உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (28) இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
பல்லேகலை இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் அணி சார்பில் ஷகிப்சடா பர்ஹான் 100 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில் 213 என்ற வெற்றியிலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பாடவுள்ளது.
எவ்வாறாயினும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தெரிவாக வேண்டுமானால், இலங்கை அணியை 147 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதனை கடந்த இலங்கை அணி இந்த போட்டியில் கூடுதல் ஓட்டங்களை பெற்றது.
இதனால் பாகிஸ்தான் அணி தொடரில் வௌியேறிய நிலையில் ஓட்ட சராசரி அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு நுழைந்தது.
இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

