அமெரிக்க பொருளாதாரத்தை உலுக்கும் பணவீக்கம் ; அழுத்தத்தில் டொனால்ட் ட்ரம்ப்
Donald Trump தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் தற்போது அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு காரணமாக கடுமையான பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறது.
குறிப்பாக Strait of Hormuz நீரிணை மூடப்பட்டுள்ளமை உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா எண்ணெய் விநியோகத்தில் தற்சார்புடைய நாடாக இருந்தாலும், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கும், வீடுகளை வெப்பப்படுத்துவதற்கும் அதிக செலவுகளைச் சந்தித்து வருகின்றனர். இதனால் அத்தியாவசியமற்ற செலவுகளை குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலைமை அமெரிக்காவின் மொத்த பொருளாதார வளர்ச்சியையும் பாதித்துள்ளதுடன், பணவீக்கம் மேலும் அதிகரிக்க காரணமாகியுள்ளது. அதேநேரம், இது அரசியல் ரீதியாகவும் Donald Trump தலைமையிலான நிர்வாகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் தங்கள் தொகுதிகளுக்கு செல்லும் போது, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகள் குறித்து பொதுமக்களின் அதிருப்தியையும் கேள்விகளையும் எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களின் வாழ்க்கைச் செலவுகளை குறைப்பதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனங்களும் தற்போது அதிகரித்து வருகின்றன.
இந்த பொருளாதார நெருக்கடி நீடிக்கும் ஒவ்வொரு நாளும் அமெரிக்க பொருளாதாரத்தில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், நிலைமையை விரைவில் கட்டுக்குள் கொண்டு வர Donald Trump முயற்சித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!