“நேற்று அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்டதை அடுத்து தலைமை மதகுரு பதவியான ஈரானின் அடுத்த உச்ச தலைவராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ஈரானின் அரசியலமைப்பின்படி, 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபை உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும்.

இந்த அமைப்பிற்கான வேட்பாளர்கள் கார்டியன் கவுன்சிலால் சரிபார்க்கப்படுகிறார்கள். அதன் உறுப்பினர்கள் உச்சத் தலைவரால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நியமிக்கப்படுகிறார்கள்.

தற்போது அயதுல்லா அலி காமேனியின் 2-வது மகனான மொஜ்தபா காமேனி (வயது 56) உச்ச தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஈரான் புரட்சிகர காவல்படை மற்றும்துணை ராணுவப் படையுடன் வலுவான தொடர்புகளை கொண்டுள்ளவர்.

அதேபோல் மூத்த அரசியல்வாதியும்,புரட்சிகர காவல்ப டையின் முன்னாள் தளபதியுமான அலி லாரிஜானியும் உச்ச தலைவர் போட்டியில் உள்ளார்.

தற்போது இவர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின்செயலாளராக உள்ளார். மேலும் அயதுல்லா அலி காமேனிக்கு ஆலோசகராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. “,

இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து நேற்று (பிப். 28) முதல் ஈரான் நாட்டின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

அலி காமேனி இடத்தில் அடுத்து யார்? ஈரான் உச்ச தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை ஈரான் குறிவைத்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், கத்தார் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் தொடுத்து வருகிறது. இந்த நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் செயல்படுகின்றன.

மறைந்தார் அயதுல்லா அலி கமேனி

இந்நிலையில், தங்களின் தாக்குதலில் ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (86) உயிரிழந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் அறிவித்தனர்.
முதலில் ஈரான் இச்செய்தியை மறுத்த நிலையில், பின்னர் அயதுல்லா அலி கமேனி மறைவை ஈரான் அரசு உறுதிப்படுத்தியது.

பதிலடிக்கு ரெடியாகும் ஈரான்

அயத்துல்லா அலி காமேனி, இஸ்ரேல் – அமெரிக்காவின் தாக்குதலால் கொல்லப்பட்டதாக அறிவித்த ஈரான் அரசு, நாட்டில் 40 நாட்கள் பொது துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்தது.

அடுத்த 7 நாட்களுக்கு பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. கமேனியின் படுகொலை மாபெரும் குற்றம் என்றும் இதற்கு பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என்றும் ஈரான் அரசு அமெரிக்கா – இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பழிவாங்கும் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றும் ஈரான் ராணுவமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் அதிகார அமைப்பு

இவை ஒருபுறம் இருக்க, ஈரானில் அடுத்த உச்சபட்ச தலைவராக தேர்வு செய்யப்படப்போகிறார், ஈரானின் எதிர்காலம் யாரின் கைகளுக்கு போகப்போகிறது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அதை பார்ப்பதற்கு முன், ஈரானில் அதிகார அமைப்பு எப்படி உள்ளது?, உச்சபட்ச தலைவர் தேர்வு செய்யப்படுவது எப்படி? உள்ளிட்ட விவரங்களை முதலில் காணலாம்.

வல்லுநர் சபை

ஈரானில் உச்சபட்ச தலைவரை தேர்வு செய்வதில் எளிமையான நடைமுறை கடைபிடிக்கப்படவதில்லை. 88 உறுப்பினர்கள் அடங்கிய வல்லுநர் சபையே உச்சபட்ச தலைவர் தேர்வு செய்யும் அதிகாரத்தை கொண்டிருக்கிறது. இந்த குழுவால் உச்சபட்ச தலைவர் தேர்வு செய்ய மட்டுமின்றி நீக்கவும் அதிகாரம் இருக்கிறது. ஆனால், இதுவரை யாரும் நீக்கப்பட்டதில்லை.

1979இல் வந்த புரட்சி

1979ஆம் ஆண்டில் ஈரானிய புரட்சி வெடித்தது. 2,500 ஆண்டுகள் பழமையான பாரசீக மன்னராட்சியை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிந்து, ஷா முகது ரெசா பஹ்லவியின் மதச்சார்பற்ற எதேச்சதிகாரத்தை, அயதுல்லா ருஹோல்லா கொமேனியின் கீழ் ஒரு இஸ்லாமிய குடியரசாக மாற்றப்பட்டது.

அதன் பின் தற்போதுவரை ஈரானில் இருவர் மட்டுமே உச்சபட்ச தலைவராக இருந்துள்ளனர். 1979ஆம் ஆண்டில் ருஹோல்லா கொமேனி உச்சபட்ச தலைவராக தேர்வாகி, அவர் 1989ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இரண்டு உச்ச தலைவர்கள்

அப்போது, 88 உறுப்பினர்கள் அடங்கிய வல்லுநர் சபை இணைந்து அயத்துல்லா அலி காமேனியை உச்சபட்ச தலைவராக தேர்வு செய்தது. அப்போது முதல் சுமார் 37 ஆண்டுகளாக அயத்துல்லா அலி காமேனி உச்சபட்ச தலைவராக நீடித்தார். தற்போது அவர் உயிரிழந்ததை தொடர்ந்து ஈரானின் அடுத்த உச்சபட்ச தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

ஈரானின் கார்டியன் கவுன்சில்

உச்சபட்ச தலைவரை தேர்வு செய்யும் வல்லுநர் குழுவில் இருக்கும் 88 பேரும், ஷியா மதகுருமார்கள் ஆவர்.

இவர்களின் வேட்புமனுவை ஈரானின் அரசியலமைப்பு கண்காணிப்பு அமைப்பான கார்டியன் கவுன்சில் அங்கீகரிக்கும்.

இந்த அமைப்பு ஈரானின் பல தேர்தல்களில் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வதற்கும் பெயர் பெற்றதாகும். வல்லுநர்கள் சபைக்கான வேட்பாளர்களையும் நீக்கம் அதிகாரத்தை இந்த அமைப்பு கொண்டிருக்கிறது.

உதாரணத்திற்கு, 2015ஆம் ஆண்டில் உலக வல்லரசு நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை கையெழுத்திட்ட, முன்னாள் ஈரானிய அதிபர் ஹசன் ரூஹானியை, கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த வல்லுநர்கள் சபைக்கான தேர்தலில் அவரை கார்டியன் கவுன்சில் தடை செய்தது.

தலைமைத்துவ குழு

கூடியவரை விரைவில் புதிய உச்சதலைவரை வல்லுநர்கள் சபை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஈரானிய சட்டம் கூறுகிறது.

அதுவரை தலைமைத்துவ குழு, தற்காலிகமாக அனைத்து கடமைகளையும் பார்த்துக்கொள்ளும். இந்த தலைமைத்துவ குழுவில், தற்போதைய அதிபர், நீதித்துறை தலைவர், எக்ஸ்பெடியன்சி கவுன்சில் தேர்வு செய்த கார்டியன் கவுன்சிலின் உறுப்பினர் ஆகியோரை உள்ளடக்கியிருக்கும்.

அந்த வகையில், தற்போதைய நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மற்றும் ஈரான் நீதித்துறை தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்சேனி எஜேய் உள்ளிட்டோர் அந்த தலைமைக் குழுவில் இடம்பிடிப்பார்கள்.

அடுத்த உச்ச தலைவர் யார்?

அந்த வகையில், அடுத்த உச்சபட்ச தலைவராக, வல்லுநர் சபை யாரை தேர்வு செய்யும் என்பதை கணிப்பதும் கடினமாகும். உயிரிழந்த அயத்துல்லா அலி காமேனியும் தனக்கு அடுத்து உச்சபட்ச தலைவர் இவர்தான் என்பதை பொதுவெளியில் அறிவிக்கவில்லை. ஆனால் அடுத்து உச்சபட்ச தலைவராக ஒரு சிலர் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது, அவர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.

மொஜ்தாபா காமேனி: தற்போது உயிரிழந்த உச்சபட்ச தலைவரான அயத்துல்லா அலி காமேனியின் 2வது மகன் ஆவார்.

இவரே அடுத்த உச்சபட்ச தலைவராக தேர்வாக அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) நெருங்கிய தொடர்பில் உள்ளார். IRGC என்பது ஈரானின் படைகளில் ஒன்றாகும்.

IRGC இஸ்லாமிய குடியரசு அமைப்பை பாதுகாக்கும் வகையில் 1979இல் தோற்றுவிக்கப்பட்டது. ஈரானின் ராணுவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் பெரும் அதிகாரத்தை செலுத்துகிறது. இதோடு அதிகம் நெருக்கம் காட்டுவதாலேயே மொஜ்தாபா காமேனி அடுத்த உச்ச தலைவராக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், இஸ்லாமிய மதகுரு அளவில் அவர் உயர் மதிப்பை பெறவில்லை.

ஹசன் காமேனி: ஈரான் இஸ்லாமிய குடியரசு ஆட்சியின் நிறுவனத் தலைவரான அயதுல்லா ருஹோல்லா கொமேனியின பேரன் ஆவார். ஆனால் இவருக்கு அரசியலில் பெரியளவில் அனுபவம் இல்லை. அதேநேரத்தில் பாதுகாப்பு அமைப்பின் ஆதரவு குறைவாக இருக்கும்.

ஹாஷேம் ஹொசைனி புஷேரி: வல்லுநர் சபையின் முன்மைத் துணை தலைவர். அயத்துல்லோ அலி காமேனியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். ஆனாலும் இவருக்கு வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

அலிரேசா அரஃபி: மூத்த மதகுருவான இவர் வல்லுநர் சபையின் துணைத் தலைவர் ஆவார். மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைவு என்றாலும் நிர்வாகப் பணி மற்றும் கல்வித் திறன் கொண்டவர். நம்பிக்கைக்குரியவராகவும் பாரக்கப்படுகிறது.

Share.
Leave A Reply