news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

10 Jan, 2026

காலையில் இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் எடை சீக்கிரம் குறையும்

ஆரோக்கியம்:
இன்றைய வாழ்க்கை முறையில் உடல் எடை அதிகரிப்பது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. உடல் எடை அதிகரிப்பதால் நீரிழிவு, இதய நோய், பக்கவாதம், மூட்டு வலி, செரிமானக் கோளாறுகள், சுவாசப் பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு உடல்நல சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே, உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும்.

உடல் எடையைக் குறைப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, காலை நேர உணவு சரியாக அமைந்திருந்தால் எடை இழப்பு எளிதாகவும் ஆரோக்கியமாகவும் அமையும். அந்த வகையில், உடல் எடையைக் குறைக்க காலை நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான உணவுகள் குறித்து பார்க்கலாம்.

 1. முட்டை

புரதம் நிறைந்த முட்டைகளில் கலோரிகள் குறைவாக இருப்பதால், நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவுகின்றது. காலை உணவில் முட்டையை சேர்த்துக் கொள்வது, தேவையற்ற இடைவேளை சிற்றுண்டி உணவுகளை தவிர்க்க உதவியாக இருக்கும்.

 2. சியா விதை தண்ணீர்

வெறும் வயிற்றில் சியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து குடிப்பது, செரிமானத்தை சீராக்கி, உடலில் சேரும் கூடுதல் கொழுப்பை குறைக்க உதவுகின்றது. இது உடல் எடையைக் குறைக்கும் ஒரு எளிய மற்றும் இயற்கையான வழியாகும்.

3. முளைத்த தானியங்கள்

புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த முளைத்த தானியங்கள், உடல் எடையைக் குறைப்பதற்கு மிகவும் ஏற்ற உணவாகும். காலை உணவில் இதை சேர்த்துக் கொள்வதால், உடல் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, நீண்ட நேரம் பசி உணர்வும் ஏற்படாது.

 4. பாதாம்

எடை இழப்பிற்கு பாதாம் சிறந்த உணவாக கருதப்படுகிறது. இரவில் ஊற வைத்த பாதாமை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது, மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

 5. பழங்கள்

காலை வெறும் வயிற்றில் பழங்களை உட்கொள்வது, உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், தொப்பை கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது. குறிப்பாக ஆப்பிள், பப்பாளி, தர்பூசணி போன்ற பழங்கள் எடை குறைப்பிற்கு மிகவும் பயனுள்ளதாகும்.

உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகள்

உடல் எடை அதிகரித்தால்,

  • நீரிழிவு

  • இதய நோய்கள்

  • பக்கவாதம்

  • புற்றுநோய் அபாயம்

  • கல்லீரல் மற்றும் மூட்டு பிரச்சனைகள்

  • செரிமானக் கோளாறுகள்

  • மன அழுத்தம்

போன்ற பல்வேறு பிரச்சனைகள் உருவாகலாம்.

Comments

Write the comments...............