news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அடுத்தது இதுதான் நடக்கும்! Scene 1, 2, 3.. இதைதான் த்ரிஷா செய்யப்போகிறார்.. பகீர் தகவல்

04 Aug, 2026

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்கூரிய வகையில் பேசிய நிலையில், அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. 


காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில் திமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்கூரிய வகையில் பேசியதாக புகார்கள் எழுந்தன. 

இதற்காக அவர் இன்று கைது செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அவரை இன்று இரவுக்குள் விடுவிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் எந்தவொரு நடிகையின் பெயரையும் குறிப்பிடவில்லை என்றும், அரசியல் ஆதாயத்திற்காகவே அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதன் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய அரசியல் சதியை அம்பலப்படுத்தி அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில், திரு.உதயநிதி அவர்கள் அந்த நடிகையின் பெயரைக் கூட சொல்லவில்லை. அவர் பேச்சு வெட்டி ஒட்டி நேற்றில் இருந்து பரப்பப்படுகிறது! 

என்ன காரணம்? எழுதி வைத்துக் கொள்ளுங்கள் பின் வரும் காட்சிகள் விரைவில் நடக்கும்..

காட்சி 1 :

“அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. தேவை இல்லாமல் என்னை ஒரு பெண் என்றும் பாராமல் மானபங்கப்படுத்தினர். உரிய நடவடிக்கை எடுத்து என் மானத்தைக் காத்த முதல்வர் விஜய் அவர்களுக்கு நன்றி” என அந்த நடிகை ஒரு அறிக்கை வெளியிடுவார் அல்லது பேட்டி குடுப்பார்..

காட்சி 2 :

இந்த பரபரப்பைக் காரணமாக வைத்து வரும் இடைத் தேர்தலில் நடிகை நிறுத்தப்படுவார்.. வெற்றி பெற வைக்கப்படுவார்.

காட்சி 3 : 

கட்சியின் இரண்டாம் கட்ட தலைவராகவும் பிற்காலத்தில் கட்சியின் தலைவியாகவும் கட்சிக்குள் முன்னிலைப் படுத்தப்படுவார்.

அந்த நடிகர் அந்த நடிகையை தனது கட்சியில் கொண்டு வந்து சேர்த்து முன்னிலைப்படுத்தினால் அவரது தற்குறி தொண்டர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப் போவதில்லை. அவரது மங்குனி அமைச்சர்களும் ஒன்றும் சொல்லப் போவதில்லை. 

இதைச் செய்வதற்கு எதற்கு இத்தனை டிராமா?? எதற்கு திரு.உதயநிதியின் மேல் பழி?? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லாவின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் தங்களது கருத்துக்களை கமெண்டுகளாக பதிவிட்டு வருகிறது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உதயநிதி ஸ்டாலின் மீதான கைது நடவடிக்கையை மறைக்கவும், அதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவுமே திமுகவினர் இதுபோன்ற கற்பனைக் கதைகளைப் பரப்பி வருவதாக விஜய் ஆதரவாளர்கள் கடும் கண்டனமும் மறுப்பும் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!