ilakkiyainfo

65 வயது பெண்ணுக்கு 18 மாதங்களில் 8 குழந்தைகள்: – முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள்

65 வயது பெண்ணுக்கு 18 மாதங்களில் 8 குழந்தைகள்: – முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள்
August 22
16:59 2020

பீகார் மாநிலத்தில் அரசு உதவித்தொகையை பெற 65 வயது பெண் 18 மாதங்களில் 8 குழந்தைகள் பெற்றதாக கணக்கு காட்டிய அவலம் நடைபெற்றுள்து.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தின் முசாஹரி தொகுதியில் உள்ள சோதி கோதியா கிராமத்தில் வசிப்பவர் லீலா தேவி (65). இவர் தனது நான்காவது குழந்தையான ஒரு பையனை கடைசியாக 21 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றெடுத்தார். மாவட்டத்தில் உள்ள தேசிய சுகாதாரத் திட்டத்தின் (என்.எச்.எம்) கீழ் தேசிய மகப்பேறு நன்மை பெறும் (என்.எம்.பி.எஸ்) பல பயனாளிகளில் இவரும் ஒருவர்.

இந்தத் திட்டத்தின் கீழ், தாய்க்கு 1,400 ரூபாயும், ஏ.எஸ்.ஹெ.ஏ தொழிலாளிக்கு ரூ .600 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. லீலா தேவியின் கணவர் ஒரு விவசாயி. கடந்த 18 மாதங்களில் லீலா எட்டு முறை குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக எச்.டி. வைத்திருக்கும் ஆவணங்கள் காட்டுகின்றன.

இந்த திட்டத்தின்கீழ் இவர் பயனாளியாக சேர்க்கப்பட்டது ஒரு வாரத்திற்கு முன்புதான் இவருக்கு தெரிய வந்துள்ளது. இவரது கணக்கு இருக்கும் ஆபரேட்டர் மையத்தை அணுகியபோது, வழக்கு தாக்கல் செய்ய வேண்டாம் எனவும், இவர் பெயரில் பெறப்பட்ட பணத்தைத் திருப்பி கொடுத்துவிடுவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

இந்த திட்டத்தின்கீழ் லீலாவின் பெயர் மட்டுமல்ல, ஒரே மாவட்டத்தின் 50-க்கும் மேற்பட்ட பெண்களின் பெயர்களில் அடிக்கடி பணம் டெபாசிட் செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேபோல் மற்றொரு பெண் சாந்தி தேவி (66) ஒரே இரவில் 10 மணிநேர இடைவெளியில் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக காட்டப்பட்டுள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த சபீனா கட்டூன் (59) என்ற பெண்ணும் பயனாளியாக காட்டப்பட்டுள்ளார்.

மோசடி வெளிச்சத்திற்கு வந்த பின்னர், மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திரசேகர் சிங் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி முசஹாரியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் கிளை மேலாளர் சரஞ்சித் குமார், சிஎஸ்பி மையத்துடன் இணைக்கப்பட்டுள்ள போதிலும், ஆனால் அவருக்கு இதுபற்றி தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்த பரிவர்த்தனை முறையில் விரல் அச்சு மற்றும் ஆதார் அடையாள அட்டை இணைக்கப்பட்ட போதிலும் இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com