news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கையின் ஒரு பில்லியன் டொலர் போலி இறக்குமதி மோசடியின் பின்னணி

13 Sep, 2026


இலங்­கையில் எவ்­விதப் பொருட்­களும் நாட்­டிற்குள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டாத நிலையில், போலி ஆவ­ணங்கள் மற்றும் போலி நிறு­வ­னங்­களை பயன்­ப­டுத்தி சுமார் ஒரு பில்­லியன் அமெ­ரிக்க டொலர் (சுமார் 330  பில்­லியன் ரூபா) வெளி­நா­டு­க­ளுக்குச் சட்­ட­வி­ரோ­த­மாகக் கடத்­தப்­பட்­டுள்­ளது.

நாட்டின் முன்­னணி வணிக வங்­கி­களின் பாது­காப்பு வழி­மு­றை­களைத் தவிர்த்தும், கணினி அமைப்பில் உள்ள துளை­களைப் பயன்­ப­டுத்­தியும் இந்த பெரும் நிதி­யா­னது வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது.

நிதி புல­னாய்வுப் பிரிவு இது­கு­றித்த அபா­யங்கள் பற்றி 2021 ஆம் ஆண்­டி­லேயே எச்­ச­ரித்­தி­ருந்த போதிலும், போதிய கண்­கா­ணிப்­புகள் இன்­மையால் இந்த மோசடி தொடர்ந்­தி­ருப்­பது பாரா­ளு­மன்றக் குழுக்­களின் விசா­ர­ணை­களில் அம்­ப­ல­மா­கி­யுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தில் நாட்டின் ஜனா­தி­ப­தியும் நிதி­ய­மைச்­ச­ரு­மான அநு­ர­கு­மார திசா­நா­யக்க ஆற்­றிய உரையின் போது, நாட்டில் இடம்­பெற்ற போலி இறக்­கு­ம­திகள் மூலம் நிதி சட்­ட­வி­ரோ­த­மாக வெளி­நா­டு­க­ளுக்குக் கடத்­தப்­பட்ட விவ­கா­ரத்தை முதன்­மு­தலில் வெளிப்­ப­டுத்­தினார்.

போதைப்­பொருள் கடத்தல், ஒழுங்­க­மைக்­கப்­பட்ட குற்­றங்கள் மற்றும் ஊழல் முறை­கே­டுகள் மூலம் உழைக்­கப்­பட்ட கறுப்புப் பணம், போலி நிறு­வ­னங்கள் மற்றும் போலி­யான இறக்­கு­மதி ஆவ­ணங்­களைப் பயன்­ப­டுத்தி தந்­தி­க­ளிப்­பான பணப்­ப­ரி­மாற்றம் மற்றும் முன்­பணக் கொடுப்­ப­ன­வுகள் மூலம் சட்­ட­வி­ரோ­த­மாக வெளி­நா­டு­க­ளுக்குக் கடத்­தப்­பட்­டுள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இதனைத் தொடர்ந்து, பாரா­ளு­மன்­றத்தின் அர­சாங்க பொறுப்­பு­மு­யற்­சிகள் பற்­றிய குழு (கோபா) மற்றும் அர­சாங்க நிதி பற்­றிய குழு (கோப்) ஆகி­ய­வற்றின் அமர்­வு­க­ளுக்குப் பொறுப்­பான அதி­கா­ரி­களும் பொலிஸ் உயர் அதி­கா­ரி­களும் அழைக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இதன்­போது, குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கர­விட்ட, பதி­வாளர் திணைக்­களம் மூல­மாகச் சுமார் 500 சந்­தே­கத்­திற்­கு­ரிய நிறு­வ­னங்­களின் தர­வுகள் ஆரா­யப்­பட்­ட­தா­கவும், அதில் நிதி மோச­டியில் ஈடு­பட்ட 105 நிறு­வ­னங்கள் அடை­யாளம் காணப்­பட்­ட­தா­கவும் தெரி­வித்தார்.

அந்­த­வ­கையில் ஒரு  பில்­லியன் டொலர் நிதிச் சூறை­யா­ட­லா­னது மிகத் திட்­ட­மிட்ட முறையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. நாட்­டிற்குள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டாத பொருட்­க­ளுக்குப் போலி­யாகத் தயா­ரிக்­கப்­பட்ட விலைப்­பட்­டி­யல்கள் மற்றும் சுங்­கப்­ப­டி­வங்­களைப் பயன்­ப­டுத்தி வெளி­நாட்டு வர்த்­த­கர்­க­ளுக்குப் பணம் அனுப்­பு­வது போன்று பணம் வெளிக்­கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது. இதற்­காக முக­வ­ரி­க­ளற்ற போலி நிறு­வ­னங்­களும், போலி பணிப்­பா­ளர்­களும் பயன்­ப­டுத்­தப்­பட்­டனர்.

வணிக வங்­கி­களில் வெளி­நாட்டுச் செல­வா­ணியை அனுப்­பும்­போது சுங்­கத்­து­றையின் சரி­பார்ப்புக் குறிப்பு எண்ணை (Customs Reference Number) உள்­ளி­டு­வது கணினி அமைப்பில் கட்­டா­ய­மாக்­கப்­பட்ட பாது­காப்பு விதி­யாகும். ஆனால், இந்த மோச­டியில் ஈடு­பட்­ட­வர்கள் வங்­கியின் மென்­பொருள் அமைப்பில் உள்ள கட்­டாயக் கட்­டத்தைத் ((Mandatory field)  தாண்டிச் செல்­வ­தற்­காக, அந்த எண்­ணிற்குப் பதி­லாக வெறும் புள்ளி (.) ஒன்றை மட்டும் உள்­ளீடு செய்து பாது­காப்பு சோத­னை­களைத் தவர்த்­துள்­ளனர்.

வணிக வங்­கி­களின் 13 நிறு­வ­னங்­களில் இருந்த 227 வங்கிக் கணக்­குகள் ஊடாக சுமார் 24,000 இற்கும் அதி­க­மான பரி­வர்த்­த­னைகள் இவ்­வா­றான எந்­த­விதச் சுங்கச் சரி­பார்ப்பும் இன்றி மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

குற்­றப்­பு­ல­னாய்­வுத்­து­றை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களில், தனியார் வங்­கி­களின் முகா­மை­யா­ளர்கள் மற்றும் அதி­கா­ரிகள் சில­ருக்கு இந்தச் சதித்­திட்­டத்தில் நேரடித் தொடர்பு இருப்­பது உறு­தி­யா­னது.

இவர்கள் வாராந்தம் 30,000 முதல் 1,00,000 ரூபா வரை­யிலும், சில சந்­தர்ப்­பங்­களில் இலட்­சக்­க­ணக்­கான ரூபாக்­க­ளையும் இலஞ்­ச­மாகப் பெற்­றுக்­கொண்டு இந்தச் சட்­ட­வி­ரோதப் பரி­மாற்­றங்­க­ளுக்கு அனு­மதி அளித்­துள்­ளமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன் அடிப்­ப­டையில், நான்கு தனியார் வங்­கி­களின் முகா­மை­யா­ளர்கள் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்ற உத்­த­ரவின் பேரில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த நிதி மோச­டி­யா­னது வெறும் வரி ஏய்ப்பு அல்­லது சட்­ட­வி­ரோத வர்த்­த­கத்­துடன் மட்டும் நின்­று­வி­ட­வில்லை; மாறாக, இலங்­கையில் இடம்­பெறும் போதைப்­பொருள் கடத்­தலின் மூலம் ஈட்­டப்­படும் கறுப்புப் பணத்தை தூய்­தாக்கும் முதன்மைப் பாதை­யா­கவும் காணப்­ப­டு­கி­றது.

நீர்­கொ­ழும்புப் பகு­தியில் கைது செய்­யப்­பட்ட போதைப்­பொருள் வியா­பா­ரி­க­ளிடம் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­களில், 'கொண்ட ரஞ்சி' மற்றும் 'வெலி சந்­தன' போன்ற சர்­வ­தேச போதைப்­பொருள் கடத்­தல்­கா­ரர்­களின் கணக்­கு­களில் இருந்த கோடிக்­க­ணக்­கான பணம், 'ஏ.வை.இன்­வெஸ்மன்ட்' போன்ற போலி இறக்­கு­மதி நிறு­வ­னங்­களின் கணக்­கு­க­ளுக்கு மாற்­றப்­பட்டு, அங்­கி­ருந்து அமெ­ரிக்க டொலர்­க­ளாக வெளி­நா­டு­க­ளுக்குக் கடத்­தப்­பட்­டி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன், பொலிஸ் விசா­ர­ணை­களின் போது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கர­விட்­டவின் தக­வ­லின்­படி, வெளி­நா­டு­க­ளுக்கு நிதியைத் திசை­தி­ருப்­பு­வ­தற்­காகக் கிரிப்­டோ­க­ரன்சி (Cryptocurrency) வலைப்­பின்­னல்­களும் தீவி­ர­மாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக யூ.எஸ்.டி.ரி. போன்ற நிலை­யான டிஜிட்டல் நாண­யங்கள் மூலம் பெருந்­தொகை நிதி­யா­னது எவ்­வித தட­யமும் இன்றி சர்­வ­தேச சந்­தை­க­ளுக்குக் கடத்­தப்­பட்­டுள்­ளது.

மத்­திய வங்­கியின் நிதி புல­னாய்வுப் பிரிவு அர­சாங்க நிதி பற்­றிய குழு (கோப்) வழங்­கிய அறிக்­கையில், 2021 ஆம் ஆண்­டி­லேயே இத்­த­கைய போலி இறக்­கு­மதி ஆபத்­துகள் மற்றும் வங்கி அமைப்பில் உள்ள பல­வீ­னங்கள் குறித்து தாங்கள் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­த­தாகத் தெரி­வித்­துள்­ளது.

இருப்­பினும், வர்த்­தக வங்­கி­களின் போதிய உள்­ளார்ந்த கண்­ணாய்வு, வாடிக்­கை­யா­ளரை அறிந்­து­கொள்­ளும் நடை­மு­றை­களில் உள்ள தாமதம் மற்றும் ஒழுங்­கு­முறை அமைப்­பு­களின் போதிய கண்­கா­ணிப்­பின்மை கார­ண­மாக இந்த மோசடி பல ஆண்­டு­க­ளாகத் தடை­யின்றி நடந்­துள்­ளது.

பொதுப்­பா­து­காப்பு அமைச்சு வழங்­கிய தர­வு­க­ளின்­படி, ஆபத்­து­டை­ய­தாக அடை­யா­ள­மி­டப்­பட்ட 28,000 பரி­வர்த்­த­னை­களில் 20,000 பரி­வர்த்­த­னைகள் எவ்­வித சாதா­ரண சரி­பார்ப்­பு­மின்றி வங்­கி­யி­னூ­டாக தடை­யின்றிச் சென்­றுள்­ளன. 3,300 இற்கும் மேற்­பட்ட போலி நிறு­வ­னங்கள் இந்தச் சட்­டத்­து­ளையைப் பயன்­ப­டுத்தித் தொடர்ச்­சி­யாக இயங்­கி­யுள்­ளன.

தற்­போது இந்த விவ­கா­ரத்தில் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யான ஏ.வை.இன்­வெஸ்மன்ட் நிறு­வ­னத்தின் ஜிப்ரி மொஹமட் மற்றும் அவ­ருடன் கூட்டுச் சேர்ந்த 4 வங்கி அதி­கா­ரி­களும் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் நாட்டில் இயங்கும் சுமார் 18,000 சட்­ட­பூர்­வ­மான உண்­மை­யான இறக்­கு­ம­தி­யா­ளர்­களின் அன்­றாட வர்த்­த­கத்­திற்கோ அல்­லது நாட்டின் ஒட்­டு­மொத்த இறக்­கு­மதி வர்த்­த­கத்­திற்கோ எவ்­வித தடங்­க­லையும் இடை­யூ­றையும் ஏற்­ப­டுத்­தாமல், இந்த மோச­டியை முன்­னெ­டுத்துச் சென்ற 105 பிர­தான தனி­ந­பர்கள் மற்றும் வலை­ய­மைப்­புக்­களை மட்­டுமே இலக்­கு­வைத்து மிகக் கடு­மை­யான குற்­ற­வியல் மற்றும் நிதிச் சட்டப் பிரி­வு­களின் கீழ் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக  பொலிஸ் விசா­ரணை அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

கொழும்புப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் பொரு­ளி­யல்­துறைப் பேரா­சி­ரியர் பிரி­யங்கா துனு­சிங்க, சட்­ட­வி­ரோத அந்­நியச் செலா­வணி வெளி­யேற்­ற­மா­னது இலங்­கையின் பொரு­ளா­தார மீட்­சிக்கு நீண்­ட­கால விளை­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூடும் என்றும், அது நாணய மாற்று விகிதம், பண­வீக்கம், முத­லீட்­டாளர் நம்­பிக்கை மற்றும் நிதிக்­குற்­றங்­களை எதிர்த்துப் போராடும் நாட்டின் திறன் ஆகி­ய­வற்றைப் பாதிக்கும் என்றும் தெரி­வித்தார்.

இதன் தாக்­கங்கள் அந்­நியச் செலா­வ­ணியின் உட­னடி இழப்­பையும் தாண்டி, சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்கள் மத்­தியில் இலங்­கையின் நம்­ப­கத்­தன்­மைக்கு சேதம் விளை­விக்­கக்­கூடும் என்றும். நாட்­டி­லி­ருந்து அந்­நியச் செலா­வணி வெளி­யேற அனு­ம­திப்­பது, சர்­வ­தேச சமூ­கத்­திற்கு மிகவும் எதிர்­ம­றை­யான செய்­தியை அனுப்­பு­கி­றது என்றும் அவர் எச்­ச­ரிக்கை விடுத்தார்.

நாட்டின் நிதிக் கட்­ட­மைப்பில் உள்ள பலவீனங்கள், சர்வதேச குற்றவியல் வலையமைப்புகளுக்கு இலங்கையை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதோடு, சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தின் பரிமாற்றத்தையும் எளிதாக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிட்டியின் சுயாதீன ஆய்வொன்றில், ஒட்டுமொத்தமாக 10 ஆண்டு காலப்பகுதியில் (2013–2022), வர்த்தக தவறான விலைப்பட்டியல் மற்றும் திருப்பி அனுப்பப்படாத ஏற்றுமதி வருமானம் காரணமாக இலங்கை 36–40 பில்லியன் டொலர்களை இழந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளது.

இத்தகைய மோசடி சம்பவங்களை ஒரு சில ஊழல்வாதிகள் மீது மட்டுமே நாம் சுமத்திவிட முடியாது. போதுமான கட்டுப்பாடுகள் இருப்பதை உறுதி செய்வதில் நிதி நிறுவனங்களின் நிர்வாகத்திற்கு குறிப்பிடத்தக்க பொறுப்புள்ளது. முறையான நிதி கட்டமைப்பின் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படும் இடங்களில், நிறுவன மேற்பார்வை குறித்த கடமையில் தோல்வி ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் பேராசிரியர் பிரியங்கா துனுசிங்க குறிப்பிட்டார்.


ஆர்.ராம்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!