news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஐரோப்பாவை அடுத்தடுத்து தாக்கும் வெப்ப அலை

05 Aug, 2026


ஐரோப்பாக் கண்­டத்தில் இந்த வரு­டத்தில் அதி­க­ரித்­துள்ள வெப்­ப­நிலை கார­ண­மாக பல ஆயிரம் உயி­ரி­ழப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. வர­லாறு காணாத இந்த வெப்­ப­நிலை உயர்வு கார­ண­மாக மனி­தர்கள் மாத்­தி­ர­மன்றி ஏனைய உயி­ரி­னங்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. 

ஸ்பெய்ன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடு­களில் ஏற்­பட்­டுள்ள காட்டுத் தீ கார­ண­மாக பல இலட்சம் மக்கள் இடம்­பெ­யர நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளனர். வெப்­ப­நிலை தணி­யாத நிலையில் மேலும் பல உயி­ரி­ழப்­பு­களும், இடம்­பெ­யர்­வு­களும் ஏற்­ப­டலாம் என்ற அச்சம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

புவி வெப்­ப­மாதல் உல­க­ளா­விய ஒரு பிரச்­சி­னை­யாக உள்­ளது. உலகம் முழு­வ­திலும் ஆண்­டு­தோறும் உயர்ந்­து­வரும் வெப்­ப­நிலை கார­ண­மாக பல்­வேறு பாதிப்­பு­களை மனித சமூகம் எதிர்­கொண்டு வரு­கின்­றது. 

இயற்­கைக்கு விரோ­த­மாக மனி­தர்கள் தொடர்ச்­சி­யாக மேற்­கொண்­டு­வரும் அழிவு நட­வ­டிக்­கைகள் மனித குலத்­துக்கும், உலகில் வாழும் ஏனைய உயி­ரி­னங்­க­ளுக்கும் அச்­சு­றுத்­த­லாக மாறி வரு­கின்­றன. எதனால் இத்­த­கைய கால­நிலை மாற்றம் ஏற்­ப­டு­கின்­றது, எதன் விளைவால் பாதிப்­புகள் ஏற்­ப­டு­கின்­றன என்­பதைத் தெரிந்­தி­ருந்தும் அவற்றைச் சீர்­செய்ய முறை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டாமை கார­ண­மாக பாதிப்­புகள் தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்துச் செல்­வ­தையே அவ­தா­னிக்க முடி­கின்­றது.

அறி­வியல் வளர்ச்­சியின் ஓர் அங்­க­மாக புவி வெப்­ப­நிலை தொடர்­பான பதி­வு­களை அந்­தந்த நாட்டு அர­சாங்­கங்கள் ஒரு குறிப்­பிட்ட காலம் முத­லாக மேற்­கொண்டு வரு­கின்­றன. சொற்ப ஆண்டு வர­லாற்­றையே கொண்ட இந்தப் புள்­ளி­வி­ப­ரங்­களை ஒப்­பீடு செய்யும் போது 2026ஆம் ஆண்டு ஐரோப்பா கண்­டத்தின் பல நாடு­களில், குறிப்­பாக மேற்கு ஐரோப்­பிய நாடு­களில் அதி உச்ச வெப்­ப­நிலை பதி­வான ஆண்­டாக உள்­ளதைப் பார்க்க முடி­கின்­றது.

ஐரோப்பாக் கண்­டத்தில் இந்த வரு­டத்­துக்­கான ஆகக் கூடிய வெப்­ப­நி­லை­யாக 48.4 பாகை செல்­சியஸ் (119.1 பரன்ஹீட்) இத்­தா­லியில் பதி­வாகி உள்­ளது. சிசிலி பிராந்­தி­யத்தில் உள்ள காஸ்­ரல்­ரேர்­மினி என்ற இடத்தில் ஜூலை 18ஆம் திகதி இந்த வெப்­ப­நிலை பதி­வாகி இருந்­தது. 


இரண்­டா­வது அதி­கூ­டிய வெப்­ப­நிலை ஸ்பெய்ன் நாட்டில் பதி­வாகி உள்­ளது. ஜூலை 22 மற்றும் 23ஆம் திக­தி­களில் அன்­டுஜார் மற்றும் மொன்­ராறோ ஆகிய இடங்­களில் பதி­வா­கிய வெப்­ப­நிலை 45.1 பாகை­யாக இருந்­தது. பிரான்ஸ் மற்றும் போர்த்­துக்கல் ஆகிய நாடு­களில் அதி கூடிய வெப்­ப­நி­லை­யாக 44.3 பாகை பதி­வாகி உள்­ளது. அதே­வேளை, பெலாரஸ், செக் குடி­ய­ரசு, டென்மார்க், ஜேர்­மனி, ஹங்­கேரி, போலந்து, ஸ்லோவாக்­கியா ஆகிய நாடு­களில்   வர­லாற்­றி­லேயே அதிக வெப்­ப­நிலை இந்த வரு­டத்தில் பதி­வாகி உள்­ளது.

அதீத வெப்­ப­நிலை வயோ­தி­பர்­க­ளையும், சிறார்­க­ளையும் அதி­க­மாகப் பாதித்து வரு­கின்­றது. வெப்பம் கார­ண­மாக ஏற்­படும் நீரி­ழப்பு, உரிய நேரத்தில் கவ­னிக்­கப்­ப­டா­து­விட்டால் மர­ணத்தை ஏற்­ப­டுத்த வல்­லது.

இதன் கார­ண­மாக பெரும்­பாலும் ஏற்­கெ­னவே பல்­வேறு நோய்­களால் பாதிக்­கப்­பட்­டுள்ள வயோ­தி­பர்கள் மர­ணத்தைத் தழுவும் நிலை உரு­வா­கி­றது. வழக்­க­மாக, கோடை காலத்தில் வயோ­தி­பர்கள் மத்­தியில் நிகழும் மர­ணத்தை விட பல மடங்கு அதிக மர­ணங்கள் இந்த வரு­டத்தில் அவ­தா­னிக்­கப்­பட்டு உள்­ளன. தவிர, வெப்­பத்தைத் தணிக்கும் நோக்­குடன் மக்கள், பாது­காப்­பற்ற நீர்­நி­லை­களை   நாடி தங்­களைக் குளிர்­விக்க முனையும் போதும் மர­ணங்கள் சம்­ப­விக்­கின்­றன.

ஜூன் மாத இறு­தியில் அவ­தா­னிக்­கப்­பட்ட வெப்ப அலை கார­ண­மாக பத்­தா­யி­ரத்­துக்கும் அதி­க­மானோர் ஐரோப்பாக் கண்டம் முழு­வதும் இறந்­துள்­ள­தாகத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. வழக்­க­மாக ஜூன் மாதத்தில் அவ­தா­னிக்­கப்­படும் சரா­சரி எண்­ணிக்­கையை விடவும் இந்த வரு­டத்தில் அதிக மர­ணங்கள் நிகழ்ந்­துள்­ளன. இவ்­வாறு இறந்­தோரில் 9,000 இற்கும் அதி­க­மானோர் 65 வய­துக்கு மேற்­பட்­டோ­ராக உள்­ளனர். பிரான்ஸ் நாட்டில் மாத்­திரம் இந்தக் காலப்­ப­கு­தியில் 5,764 பேர் மேல­தி­க­மாக மர­ணத்தைத் தழுவி உள்­ளனர்.

பிரான்ஸ் நாட்டின் தேசிய பொதுச் சுகா­தார அமைப்பின் தக­வலின் படி 2003 ஆம் ஆண்டில் ஏற்­பட்ட வெப்ப அலையின் போது அவ­தா­னிக்­கப்­பட்ட மர­ணங்­களை விடவும் 36 சத­வீத அதி­க­மான மர­ணங்கள் இந்த ஆண்டில் நிகழ்ந்­துள்­ள­தாகத் தெரி­கி­றது.


வெப்பம் ஒரு­புறம் மக்­களை வாட்­டி­யெ­டுக்க, காட்டுத் தீ மறு­புறம் அவர்­களின் இருப்­பையே கேள்விக் குறி­யாக மாற்­றி­யுள்­ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள உலகப் பிர­சித்­த­மான வைன் உற்­பத்தி மையம் எனக் கரு­தப்­படும் போர்தோ பிராந்­தி­யம் காட்டுத் தீ அச்­சு­றுத்­த­லுக்கு இலக்­காகி உள்­ளது. இந்தப் பிராந்­தி­யத்தில் கொழுந்து விட்­டெ­ரியும் காட்டுத் தீ கார­ண­மாக இது­வரை இரண்­டரை இலட்சம் மக்கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டுள்­ளனர். பாரம்­ப­ரிய நக­ர­மான போர்தோ, தீ அபா­யத்தில் உள்­ள­தோடு, வைன் உற்­பத்­தியின் மூலப் பொரு­ளான திராட்சைத் தோட்­டங்­களும் நாச­மாகும் நிலை உரு­வாகி உள்­ளன.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் பெரும் எண்­ணிக்­கை­யான மக்கள் இடம்­பெ­யர்ந்த சம்­ப­வ­மாக இது வர­லாற்றில் பதி­வாகி உள்­ளது. தீய­ணைப்புப் படை­யி­னரின் பாரிய முயற்சி கார­ண­மாக தீப்பரவல் ஓர­ளவு கட்­டுக்குள் கொண்­டு­வரப்பட்­டாலும், நான்­கா­வது வெப்ப அலை எதிர்­பார்க்­கப்­படும் நிலையில் எதுவும் நடக்கக் கூடும் என்ற அச்சம் உரு­வாகி உள்­ளது.

அங்கு அது­வரை 42,000 ஹெக்­டேயர் பிர­தேசம் தீக்கிரை­யாகி உள்­ளது. 240 வீடுகள் முற்­றாக எரிந்­துள்­ளன. தீய­ணைப்புப் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்த இரண்டு பணி­யா­ளர்கள் மர­ணத்தைத் தழுவி உள்­ளனர்.

காட்டுத் தீ கார­ண­மாக ஸ்பெய்ன் நாட்டில் இது­வரை 116,000 பொது­மக்கள் இடம் பெயர்ந்­த­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இவ்­வாறு இடம் பெயர்ந்­தோரில் ஒரு சிலர் மீண்டும் தங்கள் வீடு­க­ளுக்குத் திரும்பிச் சென்­றி­ருந்த போதிலும், தொடர்ந்தும் அதி­க­ரித்துச் செல்லும் வெப்­ப­நிலை நிச்­ச­ய­மற்ற நிலை­யையே ஏற்­ப­டுத்தி நிற்­கி­றது. அந்த நாட்டில் 8,000 சதுர கிலோ மீற்றர் (310 சதுர மைல்) பரப்­ப­ளவு பிர­தேசம் தீக்கிரை­யாகி உள்­ளது.

இதே­வேளை, தற்­போ­தைய வெப்ப உயர்வு கார­ண­மாக ஐரோப்பாக் கண்­டத்தில் விவ­சாய உற்­பத்தி பெரிதும் பாதிக்­கப்­படக் கூடிய ஏது­நிலை உள்­ள­தாக எதிர்வு கூறப்­ப­டு­கின்­றது. 

இந்த வரு­டத்தில் தானிய உற்­பத்­தியில் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்பு கார­ண­மாக 2 பில்­லியன் யூரோ இழப்பு எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. பிரான்ஸ் மற்றும் ஹங்­கேரி ஆகிய நாடு­களில் மொத்த இழப்பில் மூன்றில் ஒரு பங்கு ஏற்­பட வாய்ப்பு உள்­ளது. பிரான்ஸ் நாட்டில் இந்த வரு­டத்தில் 4.1 மில்­லியன் தொன் அளவில் அறு­வடை பாதிக்­கப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

அதே­போன்று, ஹங்­கே­ரியில் 2.4 மில்­லியன் தொன் அறு­வடை பாதிக்­கப்­பட வாய்ப்பு உள்­ளது. ஐரோப்பாக் கண்­டத்தில் விவ­சாயத் துறையில் ஏற்­படும் பாதிப்பு கார­ண­மாக இறக்­கு­ம­தியை நம்­பி­யி­ருக்க வேண்­டிய கட்­டா­யத்­துக்கு நாடுகள் தள்­ளப்­படும் அதே­வேளை, இறக்­கு­மதி கார­ண­மாக விலை­வாசி உயர்வு ஏற்­ப­டலாம் எனவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

மே மாதம் ஆரம்­ப­மான வெப்ப அலை இரண்டு மாதங்­களைக் கடந்து மூன்­றா­வது மாதத்­திலும் அவ­தா­னிக்­கப்­பட்­டு­வரும் நிலையில் தற்­போ­தைய வெப்ப அலை இந்த வரு­டத்­துக்கு மட்­டு­மான ஒன்­றாக இருக்கப் போவ­தில்லை. மாறாக, தொடர்ந்­து­வரும் வரு­டங்­க­ளிலும் இதே­நிலை நீடிக்கப் போகி­றது எனக் கூறி பீதியைக் கிளப்­பு­கி­றார்கள் விஞ்­ஞா­னிகள்.

தற்­போ­தைய நிலையில் உலகில் அதி­க­மாக வெப்பநிலை உயர்ந்துவரும் பிராந்தியமாக ஐரோப்பாக் கண்டம் உள்ளது. உலகச் சராசரியோடு ஒப்பிடுகையில் ஐரோப்பாவின் வெப்பநிலை இரண்டு மடங்காக உயர்ந்து வருகின்றது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அடுத்தடுத்து ஏற்பட்டுவரும் வெப்ப அலைகளையும், அதன் விளைவான காட்டுத் தீ அபாயத்தையும் ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கு ஒன்று உதவுவதன் மூலம் கையாண்டு வருவதைப் பார்க்க முடிகின்றது. ஆனால், பொதுப் பிரச்சினையாக உள்ள உலகளாவிய சூழல் பிரச்சினையைக் கையாளுவதில் முறையான ஒருங்கிணைப்போ, வேலைத் திட்டமோ இல்லாமல் உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. உடனடிப் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமே. ஆயினும் நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமால் இருந்தால் அது முட்டாள்தனமே அன்றி வேறில்லை.

  சுவிசிலிருந்து சண் தவராசா

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!