இந்தியத் திரையுலகில் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வரும் விருதுகளில் குறிப்பிட வேண்டிய விருதாக இருப்பது ஃபிலிம்பேர் விருதுகள். இதில் தென்னிந்தியாவுக்கென்று தனியாக விருது வழங்கும் விழாவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இதற்கான விழா தென்னிந்திய மாநகரங்களில் நடைபெறுவது வழக்கம். அந்த விதத்தில் 63வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டாமாக நடைபெற்றது.
அதில் தமிழ்த் திரையுலகிற்கான விருது பெற்றவர்கள் விவரம்…
சிறந்த படம் – காக்கா முட்டை
சிறந்த இயக்குனர் – மோகன் ராஜா (தனி ஒருவன்)
சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரகுமான் (ஐ)
சிறந்த நடிகர் – விக்ரம் (ஐ)
சிறந்த நடிகை – நயன்தாரா (நானும் ரௌடிதான்)
சிறந்த துணை நடிகர் – அரவிந்த்சாமி (தனி ஒருவன்)
சிறந்த துணை நடிகை – ராதிகா சரத்குமார் (தங்க மகன்)
சிறந்த பாடலாசிரியர் – மதன் கார்க்கி ( ஐ – பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..)
சிறந்த பாடகர் – சித் ஸ்ரீராம் (ஐ – என்னோடு நீ இருந்தால்…)
சிறந்த பாடகி – ஸ்வேதா மோகன் (தங்கமகன் – என்ன சொல்ல…)
சிறந்த விமர்சகர் விருது – நடிகர் – ஜெயம் ரவி (தனி ஒருவன்)
சிறந்த விமர்சகர் விருது – நடிகை – ஜோதிகா (36 வயதினிலே)
சிறந்த அறிமுகம் – நடிகர் – ஜி.வி.பிரகாஷ்குமார்
தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் மோகன் பாபுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
விழாவில் எண்ணற்ற தென்னிந்தியத் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.