ilakkiyainfo

50 லட்சம் பேருக்கு கொரோனா – அதிரும் உலக நாடுகள்

50 லட்சம் பேருக்கு கொரோனா – அதிரும் உலக நாடுகள்
May 20
13:26 2020

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது.
50 லட்சம் பேருக்கு கொரோனா – அதிரும் உலக நாடுகள்

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ளது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனா பரவும் வேகமும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்னிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 50 லட்சத்து 3 ஆயிரத்து 170 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 27 லட்சத்து 6 ஆயிரத்து 483 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 45 ஆயிரத்து 400 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்த கொடிய வைரசில் இருந்து 19 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் விவரங்கள்:-

அமெரிக்கா – 15,70,908
ரஷியா – 3,08,705
ஸ்பெயின் – 2,78,803
பிரேசில் – 2,71,885
இங்கிலாந்து – 2,48,818
இத்தாலி – 2,26,699
பிரான்ஸ் – 1,80,809
ஜெர்மனி – 1,77,842
துருக்கி – 1,51,615
ஈரான் – 1,24,603
இந்தியா – 1,06,750
பெரு – 99,483
சீனா – 82,965
கனடா – 79,112
சவுதி அரேபியா – 59,854
பெல்ஜியம் – 55,983
மெக்சிகோ – 54,346

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com