“மும்பையின் புறநகரில் உள்ள அம்பால் பகுதியில், விரேந்தர் என்ற இளைஞன், ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தான். நல்ல சம்பளம், கை நிறையப் பணம் என்று வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.

இவன் வசித்தது, அமரா என்ற நாற்பது வயதுப் பெண்மணியின் வீட்டில். அமராவின் குடும்பத்தில் அவளும், அவளது இருபது வயது மகள் மஞ்சரியும் மட்டுமே இருந்தனர்.

தனியாக இருக்கும் பெண்களின் வீட்டில், திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு வாடகைக்கு இடம் கொடுப்பது அரிது. ஆனால், வீட்டில் ஆண் துணை இல்லை. மகளும், தாயும் மட்டுமே இருக்கிறோம் என்றாலும், நெருங்கிய உறவினரின் பரிந்துரையின் பேரில், விரேந்தர் என்ற ஐடி ஊழியரை தன் வீட்டின் மாடியில் குடியேற அனுமதித்திருந்தார் அமரா.

விரேந்தர், வெகு சீக்கிரமே அமராவின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவன் ஆனான். குறிப்பாக, அமராவின் மகள் மஞ்சரி மீது அவனுக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த ஈர்ப்பின் காரணமாக, அவர் அந்தக் குடும்பத்துக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தான்.

விரேந்தரின் இந்தக் குணமும், அவன் ஈட்டும் பணமும் அமராவைக் கவர்ந்தது. காலப்போக்கில், அமராவின் ஈர்ப்பு, ஒரு தீவிர மோகமாக உருவெடுத்தது. எப்படியாவது விரேந்தரை தன் கணவனாக்கிக்கொள்ள வேண்டும் என்று அவள் முடிவெடுத்தாள். ஆனால், அது அவ்வளவு எளிதாக இருக்காது என்பது அவளுக்குத் தெரியும்.

அதனால், ஒரு நயவஞ்சகமான திட்டத்தை உருவாக்கினாள்.அமராவின் மகள் மஞ்சரி, தான் வேலை செய்யும் இடத்தில் நளின் சிங் என்ற இளைஞனைக் காதலித்து வந்தாள். இதை அறிந்த அமரா, தன் மகளை ஒரு பகடைக் காயாகப் பயன்படுத்த முடிவெடுத்தாள்.

அவள் விரேந்தரிடம் சென்று, தன் மகளைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டாள். மஞ்சரி மீது ஏற்கெனவே ஈர்ப்பு கொண்டிருந்த விரேந்தர், மறுபேச்சுப் பேசாமல் சம்மதித்தான். அவன் அறியாதது, இது ஒரு கொடூரமான சதித் திட்டம் என்பதுதான்.

திருமணம் முடிந்து, முதல் இரவிற்கான ஏற்பாடுகள் நடந்தன. மஞ்சரி, அறையின் விளக்குகளை அணைக்குமாறு விரேந்தரிடம் சொன்னாள். இருள் சூழ்ந்த அறையில், சம்பிரதாயங்கள் நடந்தன.

அதன்பிறகு அவர்கள் தீட்டிய திட்டத்தின் படி மஞ்சரிக்கு பதிலாக, அமரா மெதுவாக அறைக்குள் நுழைந்தாள். இருட்டிலும், இருவரின் குரல்களும் ஒரே மாதிரியாக இருந்ததாலும், விரேந்தர் அறையில் இருப்பது யார் என்பதை அறிய முடியவில்லை.

அவன் மஞ்சரி என்று நினைத்து, அமராவுடன் முதலிரவை கொண்டாடினான். மேற்படி சமாச்சாரங்கள் முடிந்து லைட் போட்ட பிறகு தான் விரேந்தருக்கு உண்மை புரிந்தது.

தன் மனைவிக்கு பதிலாக, மாமியார் அறையில் இருந்ததை கண்டு அவன் அதிர்ச்சி அடைந்தான்.
இந்த சதித்திட்டத்தை உணர்ந்த விரேந்தர் உடனடியாக காவல் துறைக்குத் தகவல் கொடுத்தான். காவல்துறை விசாரணையில், இன்னும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன.

மஞ்சரி, தன் காதலன் நளினுடன் ஓடி விட்டாள். இதற்கு உதவியது, சாட்சாத் அமராவே தான். தன் மகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, தனக்கான வாழ்க்கை துணையை தேடி, தன் ஆசையைத் தீர்த்துக்கொள்ள அமரா இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது தெரிய வந்தது.

இந்தச் சம்பவம், மகாராஷ்டிரா மக்களை ஒரு நிமிடம் ஸ்தம்பிக்கச் செய்தது. காதல், துரோகம், மோ*கம் மற்றும் ஒரு விசித்திரமான திருமணம் என, ஒரு திரைப்படம் போல நடந்த இந்த நிகழ்வு, பலரது மனதை உலுக்கியது.

 

Share.
Leave A Reply