ஷோபா சக்தி கதாநாயகனாக நடித்த 'தீபன்' திரைப்படத்துக்கு கேன்ஸ் திரைப்படவிழாவில் மிகச் சிறந்த படத்துக்கான விருது
இலங்கைத் தமிழர்களின் பின்னணி கொண்ட "தீபன்" பிரெஞ்சு திரைப்படமானது, கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மிகச் சிறந்த திரைப்படத்துக்கான "பாம் டி"ஓர்" (Palme d'Or) விருதை வென்றுள்ளது. பிரான்ஸில் வசிக்கும் இலங்கையரான பிரபல எழுத்தாளர் ஷோபா சக்தி எனும் அன்தன...
