அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரானின் புதிய உச்சத் தலைவர் ஆயத்துல்லா மோஜ்தபா காமெனெய்  ஓரினச்சேர்க்கையாளர் குணம் கொண்டவர் என மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) அவருக்கு தகவல் வழங்கியதாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தகவல் முதலில் மார்ச் 16 ஆம் தேதி நியூயார்க் போஸ்ட் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

அந்த செய்தியின்படி, காமெனெயின் தந்தையும் முன்னாள் இரான் உச்சத் தலைவருமான அலி காமெனெய், தனது மகன் மோஜ்தபா காமெனெயின் பாலியல் நோக்கம் காரணமாக அவர் தன்னைத் தொடர்ந்து அந்த பதவியை ஏற்கத் தகுதியற்றவராக இருக்கலாம் என்ற அச்சம் கொண்டிருந்ததாக CIA நம்புகிறது.

மேலும், இளம் காமெனெய் தனது சிறுவயது ஆசிரியருடன் நீண்டகால  ஓரினச்சேர்க்கை உறவில் இருந்ததாகவும் அந்த மதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது.

Fox News தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “CIA உண்மையாகவே காமெனெய் சமலிங்கக்காரர் என்று தெரிவித்ததா?” என்ற கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “அவர்கள் அப்படிச் சொன்னார்கள். ஆனால் அது அவர்களே மட்டும் சொன்னதா என எனக்குத் தெரியவில்லை. பலரும் அதைப் பற்றி பேசுகிறார்கள். அந்த நாட்டின் சூழலில் அது அவருக்கு நல்ல தொடக்கமாக இருக்காது,” என்று கூறினார்.

இதையடுத்து, ட்ரம்ப் பாலஸ்தீன ஆதரவாளர்களில் உள்ள சில பெண்ணிய மற்றும் LGBTQ இயக்கங்களை விமர்சித்தார். “பெண்கள் பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறார்கள் என்று பார்க்கும்போது எனக்கு சிரிப்பு வருகிறது.

அங்கே பெண்கள் குறிப்பிட்ட விதமான ஆடை அணியவில்லை என்றால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

மேலும், “’Gays for Palestine’ என்று சிலர் ஆதரிப்பதை நான் பார்க்கிறேன். ஆனால் அங்கே சமலிங்கக்காரர்களையே கொலை செய்கிறார்கள். அப்படியானால் ‘Gays for Palestine’ யார்?” என்று ட்ரம்ப் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply