ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்­குதல் தொடர்­பாக அரச புல­னாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரி­களால் கைது செய்யப்­பட்ட சம்­பவம் அர­சியல் மற்றும் பாது­காப்பு வட்­டா­ரங்­களில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

பேலி­ய­கொ­டவில், அவர் தற்­போது பணி­யாற்றும் சிந்­தனைக் குழாம் ஒன்­றுக்கு பெப்­ர­வரி 25ஆம் திகதி காலை 7.50 மணி­ய­ளவில் சென்று கொண்­டி­ருந்த போது குற்றப் புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரிகள் அவரை மடக்கி கைது செய்­தனர்.

குற்றப் புல­னாய்வுப் பிரிவு தலை­மை­ய­கத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்ட அவரை பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெற்றுக் கொள்­ளப்­பட்­டது. அவர் கைது செய்­யப்­பட்ட இரண்டு மணி நேரத்­திற்குள் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் வீடு குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பல குழுக்­களால் சோதனையிடப்பட்­டது.

தர­மற்ற நிலக்­கரி இறக்­கு­மதி மோசடி குறித்த குற்­றச்­சாட்­டுகள் எரி­வாயு நெருக்­கடி, மகா சங்கத்தின் அழுத்­தங்கள் அர­சாங்­கத்­துக்கு அதி­க­ரித்­துள்ள சூழலில் -இந்த கைது நட­வ­டிக்கை இன்னும் கூடுதல் கவ­னத்தைப் பெற்­றி­ருக்­கி­றது.

ஆட்­சிக்கு வந்து ஆறு மாதங்­க­ளுக்குள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­குதல் சூத்­தி­ர­தா­ரி­களை கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்­துவோம் என ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க வாக்குறுதி கொடுத்­தி­ருந்தார்.

ஆனால், ஆட்­சிக்கு வந்து கிட்­டத்­தட்ட ஒன்­றரை ஆண்­டுகள் ஆகப்­போ­கின்ற நிலையில் கூட இந்த விசா­ர­ணைகள் முடி­வுக்கு கொண்டு வரப்­ப­டவோ, பிர­தான சூத்­தி­ர­தாரி கண்­ட­றி­யப்­ப­டவோ குற்­ற­வா­ளிகள் மீது வழக்குத் தாக்கல் செய்­யப்­ப­டவோ இல்லை.

இந்த விசா­ர­ணை­களை முடிக்க முடி­யாமல் இருப்­பது அர­சாங்­கத்­துக்கு அர­சியல் ரீதி­யாக கடும் அழுத்­தங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

அண்மைக் காலங்­களில் இந்த குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக கருத்து வெளி­யிட்ட ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க  ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் விசா­ர­ணைகள் சிக்­க­லாக இருப்­ப­தா­கவும் சாட்­சி­யங்கள் ஆதா­ரங்கள் அழிக்­கப்­பட்­டி­ருப்­பதால் புல­னாய்­வா­ளர்கள் கடு­மை­யான நெருக்­க­டி­களை எதிர்­கொள்­வ­தா­கவும் கூறி­யி­ருந்தார்.

எவ்­வா­றா­யினும், ஐ.நா பொதுச்­சபை கூட்­டத்தில் பங்­கேற்­ப­தற்கு கடந்த ஆண்டு செப்­டெம்பர் மாதம் அமெ­ரிக்­கா­வுக்கு சென்­றி­ருந்த ஜனா­தி­பதி அநு­ர­ கு­மார திசா­நா­யக்க அங்­குள்ள இலங்­கை­யர்­களை சந்­தித்த போது கூடிய விரைவில் இரா­ணுவ உயர் அதி­கா­ரிகள் சிலர் கைது செய்­யப்­ப­டு­வார்கள் எனக் கூறி­யி­ருந்தார்.

அதை­ய­டுத்து உயர்­மட்ட கைதுகள் நடக்­க­வுள்­ள­தாக ஊகங்கள் நில­வி­னாலும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது மிகவும் தாம­த­மா­கவே இடம்­பெற்­றி­ருக்­கி­றது. இந்த கைது முன்­னரே எதிர்­பார்க்­கப்­பட்ட ஒன்று தான்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே இருந்தார் என்றும்இ ராஜபக் ஷவி­னரை மீண்டும் அதி­கா­ரத்­துக்கு கொண்டு வரும் நோக்­கத்தில் தான் இந்த தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தா­கவும்இ சனல் 4 வெளி­யிட்ட ஆவ­ணப்­ப­டத்தில்இ குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருந்­தது.

பிள்­ளை­யானின் தனிப்­பட்ட செய­லா­ள­ராக இருந்த ஆசாத் மௌலானா வெளிப்­ப­டுத்­திய தக­வல்­களின் அடிப்­ப­டையில் இந்தக் குற்­றச்­சாட்டு கூறப்­பட்­டாலும்இ முழுக்க முழுக்க அந்த தக­வலின் அடிப்­ப­டையில் இந்தக் கைது இடம்­பெற்­ற­தாகத் தெரி­ய­வில்லை.

ஏனென்றால்இ சனல் 4 வெளி­யிட்ட தக­வலின் அடிப்­ப­டையில் இந்தக் கைது இடம்­பெ­று­வ­தானால்இ அது ஜனா­தி­பதி அநு­ர­கு­மார ஆட்­சிக்கு வந்­த­வுடன் அல்­லது சில மாதங்­க­ளுக்குப் பின்னர் நடந்­தி­ருக்க வேண்டும்.

அல்­லது குறைந்­த­பட்சம் கடந்த ஒக்­டோபர் மாதத்­தி­லா­வது நிகழ்ந்­தி­ருக்க வேண்டும். ஆனால் மிகவும் மெது­வா­கவே மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்­யப்­பட்­டி­ருக்­கிறார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­த­லுக்கு சதித் திட்டம் தீட்­டி­ய­தா­கவும் உடந்­தை­யாக இருந்­த­தா­கவும் குற்­றம்­சாட்­டப்­பட்டே  அவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் போது­மான ஆதா­ரங்­களின் அடிப்­ப­டையில் தான் அவர் கைது செய்­யப்­பட்டார் என்றும் ஊட­கங்­க­ளிடம் பொலிஸ் அதி­கா­ரிகள் கூறி­யி­ருக்­கின்­றனர்.

இந்தக் கைது பலரை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது. அவர்­களில் ராஜபக் ஷவினர் மற்றும் அவர்­க­ளுக்கு முண்டு கொடுக்கும் சிங்­களத் தேசி­ய­வாத தரப்­பினர் முக்­கி­ய­மா­ன­வர்கள்.

ஏனென்றால், அவர்­க­ளுக்கு மிகவும் நெருக்­க­மா­ன-­நம்­பிக்­கை­யான இரா­ணுவ அதி­கா­ரி­களில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே முதன்­மை­யா­னவர்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் இரா­ணுவ சாதனை வர­லாறு அவர் கைது செய்­யப்­ப­டு­வதை தடுக்கும் கவ­ச­மாக இருக்கும் என்ற நம்­பிக்கை அவர்­க­ளிடம் இருந்­தது.

இரா­ணுவப் புல­னாய்வு பிரிவின் மூத்த அதி­கா­ரி­யான மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே விடு­தலை புலி­க­ளுக்கு எதி­ரான போரில் புலி­களின் முக்­கி­ய­மான பல இலக்­கு­களை அழிப்­ப­தற்கு கார­ண­மாக இருந்­தவர்.

இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவின் முக்­கி­ய­மான ஒரு பிரி­வான இரா­ணுவப் புல­னாய்வுப் பணி­ய­கத்தின் தலை­வ­ராக இருந்­தவர் பிரி­கே­டியர் சுரேஷ் சலே.

போர்க்­கா­லத்தில் இரா­ணு­வத்தின் விசேட படைப்­பி­ரிவு மற்றும் ஆழ ஊடு­ருவும் அணி போன்­ற­வற்றை கையாண்ட பிரிவு தான் இது.

தமிழ்ச்­செல்வன்

விடு­தலைப் புலி­களின் அர­சி­யல்­துறை பொறுப்­பாளர் பிரி­கே­டியர் தமிழ்ச்­செல்வன் மீதான தாக்­கு­தலை வழி­ந­டத்­தி­யவர்.

இறு­திக்­கட்டப் போருக்குப் பின்னர் விடு­தலைப் புலிகள் மீளவும் தலை­யெ­டுக்க முடி­யா­த­ள­வுக்கு உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் எடுக்­கப்­பட்ட இரா­ணுவ புல­னாய்வு நட­வ­டிக்­கை­க­ளுக்கு தலைமை தாங்­கி­யவர்.

மலே­சி­யாவில் கே.பி. எனப்­படும் குமரன் பத்­ம­நா­தனை கைது செய்து கொழும்­புக்கு கொண்டு வந்து சேர்ந்­தவர். புல­னாய்வு வித்­தை­களை கையாண்டு இலங்கை இரா­ணு­வத்­திற்கும் அர­சாங்­கத்­துக்கும் வர­லாற்று வெற்­றி­களை தேடிக் கொடுத்­தவர் சலே.

அப்­ப­டிப்­பட்­டவர் இப்­ப­டி­யா­ன­தொரு குற்­றச்­சாட்டில் சிக்­கி­யி­ருப்­பதை பலரால் நம்ப முடி­ய­வில்லை.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் காலத்தில் இரா­ணுவப் புல­னாய்வுப் பணி­ய­கத்தில் இருந்து நீக்­கப்­பட்டு, மலே­சி­யாவில் உள்ள இலங்கை தூத­ர­கத்தில் பாது­காப்பு ஆலோ­ச­க­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் நடந்த போது புது­டில்­லியில் தேசிய பாது­காப்புக் கல்­லூ­ரியில் கற்­கை­நெ­றிக்­காக இணைந்­தி­ருந்தார்.

எவ்­வா­றா­யினும், கோட்­டா­பய ராஜபக் ஷ ஆட்­சிக்கு வந்து மூன்று வாரங்­க­ளி­லேயே மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே அரச புல­னாய்வு சேவையின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

அரச புல­னாய்வு சேவையின்இ தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்ட முத­லா­வது இரா­ணுவ அதி­காரி இவர் தான்.

இந்த நிய­மனம் அப்­போது பலத்த சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யது.

அரச புல­னாய்வு சேவை இரா­ணுவ மயப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் கூறப்­பட்­டி­ருந்­தாலும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆட்­சிக்கு வந்த பிறகும் கூட அவர் அந்த பத­வியில் இருந்து நீக்­கப்­ப­ட­வில்லை.

அநு­ர­கு­மார திசா­நா­யக்க ஜனா­தி­ப­தி­யாக பொறுப்­பேற்ற சில நாட்­க­ளுக்கு பின்னர்இ அரச புல­னாய்வு சேவை தலைவர் பத­வியில் இருந்து மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே நீக்­கப்­பட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­ப­டுத்தி முன்னர் வெளி­யான குற்­றச்­சாட்­டு­களை நிராகரித்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே,

குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­னரால் இப்­போது கைது செய்­யப்­பட்­டி­ருப்­பது  இந்த சம்­ப­வங்­க­ளுடன் அவ­ருக்கு உள்ள தொடர்­புகள் ஏதோ ஒரு வகையில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவே கருத இட­ம­ளிக்­கி­றது.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை கைது செய்து சிறையில் அடைப்­பது அர­சாங்­கத்­துக்கும் தமக்கும் சிக்­கலை ஏற்­ப­டுத்தும் என்­பது குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வுக்கு தெரி­யாத விடயம் அல்ல.

இது அரச படை­யி­னரை பழி­வாங்­கு­வ­தாக எடுத்துக் கொள்­ளப்­படும் ஆபத்து இருப்­பதால் மிகக் கவ­ன­மா­கவே இந்த நட­வ­டிக்கை திட்­ட­மி­டப்­பட்­டி­ருக்கும்.

இவ­ரது கைது நட­வ­டிக்கை பல மாதங்கள் தாம­த­மா­கவே இடம்­பெற்­றி­ருப்­பதால் கூடுதல் ஆதா­ரங்­களை குற்றப் புல­னாய்வு பிரிவு திரட்­டி­யி­ருப்­ப­தற்­கான சாத்­தி­யங்கள் உள்­ளன.

ராஜபக் ஷவி­னரை அதி­கா­ரத்­திற்குக் கொண்டு வரு­வ­தற்­காக இரா­ணுவப் புல­னாய்வு பிரிவின் ஒரு மூத்த அதி­கா­ரியே சூழ்ச்சி செய்தார் என்ற குற்­றச்­சாட்டு பார­தூ­ர­மான ஒன்று.

இந்த குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்டால் அது தனியே மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே­யுடன் மட்டும் தொடர்­பு­டை­ய­தாக இருக்­காது.

ஒட்­டு­மொத்த இரா­ணுவப் புல­னாய்வு பிரி­வையும் அரச பாது­காப்பு கட்­ட­மைப்­பு­க­ளையும் கூடஇ புரட்டிப் போடும்.

சுரேஷ் சலேவின் கைது அர­சாங்­கத்­துக்கு ஒரு பக்கம் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­னாலும் இன்­னொரு பக்கம் அதற்­குள்ள நெருக்­க­டி­களில் இருந்து காப்­பாற்றிக் கொள்­வ­தற்­கான வழி­யா­கவும் இருக்கும்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுடன் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால் அது ஒரு பார­தூ­ர­மான இரா­ணுவச் சூழ்ச்­சி­யாக இருக்கும்.

1962ஆம் ஆண்டு சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் ஆட்­சியை கவிழ்ப்­ப­தற்­காக ஒரு இரா­ணுவ புரட்­சிக்கு திட்­ட­மி­டப்­பட்டு ஆரம்­பத்­தி­லேயே தோல்­வியை தழு­வி­யது.

அதற்குப் பின்னர், 1966ஆம் ஆண்டு டட்லி சேன­நா­யக்க அரசைக் கவிழ்ப்­ப­தற்­கான சூழ்ச்சி இடம்­பெற்­ற­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு பல படை அதி­கா­ரிகள் கைது செய்­யப்­பட்ட போது நீதி­மன்ற விசா­ர­ணை­களில் அதனை நிரூ­பிக்க முடி­யாமல் போனது.

2010 ஜனா­தி­பதி தேர்­த­லுக்குப் பின்னர் சரத் பொன்­சேகா அதி­கா­ரத்தைக் கைப்­பற்ற சூழ்ச்சி செய்தார் என்ற குற்­றச்­சாட்டும் கூறப்­பட்­டது.

இந்த இரா­ணுவப் புரட்­சிகள் எதுவும் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

ஆனால், ஆட்சி மாற்­றத்தை இலக்கு வைத்து ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் இரா­ணுவ பின்­பு­லத்­துடன் மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு நட­வ­டிக்கை என நிரூ­பிக்­கப்­பட்­டதால், மறை­முக இரா­ணுவ ஆட்­சி­க­விழ்ப்பு சூழ்ச்­சி­யாக இதனை எடுத்துக் கொள்­ளலாம்.

கோட்­டா­பய ராஜபக் ஷவை அதி­கா­ரத்­துக்கு கொண்டு வரும் நோக்கில் இந்த தாக்­குதல் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்தால் ஒட்­டு­மொத்த இரா­ணு­வமும் இதற்குப் பதில் கூற வேண்­டிய நிலை ஏற்­படும்.

2023 ஆம் ஆண்டு ஜூன் 19, 20 ஆம் திக­தி­களில் நடந்த ஐ.நாவின் மூன்­றா­வது உயர்­மட்ட பயங்கர­வாத முறி­ய­டிப்பு மாநாட்டில் அரச புல­னாய்வு சேவையின் தலை­வ­ராக மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பங்­கேற்­றி­ருந்தார்.

அங்கு உரை­யாற்­றிய போது… ’21 ஆம் நூற்­றாண்டில் சர்­வ­தேச பாது­காப்­புக்கு மிகப்­பெ­ரிய சவால்­களில் ஒன்­றாக பயங்­க­ர­வாதம் உரு­வெ­டுத்­துள்­ளது, இது உறு­தித்­தன்­மையை குறை மதிப்­பிற்கு உட்­ப­டுத்­து­கி­றது. சமூக நம்­பிக்­கையை பாதிக்­கி­றது மற்றும் உலகம் முழு­வதும் அமை­தியை சீர்­கு­லைக்­கி­றது.

அப்­பாவி உயிர்­க­ளையும் சமூ­கங்­க­ளையும் பாதிக்கும் கொடூ­ர­மான வன்­முறைச் செயல்­களை நாம் கண்­டி­ருக்­கிறோம்’ எனக் குறிப்­பிட்­டி­ருந்தார் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே.

அரச புல­னாய்வு சேவையின் தலைவராக அப்போது அவர் இதனை கூறியிருந்தாலும், இதனை கூறுவதற்கு தகுதியான ஒருவராக அவர் இருந்தாரா என்ற கேள்வி இப்போது எழுகிறது.

ஏனென்றால்இ ஒரு தீவிரவாத நடவடிக்கைக்கு அவர் ஏதோ ஒரு வகையில் உதவியிருப்பது நிரூபிக்கப்படுமேயானால், அது அவரது ஒட்டுமொத்த புலனாய்வு செயற்பாடுகளையும் கேள்விக்குட்படுத்தும்.

இலங்கையில் தீவிரவாதத்தை அளிப்பதற்கு பங்களித்ததாக உரிமை கோரிய ஒருவரே, அதே தீவிரவாதத்திற்கு ஊக்கமளித்தவராக கைது செய்யப்பட்டிருப்பது இன்னும் பல கேள்விகளை எழுப்புகிறது.

அவர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டது இதுதான் முதல்முறையா அல்லது விடுதலை புலிகளுக்கு எதிரான போரின் போதும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தாரா என்ற கேள்வியை எழுப்ப வைக்கும்.

விடுதலைப் புலிகள் மீது சர்வதேச கோபத்தை தூண்டிய, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தூண்டிய பல தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன.

அத்தகைய சம்பவங்களுக்குப் பின்னால், இதுபோன்ற தொடர்புகள் இருந்திருக்காது என்ற கேள்வி கூடஇ எழுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஏனென்றால்இ போரில் வெற்றியீட்டுவதற்காக புலனாய்வு அமைப்புகள், இப்படிப் பல தந்திரங்களைக் கையாளுவது ஒன்றும் புதிதில்லை.

-சுபத்ரா-

Share.
Leave A Reply