LTTE ஒரு குற்றவியல் அமைப்பல்ல: சுவிஸ் சமஷ்டி நீதிமன்றம் தீர்ப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு குற்றவியல் (கிரிமினல் ) அமைப்பு அல்ல என சுவிட்ஸர்லாந்து சமஷ்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த 12 பேரையும் அந்நீதிமன்றம் விடுவித்துள்ளது.
1999 முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) நிதி சேகரித்ததுன் மூலம் சுவிஸ் குற்றவியல் விதிகளை மீறியதாக மேற்படி 12 பேர் மீது சுவிஸர்லாந்து சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள், உலகத் தமிழர் ஒத்துழைப்புக் குழுவுக்கும் (WTCC) நிதி உதவி அளித்ததாக சுவிஸ் சட்ட மா அதிபர் திணைக்களம் சந்தேகித்தது..
ஆனால், 2018 ஜூன் மாதம் சுவிஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், உலகத் தமிழர் ஒத்துழைப்பு அமைப்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உயர்மட்டத் தெடர்புகள் போதுமானளவு உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்தது.
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது ஓர் குற்றவியல் அமைப்பாக கருதப்படுவதற்கு போதுமானளவு ஆதாரம் இல்லை எனவும் அந்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இத்தீர்ப்புக்கு எதிராக சுவிஸ் சட்ட மா அதிபர் திணைக்களம் கடந்த ஏப்ரல் மாதம் மேன் முறையீடு செய்திருந்தது.
இம்மேன்முறையீடு தொடர்பாக சுவிஸ் சமஷ்டி நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இன்று செவ்வாய்க்கி;ழமை வெளியிடப்பட்டு;ளளது.
இதன்படி, முந்தைய தீர்ப்பை நீதிமன்றம் மீளஉறுதிப்படுத்தியுள்ளது. சுவிட்ஸர்லாந்து சட்ட விதிகளின்படி, மேற்படி நிதி சேகரிப்பின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் குற்றவியல் அமைப்பு அல்ல என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment