ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் மூன்றாம் நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் பதிலடி மிகவும் தீவிரமாகவும், கணிக்க முடியாததாகவும் மாறியுள்ளது.

வளைகுடா நாடுகளின் முதுகெலும்பாக விளங்கும் எரிசக்தி (Energy Sector) துறையை ஈரான் குறிவைத்துள்ளது

உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. திங்கள்கிழமை அன்று ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்கள், உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ (Saudi Aramco) மற்றும் கத்தாரின் மிகப்பெரிய LNG (திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு) உற்பத்தி நிலையங்களை நிலைகுலையச் செய்துள்ளன.

Iran Saudi Qatar சவுதி அராம்கோ மீது தாக்குதல்: உற்பத்தி நிறுத்தம்! ஈரான் தனது ‘ஷாஹெட்’ (Shahed) ரக ட்ரோன்கள் மூலம் சவுதி அரேபியாவின் புகழ்பெற்ற ராஸ் தனூரா (Ras Tanura) சுத்திகரிப்பு நிலையத்தைத் தாக்கியது.

இது உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும்.

 உற்பத்தித் திறன்: நாளொன்றுக்கு 5,50,000 பேரல் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. அதாவது சுமார் 8.74 கோடி லிட்டர் எண்ணெய்.

தற்போதைய நிலை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவுதி அராம்கோ தனது உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இரண்டு ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டாலும், அதன் இடிபாடுகள் விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

கத்தாரின் பொருளாதாரம் முடக்கம்:

LNG விநியோகம் பாதிப்பு உலகின் எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்யும் கத்தாரின் ராஸ் லஃபான் (Ras Laffan) மற்றும் மெசைத் (Mesaieed) தொழில் நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.

கத்தார் எனர்ஜி நிறுவனம் தனது உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. உலகளாவிய LNG தேவையில் 20% கத்தாரிலிருந்தே பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்தத் தடை ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாட்டை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

” இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்புகள்

இந்தத் தாக்குதல் இந்தியாவிற்கு பெரும் கவலையை அளித்துள்ளது.

ஏனெனில்:

இறக்குமதி: இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88% மற்றும் இயற்கை எரிவாயு தேவையில் 50% இறக்குமதி செய்கிறது.

கத்தார் உறவு: இந்தியாவின் மிகப்பெரிய LNG விநியோகஸ்தர் கத்தார் (சுமார் 40%). ஆண்டுக்கு 7.5 மில்லியன் டன் எரிவாயு கத்தாரிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் வருகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவிற்கு வரும் பெரும்பாலான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகவே வருகின்றன.

தற்போது இந்தப் பாதை முடக்கப்பட்டுள்ளதால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வு மற்றும் சந்தை நிலவரம் தாக்குதலின் எதிரொலியாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் விண்ணைத் தொட்டுள்ளன:

 கச்சா எண்ணெய்: ஒரு பேரல் கச்சா எண்ணெய் $82-ஐ தாண்டியுள்ளது. இது ஒரே நாளில் 10% உயர்வாகும்.

இயற்கை எரிவாயு: ஐரோப்பாவில் எரிவாயு விலை 45-50% வரை உயர்ந்துள்ளது.

இந்திய அரசின் நிலைப்பாடு: “நாட்டின் பெட்ரோலியப் பொருட்களின் இருப்பு மற்றும் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்” என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

ஈரானின் இந்த வியூகம் வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்தை முடக்குவது மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. போர் நீடித்தால், பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உலகளவில் உயரக்கூடும்.

 

Share.
Leave A Reply