இன்று பிரான்ஸில் ஒரு கேஸ் பேக்டரியில் ஐஎஸ் தீவிரவாதிகள் திடீர்த் தாக்குதல் நடத்தினர். அதில் ஒருவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டார்.
அதேபோல குவைத்திலும் ஷியா பிரிவினரின் மசூதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் துனீஷியா தலைநகர் டுனிஸ் நகரில் இன்று வெளிநாட்டினரைக் குறி வைத்து ஹோட்டல் ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலில் ஈடுபட்டது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எனத் தகவல்கள் கூறுகின்றன. பிரான்ஸிலும் இன்று ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் திட்டமிட்டு இன்றைய தினத்தில் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
துனீஷியாவின் தலைநகரான துனிசில் கடந்த மார்ச் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலாப் பயணிகள். இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.
பிரான்சில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ஒருவர் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டார், இருவர் காயம்
பிரான்சின் தென் கிழக்கு பகுதியில் அமெரிக்க வாயு நிறுவனம் ஒன்றில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டிருபப்துடன் இருவர் காயம் அடைந்துள்ளனர்.
இஸ்லாமிய கொடிகளைத் தாங்கிய வண்ணம் காஸ் நிறுவனத்தை நோக்கி ஓடிய சிலர் அங்கு ஒருவரை அவரது தலையைத் துண்டித்து கொலை செய்ததுடன், அங்கிருந்த வாயுக் குதங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதேவளை, இருவர் வாகனம் ஒன்றை ஓட்டிச் சென்று வெடிக்கச் செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொலை செய்யப்பட்டவரின் துண்டித்தத தலையை கொண்டு சென்ற ஒரு பயங்கரவாதிகளில் ஒருவர், நிறுவனத்தின் வாயிலில் அந்த தலையை குத்தி வைத்ததாக ஏ.எவ்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொல்லப்பட்டவரின் தலையில் அராபிய மொழியில் செய்தி ஒன்று எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்தியவர்களில்… “முப்பது வயதுடைய ஒரு நபரை அந்த தொழிற்சாலையில் வைத்து தாங்கள் கைது செய்திருப்பதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நபர் பிரான்ஸின் புலனாய்வுத்துறையினருக்கு தெரிந்த நபர் என்றும் பிரான்ஸின் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வளாகத்தில் இஸ்லாமிய கொடிகள் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த பிராந்தியத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சம்பவ இடத்துக்கு பிரெஞ்சின் உள்துறை அமைச்சர் பெர்னார் கசனவ் சென்றிருக்கிறார்.
இந்த தாக்குதல் சந்தேகத்துக்கிடமின்றி ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று விபரித்திருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி கொலண்டே பிரசல்ஸில் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
பிரசல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் அவர் இந்த தாக்குதலை அடுத்து இன்று மாலை பிரான்ஸ் திரும்புகிறார்.