ன்னும் 600,000 டொலர் மாயம் ; ஐவருக்கு பயணத்தடை
30 Apr, 2026
ஜனாதிபதியின் விசேட தூதர் ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் குறித்து ஈரானிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கொண்டிருந்த போதும் தாக்குதலுக்கான சவூதி உந்துதல் தொடரவே செய்தது.
அந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த போது சவூதி முடிக்குரிய இளவரசருக்கும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஸேஷ்கியனுக்கும் இடையிலான தொலைபேசி அழைப்பும் இடம்பெற்றது.
அதை தொடர்ந்து ஈரான் மீதான தாக்குதல் ஒன்று நடந்தால் அதற்கு சவூதி வான்வெளியை அல்லது அதன் பிரதேசங்களைப் பயன்படுத்த இளவரசர் அனுமதிக்க மாட்டார் என்று றியாத் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
இளவரசரின் நிலைப்பாட்டை அவரது சகோதரர் சவூதியின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான் உறுதி செய்தார்.
அவர் கடந்த ஜனவரி மாதம் வொஷிங்டனில் அமெரிக்க அதிகாரிகளுடன் மூடிய கதவுகளுக்குள் இரகசிய கூட்டங்களை நடத்தினார். இந்த இரகசிய சந்திப்புக்களின் போது ஈரான் மீது தாக்குதல் ஒன்றை நடத்தாவிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அவர் அமெரிக்காவை எச்சரித்துள்ளார் என்றும் இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் ஈரானும் சுன்னாஹ் பிரிவு தலைமையிலான சவூதி அரேபியாவும் நீண்ட காலமாக முஸ்லிம் உலகின் தலைமைத்துவத்துக்கான தீவிரமான போட்டியைக் கொண்டுள்ளன. இது பிராந்தியத்தில் இதற்கு முன்னரும் சில மறைமுக யுத்தங்களை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில் தனது உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் இஸ்லாம் தொடர்பான சவூதி அரசின் நிலைப்பாடுகள் சில சமயங்களில் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களிடையே கவலையையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
உதாரணமாக, அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலிய யுத்தங்களின் போது, பாதிக்கப்பட்ட முஸ்லிம் நாடுகளுக்கு சார்பாக நிற்பதற்கு பதிலாக மற்ற தரப்பிலேயே சவூதி அரேபியா நின்றுள்ளது.
எகிப்தில் 61 ஆண்டுகளில் முதல் முறையாக மக்களின் விருப்பப்படி சுதந்திரமான மற்றும் நியாயமான ஜனாதிபதித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது முர்சியின் இஸ்லாமிய சகோதரத்துவ அரசாங்கத்தை கவிழ்க்க சவூதி அரேபியா குவைத் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பன இணைந்து பதினொரு பில்லியன் டொலர்களை செலவிட்டன.
இதற்கிடையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஸும் இஸ்ரேலின் நலனுக்காக முழு பிராந்தியத்தையும் சீர்குலைப்பதில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பங்காளியாக மாறியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு முன்னதாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபீ, பிரபல ஊடகவியலாளர் டக்கர் கார்ல்சனுடனான ஒரு பேட்டியில் நைல் நதியிலிருந்து யூப்ரடீஸ் வரையிலான அனைத்து நிலங்களையும் இஸ்ரேல் எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று கூறி இருந்தார். இது வெறும் தற்செயலான ஒரு கூற்று அல்ல.
ஈராக்கில் உள்ள யூப்ரடீஸ் நதியிலிருந்து எகிப்தில் உள்ள நைல் நதி வரை பரவியுள்ள, பிராந்தியத்திற்கான ஒரு விவிலிய விரிவாக்க பார்வை மூலமான தனது "அகண்ட இஸ்ரேல்" கோட்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதில், கடந்த 27 மாதங்களாக இப்பகுதி முழுவதும் இஸ்ரேல் ஏற்படுத்தி வரும் பேரழிவை அரபு தலைவர்கள் கவனித்து வருகின்றனர்.
இந்த தீய நோக்கத்திற்காக இஸ்ரேல், அரபு நிலங்களில் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலைகளை நடத்தியது மட்டுமல்லாமல், பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கான தனது திட்டங்களையும் சுட்டிக்காட்டியது. அது மட்டுமன்றி மேற்குக் கரை சிரியா மற்றும் லெபனானிலும் தனது பிடியை ஆழமாக்கியுள்ளது.
சுருக்கமாக கூறுவதாயின் இஸ்ரேலின் முழுமையான பிராந்திய மேலாதிக்கத்தின் நோக்கம் ஒருபோதும் தெளிவாக இருந்ததில்லை.
மேலும் ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் விரிவாக்கம் மற்றும் அதன் பிராந்திய சக்தியின் விரிவாக்கம் ஆகிய இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே உள்ளது.
இது ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு தெரிவிக்கப்படும் அரபு எதிர்ப்பலைகளின், மையத்தில் ஏற்படுத்த விளையும் கட்டமைப்பு மாற்றமாகும்.
பிராந்திய பாதுகாப்பையும் மற்றும் பொருளாதார நலன்களையும் பாதுகாக்க, வளைகுடா நாடுகள் மத்தியில் ஸ்திரத்தன்மை அவசியம். ஈரான் மீதான தாக்குதல் மற்றும் அதற்கு எதிரான ஈரானிய பதிலடி, என்பன எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பது குறித்து அவர்கள் குறிப்பாக கவலை அடைந்துள்ளனர்.
ஒருவேளை, ஐக்கிய அரபு அமீரகத்தைத் தவிர, பெரும்பாலான அரபு ஆட்சிகள் இப்போது இஸ்ரேலை பிராந்தியத்தில் மிகவும் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தும் சக்தியாகவே கருதுகின்றன.
இஸ்ரேலிய விரிவாக்கவாதம், ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிமுறைகளைப் பொருட்படுத்தாமல், எல்லைகளைத் தாண்டி தாக்குதல் நடத்துவதற்கான அதன் விருப்பம், மற்றும் பிராந்திய மேலாதிக்கத்தை வெளிப்படையாகக் கடை பிடிப்பது என்பன அரபு தலைவர்கள் ஆபத்தை மதிப்பிடும் பொறிமுறையை அடிப்படையில் மாற்றி அமைத்துள்ளன.
அரபு தலைவர்கள் இப்போது தாங்கள் ஏற்கெனவே "அகண்ட இஸ்ரேலின்" பாதையில் வீழ்ந்திருக்கலாம், அல்லது அவர்கள் இஸ்ரேலின் அடுத்த இலக்காக இருக்கலாம் என்று அஞ்சுகின்றார்கள்.
இதில் பரிதாப நிலை என்னவென்றால் இஸ்ரேலிய போர்க்குணமும்-இஸ்ரேலின் வேண்டுதலின் பேரிலான அமெரிக்க போர்க்குணமும் இப்போது ஒரு பிளவுபட்ட பிராந்தியத்தை ஒன்றிணைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இது ஒன்றில் பொதுவான நலன்களின் அடிப்படையில் அல்லது குறைந்தபட்சம் ஒரு பொதுவான அச்சுறுத்தலின் அடிப்படையில் கூட அமையலாம்.
லத்தீப் பாரூக்
Comments
Leave a Reply
Write the comments...............