ஒப்பந்தம் மேற்கொள்ள அல்லது ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்க இரானுக்கு 48 மணி நேரம் இருப்பதாக கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

“ஒப்பந்தம் மேற்கொள்ள அல்லது ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்க நான் இரானுக்கு 10 நாட்கள் கொடுத்தது நினைவில் இருக்கிறதா? நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது,” என டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “அவர்கள் மீது சீற்றம் விழுவதற்கு 48 மணி நேரம் மட்டுமே மீதம் உள்ளது.” என்றார்.

மார்ச் 27-ஆம் தேதி அன்று இரானின் எரிசக்தி நிலையங்கள் மீதான எந்த தாக்குதல்களையும் அடுத்த 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.

Share.
Leave A Reply