ilakkiyainfo

`600 யோகா ஆசிரியர்கள்; 90 வருடத்துக்கு மேல் பயிற்சி’- காலமானர் `யோகா பாட்டி’ நானம்மாள்!

`600 யோகா ஆசிரியர்கள்; 90 வருடத்துக்கு மேல் பயிற்சி’- காலமானர் `யோகா பாட்டி’ நானம்மாள்!
October 26
13:46 2019

பத்மஶ்ரீ விருது பெற்ற யோகா ஆசிரியர் நானம்மாள் இன்று காலமானார்.

கோவை கணபதி, அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நானம்மாள். இவரின் அப்பா, தாத்தா, பாட்டி என்று அனைவருமே யோகாவில் கெட்டிக்காரர்கள். இதனால், தனது எட்டு வயதில் இருந்து நானம்மாள் யோகா செய்து வந்தார். 90 ஆண்டுகளுக்கு மேலாக யோகாவையே தனது மூச்சாக சுவாசித்துக் கொண்டிருந்தார் நானம்மாள்.

vikatan_2019-10_b8481980-211e-4632-a0bb-64d2f0871b24_15இதுவரை சுமார் பத்து லட்சம் பேருக்கு யோகா கற்றுக் கொடுத்துள்ளார். 600-க்கும் மேற்பட்ட யோகா ஆசிரியர்களை உருவாக்கியிருக்கிறார். இதன் காரணமாக, யோகா பாட்டி என்று அனைவராலும் பாசமாக அழைக்கப்பட்டு வந்தார்.

இவரை கௌரவிக்கும் விதமாக, மத்திய அரசு கடந்த ஆண்டு நானம்மாளுக்கு பத்மஶ்ரீ விருது வழங்கியது. ஏராளமான பதக்கங்களையும் நானம்மாள் பெற்றுள்ளார். இயற்கை உணவு, யோகா என்று வாழ்ந்து வந்த நானம்மாள், உடல்நலம் சரியில்லை என்று மருத்துவமனை பக்கம் ஒதுங்கியது கூட இல்லை.

vikatan_2019-10_5b96a057-788e-42ab-b7ed-2d5b703e604b_13நானம்மாள் ஒருநாளும் யோகா செய்ய தவறியது இல்லை. ‘கடைசிவரை யோகாவை விட மாட்டேன்’ என்று சொல்வார்.

இந்நிலையில் கடந்த வாரம் கட்டிலில் இருந்து கீழே விழுந்த நானம்மாளுக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து இன்று மதியம் நானம்மாள் உயிரிழந்தார். அவருக்கு வயது 99. இதுகுறித்து நானம்மாளின் உறவினர்கள், “கடந்த வாரம் வரை நானம்மாள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

201910261740042702_1_YOGA2._L_styvpfஆனால், கட்டிலில் இருந்து விழுந்தப் பிறகு அவரால் முடியவில்லை. ‘எல்லலோரும் நல்லாருக்கணும்’ என்று சொல்வார். தனது கடைசி நேரத்தில் கூட அதையேத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்” என்றனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

November 2020
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com