19 பாகை சரிவில் கட்டப்பட்ட கயிற்றில் நடந்தும் கண்ணைக் கட்டிக்கொண்டு கயிற்றில் நடந்தும் சாதனை
அந்தரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாதனை செய்வதில் ஆர்வம் காட்டி வரும் சாகஸக் கலைஞர் ஒருவர், அமெரிக்க சிக்காகோ நகரில் ஆற்றுக்கு மேலாக 500 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் எவ்வித பாதுகாப்பு உபகரணமுமின்றி நடந்து உலக சாதனை படைத்துள்ளார்.
நிக் வல்லெண்டா (35 வயது) என்ற மேற்படி சாகஸக் கலைஞர், சிக்காகோ ஆற்றின் மேலாக 19 பாகை கோணத்தில் கட்டப்பட்ட முதலாவது கயிற்றை 6 நிமிடங்கள் 52 செக்கன்களில் நடந்து கடந்துள்ளார்.
அந்த சாதனையை நிறைவேற்றியதையடுத்து அவர் மரினா நகர கோபுரங்களுக்கிடையே கட்டப்பட்டிருந்த இரண்டாவது கயிற்றை கண்கள் கட்டப்பட்ட நிலையில் காதுகளின் உதவியுடன் இடத்தையறிந்து ஒரு நிமிடம் 17 செக்கன்களில் கடந்துள்ளார்.
இதன்போது மணிக்கு 30 மைல் வேகத்தில் உறையவைக்கும் குளிர்காற்று வீசியுள்ளது.
அவரால் மேற்கொள்ளப்பட்ட சாகஸமானது டிஸ்கவரி தொலைக்காட்சி ஊடகத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
அவர் இந்த சாகஸத்தின் போது கீழே விழுந்து மரணமடையும் பட்சத்தில் அந்தக் காட்சி ஒளிபரப்புப் செய்யப்படுவதை தடு க்கும் முகமாக மேற்படி நேரடி ஒளிபரப் புக் காட்சி 10 செக்கன் தாமதமாக ஒளிபரப்பப்பட்டது.
கீழே பாதுகாப்பு வலை விரிக்கப்பட்டதால் உடலில் பாதுகாப்பாக எதுவித கயிறும் கட்டப்படாது நிக் வல்லெண்டா மேற்கொண்ட சாதனையை வீதியெங்கும் பெருந்தொகையான மக்கள் கூடியிருந்து திகிலுடன் அவதானித்துக் கொண்டிருந்தனர்.
ஆரம்பத்தில் அவர் முதலாவது கயிற்றை 15 பாகை சரிவாகக் கட்ட தீர்மானித்த போதும், பின்னர் சாகஸ முயற்சியின் கடின தன்மையை அதிகரிக்க அவர் அந்த கயி ற்றை மேலும் சரித்து 19 பாகை சரிவுக்கோணத்தில் கட்டியுள்ளார்.
நிக் வல்லெண்டா தனது குடும்பத்தின் கயிற்றில் நடக்கும் 7 ஆவது தலைமுறை சாகஸக் கலைஞர் ஆவார்.
அவரது பூட்டனாரான கார்ல் வல்லெண்டா (73 வயது) 1978 ஆம் ஆண்டில் புயர்ரோறிக்கோவில் அந்தரத்தில் கயிற்றில் நடந்த போது கீழே விழுந்து மரணமானார்.
தனது சாதனை குறித்து நிக் வல்லெண்டா விபரிக்கையில், ”அந்தரத்தில் கயிற்றில் நடக்கும் போது அச்ச உணர்வு மனதில் தோன்ற கால அவகாசம் அளிக்காதீர்கள்” என்று கூறினார்.
நிக் வல்லெண்டா இந்த சாகஸ செயற்பா ட்டின் மூலம் மிகவும் உயரமாக சரிவாக கட்டப்பட்ட கயிற்றில் நடந்தமை, அதி உயர மாக கட்டப்பட்ட கயிற்றில் கண்ணை கட் டிக்கொண்டு நடந்தமை ஆகிய இரு உலக சாதனைகளை படைத்துள்ளார்.
அவரது சாதனைகளை அங்கீகரித்து கின் னஸ் உலக சாதனை பதிவேட்டு அதிகாரி கள் சான்றிதழ்களை வழங்கியுள்ளனர்.
Daredevil Nik Wallenda on a blindfolded walk between Chicago skyscrapers (video ,photos)
Daredevil Nik Wallenda wowed the world on Sunday November 2 when he crossed between two Chicago skyscrapers blindfolded and without a harness.
The 35-year-old heir to the Flying Wallendas’ family business completed two of the back-to-back walks in Chicago, Illinois, one blindfolded, without a harness or safety net
Spectators watch daredevil Nik Wallenda walk the tightrope
It took him about six and a half minutes to walk the wire from the Marina Towers to the Leo Burnett Building across the Chicago River
Nik Wallenda during the first stretch of his tightrope walk
The next stage of Wallenda’s high-wire event he undertook blindfolded – a walk between the two Marina City towers, Chicago landmarks. He made the stretch in little more than a minute.
Members of the media watch as daredevil Wallenda walks on the tightrope
Wallenda walks blindfolded on a tightrope between the Marina City west tower to the Marina City East tower in Chicago
The shadow of daredevil Nik Wallenda is cast against the West Marina Tower
Wallenda waves after walking blindfolded on a 5/8 inch (1.586cm) wire for a distance of 94 feet (28.65m) at a height of 543 feet (165.51m) between the Marina City towers apartment buildings in Chicago. The daredevil had just completed a walk on a 3/4 inch (1.91cm) wire between buildings at an incline of estimated at 15 to 19 degrees for a distance of 454 feet (138.38m) and a starting height of 588 feet (179.22m) to a finishing height of 671 feet (204.52m) across the Chicago River
The large crowd watches Nik Wallenda during his walk
Nik Wallenda walks on the tightrope from the Marina City West tower across the Chicago River to the top of the Leo Burnett Building in Chicago
Daredevil Nik Wallenda gets a hug after his walk.