2 முக்கிய கடல்வழிகள் முடக்கம் எண்ணெய் உலகுக்கு பேராபத்து! ஹவுதி–ஈரான் ஆட்டத்தால் உலகம் அதிர்ச்சி!
14 Sep, 2026
ஜுலை மாதம் 29ம் திகதி மூன்று சிறுமிகள் மோசமான முறையில் கொல்லப்பட்டமைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று தவறான தகவல்களை இவர்கள் பரப்பினர்.
ஆனால் அந்த தாக்குதலை நடத்தியவர் பிரிட்டிஷ் பிரஜையான ஒரு கிறிஸ்தவர் என்பதும் அவர் ருவாண்டா வம்சாவழியை சேர்ந்தவர் என்பதும் பின்னர் தெரிய வந்தது.
இந்தக் கொலைகளுக்குப் பின் ஒழுங்கமைக்கப்பட்ட இனவாத குண்டர்கள் ஒரு கூட்டத்தை ஏவிவிட்டு அந்த இடங்களில் உள்ள பள்ளிவாசல்களைத் தாக்கினர்.
அதன் பிறகு படிப்படியாக பிரிட்டன் முழுவதும் உள்ள பல நகரங்களில் முஸ்லிம் விரோத மற்றும் குடியேற்றவதசிகளுக்கு விரோதமான தாக்குதல்கள் தீவிரப்படுததப்பட்டன. வாகனங்களும் ஏனைய சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன. வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டன.
இதன் விளைவு முழு உலகும் பிரிட்டனில் தீவிர வலதுசாரிகளின் இனவாத கலவரங்களையும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் காண நேர்ந்தது.
பிரிட்டிஷ் கொள்கைகளினதும் சமூக கட்டமைப்பினதும் நேர்த்தியான தீவிரவாத மற்றும் இனவாத வெளிப்பாடுகளை உலகம் கண்டது.
பிரிட்டிஷ் அரசியலிலும் சமூகக் கட்டமைப்பிலும் பொதிந்து கிடந்த ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாதத்தை அது கோடிட்டுக் காட்டியது. தேசிய விவகாரங்களுக்காக பிரிட்டனில் சில குழுக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுவது இது ஒன்றும் புதியதல்ல. இவை வரலாற்று நிகழ்வுகளின் எதிரொலியாக இருக்கின்றன.
நாஸி ஜேர்மனியை போல, பாசிச இத்தாலியைப் போல இந்த வரிசையில் அண்மையில் இணைந்து கொண்ட இந்துத்வா இந்தியாவை போல, டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவைப் போல காலத்துக்கு காலம் கொந்தளிக்கும் ஒரு விடயமாகவே இது உள்ளது. இவை ஜனரஞ்சக அரசுகளின் சுயரூபங்களாகவே உள்ளன. இந்த அரசுகள் தான் தீவிரமான எதிர்மறை தேசியவாதத்தை ஒரு வகையான சர்வாதிகாரத்தை மற்றும் இனவாதத்தை மக்கள் மத்தியில் தூண்டி விடுகின்றன.
பிரிட்டிஷ் பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றி இந்தக் குழுக்களின் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்தார்.
இவை தனிமை படுத்தப்பட்ட சிறிய குழுக்கள் என அவர் வர்ணித்தார். இந்தக் கலவரங்களிலும் வன்முறைகளிலும் பங்கேற்ற அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கர்ச்சித்தார்.
ஆனால், இந்த தீவிரவாதிகளின் பாரதூரமான நிலை ஒரு புறம் இருக்க அவர்களை ஒரு சட்டவிரோத கூட்டத்தினர் என்றோ அவர்கள் செய்தது அப்பட்டமான பயங்கரவாதம் என்றோ மறந்தும் கூட ஒரு வார்த்தை கூட பிரதமரின் வாயில் இருந்து வரவில்லை என்பதையும் ஒரு பத்தி எழுத்தாளர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த சம்பவங்கள் இடம்பெற்ற போது, பிரிட்டனின் பயங்கர முகத்தை உலகம் பார்த்துக் கொண்டிருந்த போது, வன்முறைகள் தலைவரித்தாடிய போது பிரிட்டிஷ் பாதுகாப்பு பிரிவினர் எங்கிருந்தார்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது தான் மிகப் பெரிய கேள்வி.
அரசியல்வாதிகள் எவரும் இது குறித்து எதுவும் பேசவில்லை. யாரும் அறிக்கைகளை வெளியிடவும் இல்லை. காஸாவில் நடக்கின்ற இனப் படுகொலைகளுக்கு எதிராக பிரிட்டனில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற போது அவற்றுக்கு எதிராக கொதித்து எழுந்த, அவற்றை கண்டித்த, வெறுப்புணர்வை தூண்டும் ஆர்ப்பாட்டங்கள் என்றும் யூதர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் என்றும் இன்னும் வேறு பல வார்த்தை ஜாலங்களாலும் அவற்றை வர்ணித்து கோஷமிட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் சுவெல்லா பிராவர்மன் கூட இந்த தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக வாய் திறக்கவில்லை.
லண்டன் பல்லைக்கழகத்தின் வருகை தரும் ஆய்வாளரும், யுத்தத்தை நிறுத்தும் கூட்டமைப்பு என்ற அமைப்பின் இணை ஸ்தாபகருமான ஜோன் றீஸ் இவ்வாறு சுறுகின்றார் 'இத்தகைய கலகங்களைத் தடுப்பதற்கு முஸ்லிம் சமூகத்துடன் அவர்கள் நிபந்தனையற்ற ஒத்துழைப்புக்கு முன்வர வேண்டும்.
காரணம் றொபின்ஸன், பராஜ், பழமைவாத கட்சி மற்றும் அரசு ஆகிய பிரிவுகளால் இலக்கு வைக்கப்பட்ட சமூகம் அவர்கள் தான். அது மட்டுமன்றி ஈராக் யுத்தத்தின் பின் அடுத்தடுத்து ஏற்படட அரசியல் மயப்படுத்தப்பட்ட அலைகளால், உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிரான கூட்டு செயற்பாடு கொண்ட அரசியல் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் பாஸிஸத்துக்கு எதிரான முக்கியமானதோர் அம்சமாகும். பிரிட்டிஷ் வன்முறைகளின் பின்னணியிலும் இதே விடயம் தான் மத்திய மயப்படுத்தப்பட்டுள்ளது. முறிவடைந்துள்ள பிரிட்டனுக்கு தகுந்த மாற்றீட்டை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இடதுசாரி பிரிவு தள்ளப்பட்டுள்ளது.'
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!