ன்னும் 600,000 டொலர் மாயம் ; ஐவருக்கு பயணத்தடை
30 Apr, 2026
ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் மாற்றுவழியில் எரிபொருளைப் பெறுவதற்கு நைஜீரியா அல்லது அமெரிக்காவை அரசாங்கம் அணுகுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இது மேலதிக செலவுகளையும், விலை அதிகரிப்பையும் ஏற்படுத்தும். உள்நாட்டில் அதன் தாக்கம் எல்லா மட்டங்களிலும் உணரப்படும்.
தனியே எரிபொருள் விலை உயர்வுடன் அது நிற்காது, அதற்கு அப்பால் மின்சாரம் மற்றும் போக்குவரத்து, உற்பத்தித்துறைகள் என அனைத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதன் தாக்கம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழும் கனவில் இருக்கும் இலங்கைக்கு பேரிடியாகவே அமையும்.
இலங்கையின் தேயிலை உற்பத்தித் துறைக்கும் இது ஒரு மோசமான பின்னடைவாக இருக்கப் போகிறது. ஏனென்றால் ஈரானுக்கு இலங்கையின் கணிசமானளவு தேயிலை ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகிறது. ஏனைய மத்திய கிழக்கு நாடுகளும் கணிசமானளவு தேயிலையை கொள்வனவு செய்கின்றன.
தேயிலை ஏற்றுமதி நிறுத்தப்பட்டால் அல்லது அதில் பாதிப்பு ஏற்படுமேயானால், இலங்கைக்கு வருமான இழப்பை மாத்திரம் ஏற்படுத்தாது.
அதற்கு அப்பால் உள்நாட்டு தேயிலை உற்பத்தியையும் அதனை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழில் துறையினரையும் பாதிக்கும்.
இந்த பாதிப்பை இலங்கை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இவற்றிற்கு அப்பால் இலங்கைக்கு இந்தப் போர் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
போர் தொடங்கிய மூன்று நாட்களில் மத்திய கிழக்கு ஊடாகப் பயணிக்கும் 208 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. இது சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஆண்டு இலங்கை முன்னெப்போதும் இல்லாதளவுக்கு கூடியளவு சுற்றுலா பயணிகளை ஈர்த்தது. ஆனாலும், எதிர்பார்க்கப்பட்டளவு அந்நிய செலாவணியை ஈட்ட முடியவில்லை.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் சுற்றுலா பயணிகளின் ஊடாக கிடைக்கும் வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியாமல் இருந்தது.
இதனால் இந்த ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்த்து 5 பில்லியன் டொலர்களை சுற்றுலாத் துறை மூலம் ஈர்ப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களும் அரசாங்கத்துக்கு சாதகமாகவே நிலைமை சென்று கொண்டிருந்தது.
இரண்டு மாதங்களிலும் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்திருந்தார்கள். அது அடுத்த 10 மாதங்களில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்ற திட்டத்தை வெற்றிகரமாக கொண்டு நடத்தக்கூடிய வாய்ப்பையும் உருவாக்கியிருந்தது.
ஆனால், பெப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய போர் இலங்கையின் தலையில் இடி விழுந்தது போல அமைந்து விட்டது.
ஏனென்றால், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் 30 வீதமானோர் பயணிக்கின்ற வான்வெளி மூடப்பட்டிருக்கிறது.
இதனால், சுற்றுலாத்துறை மூலம் வாரம் ஒன்றுக்கு கிடைக்கும் 15 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து திரும்ப வேண்டிய 10ஆயிரம் சுற்றுலா பயணிகள் திரும்ப வழியின்றி சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு டுபாயில் சிக்கிக்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு, விடுதிகளில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு, கட்டணம் அறவிடக் கூடாதென, டுபாய் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆனால், இலங்கையினால் அவ்வாறு செய்ய முடியாது. கட்டணமின்றி 14 நாட்கள் வீசா நீடிப்பை மட்டும் வழங்கியிருக்கிறது.
இந்த போர் இலங்கையின் சுற்றுலா துறையை பெரிதும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இலங்கையை நோக்கி வருகின்ற சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையும் சாத்தியங்கள் உள்ளன.
போரின் பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள் என்பன சுற்றுலாத் துறையை நலிவடைய செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதேவேளை, மத்திய கிழக்கின் டுபாய் போன்ற நாடுகளில் சுற்றுலா செல்லுகின்ற பயணிகள் இலங்கை போன்ற நாடுகளை நோக்கி திரும்புவதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கு இல்லை.
ஆனால், ஒட்டுமொத்த போர்ச்சூழல் இலங்கைக்கு சாதகமானதாக இல்லை.
இது எல்லா விடயங்களிலும் இலங்கைக்கு பொருளாதார ரீதியான பாதிப்புகளையே ஏற்படுத்தக் கூடியது.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர வேண்டிய நிலையில் இருக்கின்ற போது, ஏற்பட்டிருக்கின்ற இந்த சூழல், இன்னும் நெருக்கடியை அதிகரிக்கும்.
சாதாரண சூழலில் இலங்கையினால் மீண்டெழுவது கடினம் அல்ல, ஆனால், இவ்வாறான சூழலில் இதனை எதிர்கொள்வது சிக்கலானது.
இத்தகைய நிலையில் மத்திய கிழக்கில் போர் நிலைமைகள் மோசமடைந்து அங்குள்ள 15 இலட்சம் இலங்கை தொழிலாளர்களை திருப்பி அழைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமேயானால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
அவ்வளவு பேரையும் நாட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பது கூட இலங்கையினால் இயலாத காரியமாகவே இருக்கும்.
இவ்வாறான நிலை வராமல் இருந்தால் இலங்கை தப்பித்துக் கொள்ளும், இல்லையேல் இலங்கை இந்தப் போரின் விளைவாக பெரும் பின்னடைவுகளை எதிர்கொள்வதுடன், எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும்.
கோட்டாபய ராஜபக் ஷ கூட சர்வதேச போர் சூழல்களினால் தான் ஆட்சியை இழக்க நேரிட்டது.
கொரோனா தொற்றும் அதனை அடுத்து ஏற்பட்ட உக்ரேன் போரும் எரிபொருள் நெருக்கடியும் பொருளாதார ரீதியாக ஏற்படுத்திய தாக்கங்களும் தான், 69 இலட்சம் மக்களின் ஆணையுடன் ஆட்சிக்கு வந்த கோட்டாவையே வீட்டுக்கு அனுப்பின.
அதேபோன்ற நிலையொன்றை இப்போதைய போர்ச்சூழல் ஏற்படுத்தாது என உறுதியாக கூற முடியாது.
-சத்ரியன்
Comments
Leave a Reply
Write the comments...............