நந்தனா சென் எங்கோ கேள்விப்பட்ட பேர் மாதிரி இருக்கிறது என்கிறீர்களா? யெஸ்! நோபல் பரிசு பெற்ற அமர்த்யா சென்னின் புதல்விதான் நந்தனா சென். பிரச்னையில் இருக்கிறார் நந்தனா சென். ‘‘ஆனால் இது எனக்குப் பிரச்னையும் இல்லை; நான் கூச்சப்படவும் இல்லை!’’ என்கிறார் நந்தனா.
நீங்கள் நினைப்பது சரிதான். இயக்குநர் கேத்தன் மேத்தாவின் ‘ரங் ரஸியா’ என்னும் இந்திப் படத்தில் ‘நியூட்’ ஆகத் தோன்றியிருக்கிறார் நந்தனா சென்.
‘‘பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற, பாரத ரத்னா விருது பெற்ற ஒரு மாமேதையின் மகள் அம்மணமாக நடிப்பதை எதிர்க்கிறோம்!’’ என்று பிரபலமில்லாத ஒரு அமைப்பு போர்க் குரல் எழுப்பி இருக்கிறது.
‘‘இந்தப் படம் ஓவிய மேதை ராஜா ரவிவர்மனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இதில் அவரது கலை தேவதை சுகந்தாவாக நான் நடிக்கிறேன்.
ரவிவர்மன் அற்புதமான ஓவியர். அவர் பெண் தெய்வங்களை வரைவது போன்ற ஒரு காட்சிக்கு எனது நிர்வாணம் தேவைப்பட்டதால், இந்தக் காட்சியில் நடித்தேன்.