1960களில் இரவோடு இரவாக வளைகுடாவை புரட்டிப் போட்ட, எண்ணெய் செல்வத்தின் கண்டு பிடிப்புக்குப் பிறகு, அதுவரை வறுமையால் பாதிக்கப்பட்ட மற்றும் கல்வியறிவற்ற பழங்குடி நாடோடி ஷேக் இராஜ்யங்களின் தொகுப்பாக 1971 டிசம்பர் 2 ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரக கூட்டமைப்பு உருவாகியது.

ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான்
அபுதாபி ஆட்சியாளர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் தலைமையில் ஆரம்பத்தில் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் க்வைன், மற்றும் புஜைரா, ஆகியவற்றைக் கொண்டதாக இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
ஹோர்முஸ் நீரிணையிலிருந்து மேற்கே பாரசீக வளைகுடா வழியாக பரவியிருந்த இந்தக் கூட்டமைப்பில் ஒரு வருடம் கழித்து ராஸ் அல் கைமாவும் சேர்ந்து கொண்டது. இது சுமார் 32,000 சதுர மைல் பரப்பளவில் மிகத் தளர்வாக வரையறுக்கப்பட்ட பழங்குடி குழுக்களின் செயற்கை நாடாகும்.
ஐக்கிய அரபு இராச்சியம் சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு பிரிட்டிஷ் உடந்தையுடன் ஈரான் முக்கிய தீவுகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது.
ஷேக் சயீதின் ஆட்சியின் போது, நாடு செழித்து பிரதான அரபு மற்றும் இஸ்லாமிய மன்றங்களில் உள்வாங்கப்பட்டாலும், ஷேக் மொஹம்மத் பின் சயீதின் தற்போதைய தலைமை, அரேபியர்கள் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு விரோதமான ஒரு அழிவுகரமான பாதையை நோக்கி நாட்டை அழைத்துச் சென்றுள்ளது,
இஸ்ரேலியர்களைப் போலவே ஐக்கிய அரபு அமீரகமும், இந்தப் பகுதியில் செயற்கையானதும் வீரியம் மிக்கதும் ஆகும் என்று கட்டுரையாளர் ரொபர்ட் இன்லகேஷ் கூறி உள்ளார்.
ஈரானை குறிவைத்து நேரடி தாக்குதல்களை நடத்தும் வகையில் அமெரிக்க-, இஸ்ரேலிய படைகளோடு இணைந்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் மீது தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஐக்கிய அரபு இராச்சியம் தனது தெஹ்ரான் எதிர்ப்பு வார்த்தைகளை தீவிரப்படுத்தி, அமெரிக்காவை முழு அளவிலான பிராந்திய போருக்குள் நுழையுமாறு மீண்டும் மீண்டும் வற்புறுத்தியும் வருகின்றது.

ஈரானுடனான போரில் செயல்பட இஸ்ரேல் தனது அயர்ன் டோம் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு பொறிமுறையை, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு வழங்கியுள்ளதோடு அதனை செயற்படுத்துவதற்காக ஏராளமான இராணுவ நிபுணர்களையும் அனுப்பி வைத்துள்ளது.
இவ்வாறு ஐக்கிய அரபு இராச்சியம், தனது அண்டை நாடான ஈரான் மீது சட்டவிரோத அமெரிக்க-, இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஒரு இராணுவ ஏவுதளத்தை வழங்கியுள்ளது மட்டுமல்லாமல், அதன் இயல்பாக்க ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இஸ்ரேலுடன் அதன் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் முற்றாக ஒருங்கிணைத்துள்ளது.
தங்கள் பிராந்தியத்தில் ஈரானிய பதிலடி தாக்குதல்களை, எதிர்த்துப் போராடுவதற்கு பயன்படுத்தப்படும் தகவல்களை இஸ்ரேல் இராணுவத்துக்கு வழங்கியதாகவும் அமீரகம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே அமீரகத்துக்குச் சொந்தமான விங் லூங் II UAV க்கள் (ஆளில்லா விமானங்கள்) அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக ஈரானிய வான்வெளியை மோப்பம் பிடிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் கண்டறிக
ஈரான், 90 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட, 7000 ஆண்டுகளுக்கும் மேலான பழம் பெருமை மிக்க வரலாற்றைக் கொண்ட ஒரு தேசமாகும். மறுபுறம் ஐக்கிய அரபு அமீரகம் சுமார் ஒரு மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு நாடு.
இத்தகைய பின்னணியில், அமீரகம் ஈரானை பகைத்துக் கொள்வது தற்கொலை செய்து கொள்வதை விட மோசமானது. ஈரான் தனது நியாயமான உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்காக மட்டுமன்றி, பலஸ்தீனர்கள், யேமனியர்கள், அரேபியர்கள் மற்றும் முழு முஸ்லிம் உலகின் உரிமைகளுக்காகவும் போராடுகின்றது. ஐக்கிய அரபு அமீரகம் எதற்காக போராடுகின்றது?
பணம் மற்றும் கண்கவர் காட்சிகளின் மூலம் எல்லாவற்றையும் கடந்து செல்ல முயன்ற அமீரகம் அதன் புவியியல் தன்மையில் மீண்டும் தனது கவனத்தை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் விவகாரம், விமான சேவைகள் மீதான இடையூறுகள், எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு ஆபத்து, காப்பீட்டு செலவுகள், முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றம், நற்பெயரில் களங்கம் என அனைத்தும் இதில் சம்பந்தப்படுகின்றன.
ஆபத்து என்பது வெறுமனே உடல் ரீதியான பாதிப்பு மட்டும் அல்ல. அது நம்பிக்கைகள் சிதைந்து போவதிலும் தங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்தின் பெரும் பகுதி அந்த நாட்டின் மீதான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
ஆடம்பர சொத்து, விமான நிறுவனங்கள், சுற்றுலாக்கள், மாநாடுகள், நிதி ரீதியான பலம், கடல் மூலதனம், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் என இந்த நம்பிக்கையின் பட்டியல் நீளுகின்றது. இவற்றை சிதைக்க பஞ்சமோ அழிவோ தேவையில்லை. ஒரு சிறிய சந்தேகம் மட்டுமே தேவைப்படுகின்றது. அந்த சந்தேகம் இப்போது ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நெருக்கமாக இருப்பதிலிருந்தும், அவர்களின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதிலிருந்தும், வலுவான உறவுகளை பேணுவதில் இருந்தும், அது தேவையான அளவு பயனடைந்துள்ளது. அதன் மங்கலான நிலை, கண்ணாடிகளுக்கு அப்பால் தெரியும் மாயை, மற்றும் வெளிப்புற சக்தியால் தூண்டப்பட்ட ஒரு தகர்ந்து போகக்கூடிய ஆடம்பர சார்பு நிலை, என்பனவற்றை இன்றைய ஈரான் போர் எடுத்துக் காட்டியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் : இஸ்லாமிய எதிர்ப்பு சார்பு நிலை மற்றும் மாயையின் அரசியல் என்ற தலைப்பில் வெளியாகி உள்ள ஒரு கருத்தாக்கத்தில் கட்டுரையாளர் ஒருவர் இப்படிக் கூறி உள்ளார்:
அவர்கள் ஊக்குவிக்கும் "அமைதி" மற்றும் "ஒற்றுமை" என்பது வெறுமனே இஸ்ரேலின் விரிவாக்க முயற்சிகளுக்கு எதிரான செயற்பாடுகளை நசுக்கும் ஒரு சியோனிச திட்டமாகும். ஐக்கிய அரபு அமீரகம் சூடான் மற்றும் மொராக்கோவில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி,
'ஆபிரகாம் உடன்படிக்கைகளை வற்புறுத்தி அதில் மேலும் அதிகமான நாடுகளை இணைத்துக் கொள்வது மட்டுமன்றி, அவர்களின் முழு தேசிய திட்டமும் தமக்கு எதிரான அரபு மற்றும் இஸ்லாமிய உலக ஒற்றுமையை சீர்குலைப்பதையும் அவற்றின் தலைவர்களை படுகொலை செய்வதையும் மையமாகக் கொண்டுள்ளது.
பிராந்தியம் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகம், அதன் யுத்த வெறி கொண்ட கழுகுக் கூட்டாளிகளிடையே 'லிட்டில் ஸ்பார்டா' என்று (ஐரோப்பாவில் உள்ள ஒரு நந்தவனம்) அழைக்கப்படுகின்றது.
ஆனால், அது ஆபிரிக்காவின் முனை வரைக்கும் இரத்த தாகம் கொண்ட ஒரு வெறித்தனமான அணுகுமுறையையே பின்பற்றுகின்றது. சூடானில் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முகமது தாகலோவின் போராட்டக் குழுவான துரித ஆதரவு படைகளின் (ஆர். எஸ். எஃப்) பிரதான ஆதரவாளராக இருப்பது அமீரகமே.
ஈரானைத் தாக்க அமெரிக்கா நிச்சயமாக ஏனைய பாரசீக வளைகுடா அரபு நாடுகளைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட, அபுதாபியின் தலைமையைப் போல யாரும் உற்சாகமாக இருந்திருக்க மாட்டார்கள். ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைக்கு தனது பிரதேசத்தை பயன்படுத்த அனுமதிக்காத ஒரே நாடு ஓமான் மட்டுமே.
அதே நேரத்தில் கத்தார் மிகவும் நடுநிலை தொனியை உருவாக்கத் தொடங்கியது. குறிப்பாக போர் முன்னேறும் போது ஐக்கிய அரபு அமீரகம் எதிர் திசையில் சென்றது. இறுதியில் அமீரகத்தின் ஈரான் எதிர்ப்பு வார்த்தைப் பிரயோகங்கள், தெஹ்ரானை பயங்கரவாதிகள் என்று அமீரக ஆட்சியாளர்கள் முத்திரை குத்தத் தொடங்கும் அளவிற்கு அதிகரித்தது.
பேரரசின் ஆங்கிலேயர்கள் ஈரானியர்களை "கடற்கொள்ளையர்கள்
" என்று அழைத்தனர். பேரரசின் அவமதிக்கப்பட்ட பொம்மை என்ற இந்த மரபு அமீரகத்தை பொருத்த மட்டில் இன்று வரைக்கும் உண்மையாக நிலைத்துள்ளது. தீவிர பணக்கார அமீரக தலைமை தங்கள் எஜமானர்களுக்கான பேரம்பேசலை மிகவும் ஆர்வத்துடன் கச்சிதமாக நிறைவேற்றி வருகின்றது.
இதற்கிடையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மற்றும் முன்னாள் மொசாட் தலைவர் டேவிட் பார்னியா ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இரகசிய விஜயம் செய்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. போர் தீவிரமாக இடம் பெற்றுக் கொண்டிருந்த போது ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானை அவர்கள் சந்தித்துள்ளனர்.
பெஞ்சமின் நெதயாஹுவை வரவேற்று விருந்தளித்தமைக்காக, ஐக்கிய அரபு அமீரகத்தை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வன்மையாக் கண்டித்துள்ளார்.
"ஈரானின் மாண்பு மிக்க மக்களுடன் பகைமையை வெளிவப்படுத்துவது என்பது ஒரு முட்டாள்தனமான சூதாட்டம். அவ்வாறு செய்வதில் இஸ்ரேலுடன் கூட்டு சேர்வதை மன்னிக்கவும் முடியாது. மேலும் பிரிவினையை விதைக்கும் நோக்கில் இஸ்ரேலுடன் கூட்டு சேர்பவர்கள் அதற்கான பொருப்பையும் சுமக்கவேண்டியிருக்கும் என்றும் அராக்சி கூறினார்.
லத்தீப் பாரூக்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!