news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஆட்டோ சாரதி மீது மூர்க்கத் தாக்குதல்! -யாழ்-ஆரியகுளப் பகுதியில் சம்பவம்

24 Mar, 2026
யாழ்.நகர் பகுதியில் 5 பேரை ஒரே ஆட்டோவில் ஏற்றிச் செல்ல மறுத்த சாரதி மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலால் காயமடைந்த ஆட்டோ சாரதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்தினை நடத்தியவர்களில் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- நேற்று முன்தினம் மாலை 3.45 மணியளவில் யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து பிக்மீ மூலம் அழைப்பினை மேற்கொண்ட நபர்கள் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர். குறித்த ஆட்டோவின் சாரதியை ஆரியகுளம் சந்திக்கு வரு மாறு கூறியுள்ளனர். அந்த அறிவுறுத்தலுக்கு அமைய ஆரியகுளப் பகுதிக்கு அவர் சென்ற போது, மது போதையில் நின்ற 5 இளைஞர்கள் குறித்த முச்சக்கர வண்டியில் அனைவரையும் ஏற்றுமாறு வேண்டுகோள் வைத் துள்ளனர். 5 பேரை ஏற்ற முடியாது என சாரதி மறுத்த நிலை யில், போதையில் நின்ற இளைஞர்கள் ஆத்திரத்து டன் பொல்லுகள் மற்றும் இரும்பு கம்பிகள் சகிதம் துரத்தி துரத்தி தாக்கியுள்ளனர். அத்துடன் கிப்பி வளர்ந்திருந்த அவரின் தலைமுடியினையும் கத்தி யால் அறுத்து உள்ளனர். இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதி யைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் பலத்த காயங் களுக்கு உள்ளாகி, யாழ்.போதனா வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிச ர் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். ஏனைய நபர்களை கைது செய்வதற்காக தற்பொ ழுது மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

Comments

Write the comments...............