­ளிட்ட மேற்­கத்­திய சக்­தி­க­ளுடன் அணு­சக்தி பேச்­சு­வார்த்­தை­களில் அவர் முக்­கிய பங்கு வகித்தார்.

மதச்­சார்­பற்ற ஒரு நாட்டு தீர்வின் மூலம் பலஸ்­தீ­ன-­-­–­ இஸ்­ரே­லிய மோத­லுக்கு நிரந்­தரத் தீர்வு காணும் “இஸ்­ராதீன்” உள்­ளிட்ட பல­யோ­ச­னைகள் அவ­ரிடம் இருந்­தன.

பிலிப்பைன்ஸ் அர­சாங்­கத்­திற்கும் மோரோ இஸ்­லா­மிய விடு­தலை முன்­ன­ணியின் தலை­வர்­க­ளுக்கும் இடை­யி­லான சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­க­ளையும் அவர் நடத்­தினார். இதன் விளை­வாக 2001 இல் அங்கு ஒரு சமா­தான ஒப்­பந்தம் கையெ­ழுத்­தா­னது.

2011 இல் அரபு வசந்­தத்தின் மூலம் ஏற்­பட்ட குழப்ப நிலை­யி­லி­ருந்து மீண்டு வர லிபியா இன்­னமும் போராடி வரு­கின்­றது.

 

 

தற்­போது லிபி­யாவில் திரி­போ­லியை தள­மாகக் கொண்ட பிர­தம மந்­திரி அப்­தல்­ஹமித் த்பீபாவின் ஐ. நா. ஆத­ரவு அர­சாங்­கத்­திற்கும், கிழக்கு லிபி­யாவில் ஆதிக்கம் செலுத்தும் இரா­ணுவத் தலை­வரும் சுய-­பா­ணி­யி­லான லிபிய தேசிய இரா­ணு­வத்தின் (எல்.என்.ஏ) தள­ப­தி­யு­மான கலீஃபா ஹாஃப்டார் (Khalifa Haftar )ஆத­ர­வுடன் இயங்கும் கிழக்கு நிர்­வா­கத்­திற்கும் இடையே பிளவு ஏற்­பட்­டுள்­ளது.

 

(Khalifa Haftar )

லிபி­யாவின் முக்­கிய எண்ணெய் உட்­கட்­ட­மைப்பை ஹாஃப்டார் (Khalifa Haftar )கட்­டுப்­ப­டுத்­து­கின்றார் மற்றும் ஓர் உண்­மை­யான ஆட்­சி­யா­ளரை போல் அவர் செயல்­ப­டு­கின்றார். திரிப்­போ­லியில் ஐ. நா. ஆத­ரவு அர­சாங்­கத்தை அவர் எதிர்க்­கின்றார் மற்றும் ஒரு கூட்­டணி மூலம் அதி­கா­ரத்தை தன்­வசம் தக்க வைத்­தி­ருக்­கின்றார்.

இஸ்­லா­மிய போக்­கிற்கு எதி­ரா­னவர் என்று கூறப்­படும் ஹாஃப்டார் லிபி­ய-­–­(Khalifa Haftar ) அமெ­ரிக்க இரட்டை பிரஜா உரிமை பெற்ற குடி மகன் ஆவார்.

ஆகஸ்ட் 2016 ல் ஐ.நா. பாது­காப்பு சபையின் ஆத­ரவைப் பெற்ற புதிய தேசிய உடன்­பாட்டு அரசை ஏற்றுக் கொள்ள அவர் மறுத்து விட்டார்.

புதிய தேசிய உடன்­பாட்டு அர­சுடன் ஒத்­து­ழைப்­பது கிழக்கு லிபி­யாவில் தனது செல்­வாக்கை முடி­வுக்குக் கொண்டு வர வழி­வ­குக்கும் என்று ஹாஃப்டார் அஞ்­சு­வ­தா­கவும், “லிபி­யாவில் சமா­தா­னத்­துக்கு தனிப் பெரும் தடை­யாக” அவர் கரு­தப்­ப­டலாம் என்றும் லிபியா சம்­பந்­த­மான விட­யங்­களில் நிபு­ணரும் சிரேஷ்ட ஆராய்ச்­சி­யா­ள­ரு­மான அலிசன் பார்­கெட்டர் என்­பவர் சுட்­டிக்­காட்டி உள்ளார்.

ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து போன்­றன தொடர்ந்தும் ஹாஃப்­டா­ருக்கு ஆத­ர­வ­ளிக்­கின்­றன. பிரிட்டிஷ் பிரெஞ்சு அமெ­ரிக்க மற்றும் ஐக்­கிய அரபு அமீ­ரக விமானப் படைகள் அவரின் படை­க­ளுக்கு உத­வி­யுள்­ள­தாக ‘மிட்ல் ஈஸ்ட் ஐ’ இணையம் தெரி­வித்­துள்­ளது.

2011 பெப்­ர­வ­ரியில் இடம்­பெற்ற அரபு வசந்த போராட்­டங்­களின் ஒரு பகு­தி­யாக, லிபி­யாவில் தொடங்­கிய போராட்­டங்கள் ஆயுத மோத­லாக விரி­வ­டைந்­தன.

இதன் விளை­வாக வன்­முறை கலந்த உள்­நாட்டு அதி­கா­ரத்­துக்­கான போராட்டம், நேட்டோ தலை­மையில் நீடித்த இரா­ணுவத் தலை­யீடு, அதைத் தொடர்ந்து அரச நிறு­வ­னங்­களின் சரிவு என்­ப­ன­வற்றின் மூலம் லிபியா அதள பாதா­ளத்தில் வீழ்ந்­தது.

இந்த மோதல் அதுவரை லிபியாவை முஅம்மர் கடாபியின் கீழ் ஒருங்கணைக்கப்பட்ட கட்டுக்கோப்பான ஒரு அரசு என்ற நிலையில் இருந்து, உள்நாட்டுப் போர் போராளிகள் ஆட்சி மாற்றங்கள் கடுமையான உள்கட்டமைப்பு சேதங்கள் என்பனவற்றால் பாதிக்கப்பட்ட துண்டு துண்டாக கூறுபோடப்பட்ட தேசமாக மாற்றியது.

லிபியாவை குண்டுவீசி அழித்து அதன் அப்பாவி மக்களை படுகொலை செய்த அமெரிக்கா லிபியாவின் செல்வத்தை சூறையாடியது.

அமெரிக்காவுக்கு ஹாஃப்டார் ஒரு பெரிய சொத்து. இவ்வாறுதான் சைஃப் அல் இஸ்லாமின் கொலை அமெரிக்கா, -ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் என்பன இணைந்து லிபிய செல்வத்தை தொடர்ந்து சூறையாடவும் அந்த நாட்டை கொந்தளிப்பில் வைத்திருக்கவும் வழியமைத்துள்ளது.

-லத்தீப் பாரூக்-

Share.
Leave A Reply