ilakkiyainfo

eBay யில் ஏல விற்பனைக்கு விடப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்

eBay யில் ஏல விற்பனைக்கு விடப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்
April 19
10:27 2016

 

பிரபல ஏல விற்பனை இணையத்தளமான ஈபேயில் (eBay) பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் கடந்த வாரம் இனந்தெரியாத நபர் ஒருவர் ‘விற்பனைக்கு’ விட்டிருந்தார்.

பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக மேற்படி நபர் இந் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். ‘உதவாக்கரை பாகிஸ்தானியப் பிரதமர் நவாஸ் ஷெரீப் விற்பனைக்கு’ என அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.

16101_nawaz-sharif-on-ebay-600
‘இனியும் இது அவசியமில்லை. வேலை செய்யும் நிலையில் இது இல்லை. இது ஒரு போதும் வேலை செய்யவில்லை. தவறு கொண்டதாகவும் மோசடியானதாகவும் இது உள்ளது’ என மேற்படி நபர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இந்த ஏலவிற்பனை அறிவித்தலை பார்த்தவர்களில் சுமார் 100 பேர் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை வாங்குவதற்கு விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமை பிற்பகல் வரை சுமார் 66,200 ஸ்ரேலிங் பவுண்கள் வரை (சுமார் ஒரு கோடியே 36 இலட்சம் ரூபா) வழங்குவதற்கு விண்ணப்பதாரிகள் முன்வந்திருந்தனர்.

பின்னர் இந்த அறிவித்தல் ஈபே இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் உட்பட நாடுகளின் ஊடகங்கள் மூலம் இந்த செய்தி பரவி வருகிறது.

பிரதமர் நவாஸ் ஷெரீப் – திருமதி கல்சூம் நவாஸ் ஷெரீப் தம்பதியினருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இந் நால்வரில் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் அரசியல்வாதியான மகள் மரியம், மகன்கள் ஹசன், ஹுசைன் ஆகியோர் பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

16101Kalsoom-Nawaz-Sharifபிரதமர் நவாஸ் ஷெரீப் – திருமதி கல்சூம் நவாஸ் ஷெரீப்

இவர்களுக்குச் சொந்தமான லண்டன் ரியல் எஸ்டேட், பனாமாவின் சர்ச்சைக்குரிய மொசாக் பொன்செகா நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதேவேளை ‘பனாமா பேப்பர்ஸ்’ தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக ஆணைக்குழுவொன்றை தான் நியமிப்பதாக இம் மாத முற்பகுதியில் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

16101daughter-of-nawaz-sherif
பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் ஷெரீப்

இதேவேளை, பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தினால் தமது குடும்பத்தினரிடையே மன அழுத்தங்கள், பிளவுகள் ஏற்பட்டிருப்பதாக வெளியான செய்திகளை மரியம் நவாஸ் ஷெரீப் நிராகரித்துள்ளார். தமது குடும்பத்தினர் ஐக்கியமாக இருப்பதாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com