news@ilakkiyainfo.com

பிரிவுகள்

BREAKING NEWS

3 பெண்கள்.. 3 ஹோட்டல் ரூம்கள்.. 3 கொலைகள்.. 10 நாட்களில் ஒட்டுமொத்த நகரையும் அதிர வைத்த கொடூரம்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் கடந்த 10 நாட்களில் வெவ்வேறு சம்பவங்களில் 3 இளம் பெண்கள் ஹோட்டல் அறைகளில் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதையடுத்து குறைந்த கட்டணத்தில் ரூம்களை வாடகைக்கு வழங்கும் சிறிய ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் மீது தற்போது போலீசாரின் கவனம் திரும்பியுள்ளது. ஆண் மற்றும் பெண் ஜோடியாக வந்து ரூம் எடுத்து தங்கும்போது, அவர்களில் ஒருவர் மட்டும் வெளியேறி மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பாமல் இருந்தால் ஹோட்டல் ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று ...

`ரிஸ்க் எடுத்தால் ரூ.1 கோடி!'- Hormuz-ல் கப்பலை இயக்குபவர்களுக்கு `ஆஃபர்' வழங்கும் நிறுவனங்கள்!

இந்த ஆபத்து வெறும் அச்சம் மட்டுமல்ல. 2026-ல் ஹார்முஸ் பகுதியைச் சுற்றிய கடல் வழிகளில் பல கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன. ஜூன் மாதம் MT Settebello என்ற எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தீ விபத்து ஏற்பட்டு, மூன்று கடற்பணியாளர்கள் உயிரிழந்தனர்.உயிருக்கு ஆபத்து நிறைந்த கடல் வழியில் எண்ணெய் கப்பல்களை இயக்கும் கேப்டன்களுக்கு மாதம் சுமார் ரூ.1 கோடி சம்பளம், அதோடு ஒவ்வொரு பயணத்துக்கும் பல லட்சம் ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, கவனம் பெற்றிருக்கிறது.ஆபத்தான ஹார்முஸ் நீரிணைமேற்கு ஆசியாவில...

சௌதி சிறையில் சிவராசா அனோஜன் மீது தாக்குதல்' மேன்முறையீடு செய்ய இன்னும் 10 நாட்கள் மாத்திரமே- காப்பாற்ற இலங்கை அரசு என்ன செய்கிறது?

சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் மீது சிறைச்சாலைக்குள் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் இன்று தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். சிவராசா அனோஜன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமாம் சிறைச்சாலையில் வைத்தே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதையும் அமைச்சர் இதன்போது உறுதிப்படுத்தினார்.சக கைதி ஒருவர...

“‘சிரிலிய சவிய’ நிதி கணக்கிலேயே உள்ளது; ஊழல் இடம்பெறவில்லை ”

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, ‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான நிதி முறைகேடு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிகா பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.இதேவேளை, தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் கரியவசம், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவி...

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு ; நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு பிரதேசமொன்றில் வீட்டில் தனிமையில் இருந்த 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதாகக் கூறப்படும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் கணக்கெடுப்பு உத்தியோகத்தராக பணியாற்றும் 51 வயதுடைய நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (06) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.கடந்த 4 ஆம் திகதி குறித்த வீட்டின் குடிநீர் பாவனை அளவை கணக்கெடுப்பதற்காக (மீற்றர்) குறித்த உத்தியோகத்தர் அங்கு சென்றுள்ளார்.அப்போது வீட்ட...

பௌத்த துறவிகள், ராஜபக்‌ஷ குடும்பத்தினர் மீதான கைதுகள்: தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த அரசு முனைகிறது - சரத் வீரசேகர குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்தை சீரழிக்கும் வகையிலும், இனவாதிகளையும் தமிழ் புலம்பெயர்ந்தோரையும் திருப்திப்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அவர், நாட்டில் தீவிரவாதம் குறித்து முதன்முதலில் எச்சரித்தவர் ஞானசார தேரர் எனவும், அவரது கூற்...

ஷிரந்தி-ராஜபக்ஷ- மற்றும் முன்னாள் அமைச்சர் ரோகித போகொல்லகம கைது

முன்னாள் முதன்மைப் பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிரந்தி ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று காலை கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் ஷிரான்தி ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டது.இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு...

ஆசிரியர் தினத்தில் சோகம்: லொறி மோதி ஆசிரியை உயிரிழப்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமிலதீவு வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று (06) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வலையிறவு பாடசாலையில் கற்பித்து வந்த ஆசிரியையான புளியந்தீவினைச் சேர்ந்த கமலநாதன் மதிவதனி (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஆசிரியை மீது லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்த...

இளைஞனின் துயரத்தில் அரசி­யலும் மத­வா­த­மும்

இஸ்லாம் மதத்துக்கு எதிரான இறை நிந்தனை கருத்தை சமூக ஊடகத்தில் பதிவு செய்தமைக்காக சவூதி அரேபியா நாட்டின் சட்டத்தின் படி மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞர் அனோஜனின் உயிரை காப்பாற்றுவதற்கு பல தரப்பிலிருந்தும் மனிதாபிமான மற்றும் சட்டப்போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இராஜதந்திர நகர்வொன்றை மேற்கொண்டுள்ளது. இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் கூட அவருக்கு மன்னிப்பு கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து வருவதோடு தமது ஆதரவான கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்...

ஈரான் போரின் பாடங்கள்: தாய்வான் நெருக்கடியை எதிர்கொள்ள ஜப்பானுக்கு எழுந்துள்ள இரு முக்கிய சவால்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மூண்ட போர், உலகளாவிய புவிசார் அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையிலும், பெப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் மீது தீவிரத் தாக்குதல்களைத் தொடங்கின. இதற்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடாப் பிராந்தியம் முழுவதும் பரவலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. உலகின் மிக முக்கியமான எரிசக்தி...

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் வெட்டிக் கொலை

நீர்கொழும்பு, போலவலான – வேபட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 43 வயதுடைய நபர் ஒருவர், கூரிய ஆயுதங்களால் வெட்டியும் குத்தியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.செவ்வாய்க்கிழமை (06) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், அடம்பகஹவத்தை வடக்கு, கதிரான இரட்டைச் சந்தி பகுதியைச் சேர்ந்த தம்மாடகே சந்தன பிரசன்ன பெரேரா என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் வட்டிக்கு பணம் வழங்கும் தரகராகச் செயற்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கட்டுவப்பிட்டிய நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் கார...

நெடுந்தீவு - யாழ்ப்பாணம் கப்பல் சேவைக்கு ஒப்புதல்

‘பிரஜா சக்தி’ தேசியத் திட்டத்தின் கீழ், நெடுந்தீவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் புதிய பயணிகள் கப்பல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் அதனைச் சூழவுள்ள தீவுகளுக்கும், குறிப்பாக நெடுந்தீவுக்கும் இடையில் பெருமளவிலான பயணிகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்குப் போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையைப் போக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.இதன்படி, ஒரே நேரத்தில் சுமார் 150 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய பயணிகள...

ஷிரந்தி ராஜபக்‌ஷவை ஒக்டோபர் 13 இல் முன்னிலையாகுமாறு நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியான திருமதி ஷிரந்தி ராஜபக்‌ஷவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். மேற்கொள்ளப்பட்டு வரும் நிதிசார் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காகச் சிங்கப்பூர் சென்றிருந்த திருமதி ஷிரந்தி ராஜபக்‌ஷ, திங்கட்கிழமை(05) இரவு மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து...

நாமல் ராஜபக்‌ஷ, ஜானகி சிறிவர்தனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' நிதி முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ மற்றும் கிரிஷ் குழுமத்தின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளரும் வர்த்தக பிரமுகருமான ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் அக்டோபர் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் இன்று (06) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது,...

சங்குப்பிட்டி பாலம் நாளை முதல் தற்காலிக மூடப்படும்

சங்குப்பிட்டி பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக  புதன்கிழமை (07.10.2026) முதல் 12.10.2026 வரை பாலம் முழுமையாக மூடப்படவுள்ள நிலையில்,   காலை 9:00 மணி வரை மாத்திரம் பேருந்து சேவைகள் வழமைபோன்று பாலத்தினூடே இடம்பெறும். அதன் பின்னர், மாற்று வழித்தடத்தின் ஊடாகப் பேருந்து சேவைகள் தொடரும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.சங்குப்பிட்டி பாலம் மூடப்படும் காலப்பகுதியில் பயணிகளுக்கு ஏற்படக்கூடி...

போன தேர்தலுக்கு 31 கோடி ரூபாய் செலவு பண்ணேன்.. தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா பேசும் வீடியோ வைரல்

திருப்பூர்: தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளராக களமிறங்கியுள்ள சத்யபாபாமா பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த தேர்தலில் 31 கோடி செலவு செய்தேன் என சத்யபாமா பேசும் காட்சிகள் அரசியலில் அதிர வைத்துள்ளது. தேர்தல் ஆணையம் விதிப்படி ஒரு வேட்பாளர் 45 லட்சம் மட்டுமே தேர்தல் செலவுக்காக செலவு செய்ய வேண்டும். ஆனால் சத்யபாமாவே கடந்த தேர்தலில் 31 கோடி செலவு செய்ததாக பேசும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்யபாமா பேசுவது போல் வீடியோ தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியி...

டெல் அவிவ் விமான நிலையத்தில் மோத திட்டமிட்ட ஃப்ளைதுபை துணை விமானி' - விசாரணையில் வெளியான புதிய தகவல!!

ஃப்ளைதுபை விமானத்தைக் கடத்த முயன்றதாகக் குற்றம்சாட்டப்படும் துணை விமானி, அந்த விமானத்தை இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திலோ அல்லது அங்குள்ள உயரமான கட்டடம் ஒன்றிலோ மோதச் செய்யத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ஃப்ளைதுபை விமானத்தைக் கடத்த முயன்றதாகக் குற்றம்சாட்டப்படும் துணை விமானி, அந்த விமானத்தை இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திலோ அல்லது அங்குள்ள உயரமான கட்டடம் ஒன்றிலோ மோதச் செய்யத் திட்டமிட்டிருந்ததாக ...

யாழ்பாணத்தில் இளம்பெண் பலி, தாய் படுகாயம் – தப்பிச் சென்ற வாலிபர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு!

தகாத உறவும் தடம் மாறும் யாழ்ப்பாணமும்! யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த பின் அப்பெண்ணின் தாயாரை கத்தியால் குத்தி படுகாயத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் புகையிரதம் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். உயிரிழந்த பெண்ணின் நண்பர் ஒருவருக்கும் பெண்ணின் தாயாருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதன் காரணமாக குறித்த பெண்ணை கொலை செய்துள்ளதோடு தாயாரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படு...

சிவில் உடையில் நீதிமன்றத்தில் ஆஜரானார் ஞானசார தேரர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று (06) செவ்வாய்க்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நேற்று (05) திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலைப்பட்டு, அவரது எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தை நடைமுறைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, இன்றைய தினம் சிறைச்சாலையின் கைதிகளுக்கான சீருடையில் கொழும்பு மேல...

தினமும் 15 முறை 'I Love You' சொல்வாள்: ராஷ்மிகா உடனான காதல் வாழ்க்கை குறித்து விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி!"

:"திரையுலகின் பிரபல நட்சத்திர ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, தங்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் உறவு குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சுவாரஸ்யமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்..நேர்காணலின் போது தங்களது காதல் பிணைப்பு குறித்துப் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா தன்னிடம் காட்டும் அன்பை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். "உறவுகளைக் கையாள்வதில் என்னை விடவும் ராஷ்மிகா மிகவும் முதிர்ச்சியுடையவர். தினமும் எனக்குக் குறைந்தது 10 முதல் 15 முறையாவது 'I Love You' என...

மணப்பெண்களுக்கு 'அண்ணன் சீர்' திட்டம்.. ரூ.812 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு...

திருமணமாகும் மணப்பெண்களுக்கு அண்ணன் சீராக 8 கிராம் (22 காரட்) தங்க நாணயமும், ஒரு பட்டு புடவையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டத்தை தவெக தேர்தல் அறிக்கையில் வழங்கியிருந்தது.தற்போது அதை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு நடவடிக்கையை தொடங்கி உள்ளது.ஏற்கனவே கடந்த பட்ஜெட் தொடரில் இத்திட்டத்திற்கு ரூ.813 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்திருந்தார். இந்நிலையில் அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அரசாணைதற்போது வெளியிடப்பட்டுள்ள ...

முக்கிய பரிவர்த்தனைகளுக்கு TIN புதிய நுழைவாயிலாகிறது : 2026 நவம்பர் 1 முதல் என்ன மாற்றம்?

வங்கி, சொத்து, வாகனம் மற்றும் வணிகப் பதிவுகளில் புதிய இணக்கப்பாட்டு நடைமுறை – TIN சான்றிதழைச் சமர்ப்பித்தல் கட்டாயம்.  இலங்கையின் வரி நிர்வாகத்தில் வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) முக்கியமான பரிவர்த்தனைகளுடன் இணைக்கப்படும் புதிய கட்டம் உருவாகியுள்ளது. IRD-யின் Circular No. SEC/2026/E/07 dated 22 September 2026 படி, குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் தனிநபர்கள் TIN சான்றிதழைச் சமர்ப்பிக்கவோ அல்லது TIN சரிபார்ப்பை மேற்கொள்ளவோ வேண்டும். 2026 நவம்பர் 1 முதல், வங்கி, சொத்து, வாகனம், வணிகம்...

கோட்டாபயவை சுற்றிவளைக்கும் இரு விசாரணைகள்!

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் நீண்ட காலமாகத் தீர்வு காணப்படாத முக்கியமான வழக்குகளில் ஒன்றாகக் காணப்படும் லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்ட விவகாரத்தின் விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.பல வருடங்களாக பாரியளவில் முன்னேற்றம் அடையாமல் தாமதமடைந்த இந்த வழக்கு விசாரணைகள் 2025- – 2026 காலப்பகுதியில் துரிதப்படுத்தப்பட்டு தற்போது விசாரணைகள் முன்னோக்கி நகரத் தொடங்கியுள்ளன.லலித், குகன் ஆகியோர் காணாமல் போன காலப்பகுதியில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆ...