ilakkiyainfo

LTTEயுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் இருவர் உட்பட 7பேர் மலேஷியாவில் கைது!

LTTEயுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் இருவர் உட்பட 7பேர் மலேஷியாவில் கைது!
October 11
07:21 2019

விடு­தலைப் புலிகள் அமைப்­புடன் தொடர்பு கொண்­டி­ருந்­தமை தொடர்பில் மலே­ஷி­யாவின் அர­சி­யல்­வா­திகள் இருவர் உட்­பட 7 பேர் அந்­நாட்டு பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­தாக மலே­ஷிய பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் விடு­தலைப் புலிகள் இயக்­கத்­துக்கு மலே­ஷி­யாவில் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது.

மலாக்கா ஆட்­சிக்­குழு உறுப்­பினர் சாமி­நாதன் மற்றும் நெகிரி சாம்­பிலான் சிரம்பா ஜெயா சட்­ட­மன்ற உறுப்­பினர் குண­சே­கரன் ஆகியோர் உட்­பட ரவாங்கைச் சேர்ந்த 28 வய­தான வர்த்­தகர், 28 வயதா காப்­பு­றுதி முகவர், பேராக் சிப்­புட்டைச் சேர்ந்த 37 வய­தான டெக்ஸி ஓட்­டுநர், கூலிம் கெடாவைச் சேர்ந்த தொழில்­நுட்ப உத­வி­யாளர் மற்றும் சுங்கை பூலோவைச் சேர்ந்த 57 வய­தான உண­வக உரி­மை­யாளர் ஆகி­யோரே இவ்­வாறு கைது­செய்­யப்­பட்­டுள்­ள­தாக புக்கிட் அமான் பயங்­க­ர­வாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் டத்தோ அயூப் கான் நேற்று செய்­தி­யாளார் சந்­திப்பில் குறிப்­பிட்டார்.

dfffggபயங்­க­ர­வாத எதிர்ப்பு பிரி­வி­னரால் நேற்று காலை 9 மணி­முதல் பிற்­பகல் 2 மணி­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யினுள் நாட்டின் பல்­வேறு மாநி­லங்­களில் இவர்கள் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.

கைது­செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள் ஏழு பேரும் விடு­தலை புலிகள் இயக்­கத்தை ஊக்­கு­வித்­தமை, நிதி­வ­ழங்­கி­யமை, ஆட்­சேர்ப்பு செய்­தமை மற்றும் இந்த இயக்­கத்­துடன் தொடர்­பு­டைய பொருட்­களை விநி­யோ­கித்­தமை தொடர்பில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளனர்.

இவர்­களில் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இருவர் கடந்த வருடம் மலாக்­காவில் நடந்த விடு­தலைப் புலிகள் மாவீ­ரர்கள் தின நிகழ்­வு­களில் கலந்­து­கொண்டு உரை நிகழ்த்­தி­ய­துடன் இயக்­கத்­துக்கு ஆத­ர­வாக துண்டு பிர­சு­ரங்­க­ளையும் விநி­யோ­கித்­துள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது என அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

2009 ஆம் ஆண்டு முதல் இது­வ­ரையில் விடு­தலை புலிகள் இயக்­கத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தில் 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் பயங்கரவாத செயல்கள் ஊடுறுவாமல் இருப்பதற்கு மலேஷிய பொலிஸார் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அயுப் கான் மேலும் தெரிவித்தார்

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

இந்த குட்டி சாத்தான்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நான் சொல்ல தேவை இல்லை , இவங்களை ஒரு நாட்டில்...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com