இலங்கையின் வாசலை தட்டிய போர்
09 Mar, 2026
அவற்றில் எட்டு நிரந்தரமான தளங்களாகக் கருதப்படுகின்றன. பஹ்ரைன், எகிப்து, ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், கத்தார், சவூதி அரேபியா, சிரியா, ஓமான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள இராணுவ தளங்கள் இதில் அடங்கும். இவற்றுக்கு அப்பால் துருக்கி மற்றும் ஜிபூட்டியில் அமெரிக்கா பெரிய இராணுவத் தளங்களை பராமரித்து வருகின்றது.
பஹ்ரைனில் 9,000 அமெரிக்க துருப்புக்களுக்கு இடமளிக்கும் வகையில் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படை பிரிவின் தலைமையகம் உள்ளது. வளைகுடா, செங்கடல், அரேபிய கடல், மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளை கட்டுப்படுத்தும் தலைமை இடமாக இது அமைந்துள்ளது.
குவைத்தில் ஆரிஃப்ஜான் முகாம் அமைமந்துள்ளது. இது அமெரிக்க இராணுவ மையத்தின் தந்திரோபாய தலைமையகத்தின் அல்லது செண்ட்காமின் இராணுவ அங்கமாக செயல்படும் ஒரு இராணுவப் பிரிவாகும்.
குவைத்தின் ஈராக் எல்லையில் அலி அல்-சேலம் விமானத் தளமும் உள்ளது. மற்றொரு குவைத் தளம் கேம்ப் பியூஹ்ரிங் ஆகும். இது ஈராக் மற்றும் சிரியாவுக்குச் செல்லும் பிரிவுகளுக்கான அமைவிடமாக இருந்து வருகின்றது. மொத்தத்தில் சுமார் 13,500 அமெரிக்க துருப்புக்கள் குவைத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 3,500 அமெரிக்க துருப்புக்களும் வொஷிங்டனும் அமீரகமும் பகிர்ந்து கொள்ளும் அல்-தஃப்ரா விமானத் தளமும் உள்ளன. இது ஐ.எஸ் குழுவுக்கு எதிரான பணிகளுக்காகவும் பிராந்தியத்தில் உளவு பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஈராக்கில் அமெரிக்காவின் பொறுப்பில் அன்பார் என்ற இடத்தில் உள்ள ஐன் அல்-அசாத் விமானத் தளமும் இதில் அடங்கும். ஓரளவு தன்னாட்சி அதிகாரம் பெற்ற குர்திஸ்தான் பிராந்தியத்தில் எர்பில் விமானத் தளமும் உள்ளது. இது பயிற்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.
சவூதி அரேபியாவில் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு திறன்களோடு சுமார் 2,700 அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இங்கு தலைநகர் றியாத்திற்கு அருகிலுள்ள இளவரசர் சுல்தான் விமானத் தளம் ஒரு முக்கிய விமானப்படை மையமாகும்.
அங்குள்ள சொத்துக்களில் பேட்ரியாட் ஏவுகணை (வான்வழி எதிர்ப்பு ஏவுகணைகள்) மற்றும் அவற்றை இயக்கும் கருவிகள் என்பனவும் அடங்கும். இந்த தளம் மத்திய கிழக்கில் அதன் பணிகளுக்கு ஜோர்டானின் அஸ்ராக்கில் உள்ள முவாஃபாக் சால்டி விமானத் தளத்தை முக்கிய மையமாக பயன்படுத்துகின்றது. இது அமெரிக்காவின் 332 ஆவது விமான படைப் பிரிவை உள்ளடக்கியது.
ஜோர்டானில் சுமார் 3,800 அமெரிக்க துருப்புக்களும் ஈராக்கில் 2,500 துருப்புக்களும் சிரியாவில் சுமார் 2,000 பேரும் நிலை கொண்டுள்ளனர்.
துருக்கியில் மேலதிக தளமாக துருக்கியப் படைகளுடன் இணைந்து இயங்கும் முக்கிய தளம், தெற்கு அதானாவில் உள்ள இன்சிர்லிக் விமானத் தளமாகும். அந்த தளத்தில் அமெரிக்க அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
சமீபத்தில் இந்தப் பிராந்தியத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அமெரிக்க சொத்துக்கள் என்ன?
தற்போது மத்திய கிழக்கில் சுமார் 40,000 அமெரிக்க துருப்புக்கள் இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவர்களில் கால் பகுதியினர் அல்-உதைட்டில் உள்ளனர். இங்கு போர் விமானங்கள், இராணுவ தாங்கிகள், வான்வழி எரிபொருள் நிரப்பும் வசதிகள், மற்றும் உளவுத்துறை சொத்துக்கள் என ஏராளமான வளங்கள் குவிக்கப்பட்டுள்ளன. பணியாளர்களைப் பொறுத்தவரை அடுத்த மிகப் பெரிய தளம் பஹ்ரைனில் உள்ள கடற்படைத் தளம் என்று கருதப்படுகின்றது.
தற்போது மத்திய கிழக்கிற்கு கடற்படை வலுவூட்டல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. தென் சீனக் கடல் பகுதியில் இருந்து வெளியேறி தற்போது செண்ட்காம் பகுதியில் சேவையாற்றும் வகையில் அரபிக் கடல் பிரதேசத்துக்குள் நுழைந்துள்ள இராட்சத யூ.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் மத்திய கிழக்கு செயற்பாடுகளின் மையப்பகுதியாக இருக்கும்.
யூ.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கி கப்பல் ஆகும். அதன் தாக்குதல் அணியில் டோமாஹாக் கப்பல் ஏவுகணைகள், ஆர்லே பர்க்- ரக வழிநடத்தலின் கீழ் செயற்படும் ஏவுகணைகள் நாசகாரிகள் என்பன அடங்கும். இவை ஈரானிய எல்லைக்குள் புகுந்து ஆழமாக தாக்கக்கூடிய திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்..
மேலும் இந்த கப்பலில் பல்வேறு வகையான தாக்குதல் விமானங்கள், இலத்திரனியல் யுத்த சாதனங்கள், மற்றும் (ரேடார்களை செயலிழக்க செய்யும்) ரேடார்-ஜாமிங் விமானங்கள், ஹெலிகொப்டர்கள், மிகவும் பலம் வாய்ந்த ஸ்டெல்த் ரக போர் விமானங்கள், மற்றும் அவற்றின் செயற்பாடுகளுடன் தொடர்புடைய பல படைப்பிரிவுகள் என்பனவும் உள்ளன.
யூ.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் கப்பலில் 5,680 பணியாளர்கள் உள்ளனர். செண்ட்காம் பகுதியில் உள்ள யூ. எஸ்.எஸ் மெக்ஃபால், யூ.எஸ்.எஸ் மிட்சர் மற்றும் மத்தியதரைக் கடலில் உள்ள யூ.எஸ்.எஸ்.ரூஸ்வெல்ட் உள்ளிட்ட பிராந்தியத்தில் ஏற்கனவே நிலைகொண்டிருந்த கடற்படை கப்பல்களும் தற்போது இந்த அணியில் இணைந்துள்ளன. ஈரானை இலகுவாக தாக்கக்கூடிய தூரத்திற்குள் அமெரிக்கப் படைகள் மற்றும் தாக்குதல் விமானங்கள் ஆயுதங்கள் என்பன நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
"கடற்படை நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக அமெரிக்க இராணுவம் அதன் தரை வழி செயற்பாடுகளையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தவும் தயாராகி வருகின்றது. எதிர்வரும் நாட்களில் ‘தாட்’ ரக வான்வழி பாதுகாப்பு முறையும் இணைத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக" இஸ்ரேலின் சேனல் 13 செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
ஜோர்டானில் உள்ள முவாஃபாக் சால்டி (Muwaffaq Salti Air Base) விமானத் தளத்தில் எவ்-15 ரக போர் விமானங்களின் ஒரு படைப்பிரிவைக் கட்டியெழுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக திறந்த அடிப்படையில் பரவலாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய விமான கண்காணிப்பு தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன.
மத்திய கிழக்கை நோக்கி செல்லக்கூடிய இன்னும் பல வான்வழி நடவடிக்கைகள் குறித்த சமிக்ஞைகளும் வெளியாகி இருப்பதாக மேலும் தெரிய வந்துள்ளது.
இது மிகவும் சித்தரிக்கப்பட்ட ஏற்பாடுகளாகவும் தெரிகின்றது. கட்டார் ஊடாக ஈரான் அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால் டோஹாவும் மற்றும் வொஷிங்டனும் முன்கூட்டியே தங்களை நன்கு தயார் செய்து கொள்ள முடிந்தது. தனது எல்லைக்குள் ஈரான் மீண்டும் மீண்டும் பதிலடி தாக்குதல் நடத்துவது குறித்து கட்டார் மிகவும் எச்சரிக்கையாக இருக்கின்றது.
சுற்றி உள்ள அரபு நாடுகளும் இஸ்ரேல் இந்தப் பிராந்தியத்தின் இராணுவ மேலாதிக்கமாக தன்னை விஸ்தரித்துக் கொள்வதற்கான பாதையில் விரைவாக பயணிக்கின்றது என்றும் இந்த இலக்கை அடைவதற்கான ஒரு இலகுவான வழி அண்டை நாடுகளை துண்டு துண்டாக பிளவுபடுத்துவதே என்பதையும் நன்கு அறிந்துள்ளனர். இது அவர்களிடையே ஒரு வகை அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது
காஸாவின் தாக்கம் இந்தப் பிராந்தியம் முழுவதும் உணரப்படுகின்றது. காஸாவே ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஈரானுக்கு ஒரு இராணுவ தோல்வியாக அமைந்தது.
காஸாவின் விளைவு வேறு எதுவும் இல்லை. காஸாவை நசுக்கி மத்திய கிழக்கை மறுவடிவமைப்பதாக நெதன்யாஹு பலமுறை பல இடங்களில உறுதியளித்துள்ளார். இதற்காக அவர் அடிக்கடி "மத்திய கிழக்கின் முகத்தை மாற்றுகின்றார்" என்றும் இந்த மோதல் ஒரு "மறுபிறப்புக்கான போர்" என்றும் டேவிட் ஹெர்ஸ்ட் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், ஈரான் மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தாக்குதலும் ஒரு விரிவான பிராந்திய மோதலைத் தூண்டும் என்று ஈரானின் ஆன்மிக தலைவர் ஆயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார்
. "அவர்கள் ஒரு யுத்தத்தை தொடங்கினால் இந்த முறை அது ஒரு பிராந்தியப் போராக இருக்கும் என்பதை அமெரிக்கர்கள் அறிந்து கொள்ள வேண்டும்" என்பதே ஈரானின் இறுதி எச்சரிக்கையாகும்.
லத்தீப் பாரூக்
Comments
Leave a Reply
Write the comments...............