தென்னாப்பிரிக்காவில் 62 வயது பெண் ஒருவரை ஒன்பது வயது சிறுவன் திருமணம் செய்துள்ளான். இந்த ஒன்பது வயது சிறுவனுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் Saneie Masilela ஏற்கனவே திருமணமாகி ஐந்து குழந்தைகள் பெற்ற 62 வயது Helen Shabangu என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டான். Helen Shabangu என்பவரின் மூத்த குழந்தைக்கு 38 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்கா பள்ளி ஒன்றில் நான்காவது கிரேடு படிக்கும் இந்த சிறுவன், Saneie Masilela ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்தவன். அந்த பெண் சமீபத்தில் இறந்துபோனதால் அவனுடைய பெற்றோர் Helen Shabangu என்ற பெண்ணிடம் $1000 பெற்றுக்கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தனர்.
இருவீட்டாரின் சம்மதத்துடன் சுமார் 100 உறவினர்கள் மத்தியில் Helen Shabangu தனது ஒன்பது வயது கணவருக்கு மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணம் குறித்து அவர் கூறியதாவது, “இது முறைப்படி நடந்த திருமணம். மற்றவர்கள் இந்த திருமணம் குறித்து கூறும் கருத்துக்கள் எனக்கு தேவையில்லாதது. எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இந்த திருமணம் பூரண திருப்தி தருகிறது ‘ என்று கூறியுள்ளார்.
திருமணம் நடந்தாலும் தொடர்ந்து பள்ளிக்கு சென்று ஒழுங்காக படித்து பெரிய ஆளாக வருவேன். எனது லட்சியம் எதிர்காலத்தில் நான் ஒரு டாக்டராக வேண்டும் என்பதுதான். படிப்புடன் எனது மனைவியையும் நான் நன்றாக கவனித்துக்கொள்வேன் என திருமணம் முடிந்த பிறகு Saneie Masilela கூறியுள்ளான்.