news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்திய உதவியுடன் இலங்கை பொலிஸுக்கு 134 கெப் வாகனங்கள்: 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான நன்கொடை

26 May, 2026

இந்திய - இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ், இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு 134 கெப் வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. சுமார் 300 மில்லியன் ரூபாய் மதிப்புடைய இந்த வாகனங்கள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் இந்திய அரசாங்க பிரதிநிதிகள் இந்த வாகனங்களை ஒப்படைத்துள்ளனர்.

இந்த வாகனங்கள் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் பொலிஸ் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பகுதிகளில் உள்ள பல பொலிஸ் நிலையங்களுக்கு இந்த வாகனங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, எதிர்காலத்திலும் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும் என உறுதியளித்துள்ளார்.

இந்நிகழ்வின் போது, பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தியாவின் இந்த உதவி இலங்கை–இந்தியா இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!