ilakkiyainfo

28 லட்சம் பேருக்கு கொரோனா ; ஒரு லட்சத்து 95 ஆயிரத்தை கடந்த பலி 

28 லட்சம் பேருக்கு கொரோனா ; ஒரு லட்சத்து 95 ஆயிரத்தை கடந்த பலி 
April 24
21:15 2020

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்தை கடந்தது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 28 லட்சத்து ஆயிரத்து 65 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18 லட்சத்து 29 ஆயிரத்து 861 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவர்களில் 58 ஆயிரத்து 368 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இதுவரை 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனாலும் இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 95 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அதிகம் பரவியுள்ள நாடுகளின் விவரங்கள்:-

அமெரிக்கா – 9,03,775
ஸ்பெயின் – 2,19,765
இத்தாலி – 1,92,994
பிரான்ஸ் – 1,59,828
ஜெர்மனி – 1,54,159
இங்கிலாந்து – 1,43,464
துருக்கி – 1,04,912
ஈரான் – 88,804
சீனா – 82,804
ரஷியா – 68,622
பிரேசில் – 51,073
பெல்ஜியம் – 44,551
நெதர்லாந்து – 36,535
ஸ்விட்சர்லாந்து – 28,677
இந்தியா – 23,452
போர்ச்சீகல் – 22,797
ஈக்வடார் – 22,719
பெரு – 21,648

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் விவரங்கள் வருமாறு:-

அமெரிக்கா – 51,139
ஸ்பெயின் – 22,524
இத்தாலி – 25,969
பிரான்ஸ் – 22,245
ஜெர்மனி – 5,653
இங்கிலாந்து – 19,506
துருக்கி – 2,600
ஈரான் – 5,574
சீனா – 4,632
பிரேசில் – 3,407
பெல்ஜியம் – 6,679
கனடா – 2,294
நெதர்லாந்து – 4,289
சுவிஸ்சர்லாந்து – 1,578
அயர்லாந்து – 1,014
ஸ்வீடன் – 2,152
மெக்சிகோ – 1,069

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com