`ரிஸ்க் எடுத்தால் ரூ.1 கோடி!'- Hormuz-ல் கப்பலை இயக்குபவர்களுக்கு `ஆஃபர்' வழங்கும் நிறுவனங்கள்!
08 Oct, 2026
அந்த வகையில், ஈரானின் அதிமுக்கியமான கார்க் தீவை கைப்பற்றுவதற்கும், ஹார்முஸ் ஜலசந்தியைக்கு அருகில் இருக்கும் ஈரானின் கடலோர ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் அமெரிக்க ராணுவம் தரை வழியான தாக்குதலுக்கு திட்டம்தீட்டி வருவதாக The Washington Post ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பெயர் குறிப்பிடாமல் அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுகளை மேற்கொள்காட்டி The Washington Post இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் காலாட்படைப் பிரிவுகளை உள்ளடக்கிய இந்த திட்டங்களுக்கு இன்னும் அதிபர் டிரம்ப்பின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
படைகளை இறக்குகிறதா அமெரிக்கா?
ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக மற்றும் போர் கப்பல்களை குறிவைக்கக்கூடிய ஈரானின் ஆயுதங்களை கண்டுபிடித்து அழிப்பதற்காக, கார்க் தீவை கைப்பற்றவும், ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள பிற கடலோர பகுதிகளில் இருந்து திடீர் தாக்குதல் நடத்துவது குறித்தும் டிரம்ப் நிர்வாகம் விவாதித்து வருவதாக The Washington Post செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை அமெரிக்க ராணுவம், ஒரு மாதம் வரை இழுக்காமல் சில வாரங்களிலேயே முடித்துவிடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், கார்க் தீவைக் கைபற்றவும், அங்குள்ள ஈரானின் ஆயுதங்களை தகர்க்கவும் சுமார் 2 மாதங்கள் வரை எடுக்கலாம் என்றும் The Washington Post ஊடகம் தெரிவிக்கிறது.
கார்க் தீவை கைப்பற்றுவது கடினம் அல்ல...
மேலும், இதுகுறித்து அமெரிக்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், கார்க் தீவை கைப்பற்றுவதும், ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள கடலோர பகுதிகளை கைப்பற்றுவதும், வணிக மற்றும் போர் கப்பல்களை தாக்கும் ஆயுதங்களை அழிப்பதும் ஈரானின் தலைமைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தையின் போது இது அமெரிக்காவின் பேர வலிமையை அதிகரிக்கச் செய்யும் என்றார்.
மேலும் இது கடைசி நிமிடத் திட்டமிடல் ஏதும் இல்லை என்றும் இந்த நடவடிக்கைகள் என்பது முன்கூட்டியே ஒத்திகை பார்த்து, நன்கு ஆலோசிக்கப்பட்ட ஒன்றாகும் என்றும் அந்த அதிகாரி தகவல் தெரிவித்திருக்கிறார்.
அதேநேரத்தில், "கார்க் தீவை கைப்பற்றுவது கடினம் அல்ல. அங்குள்ள மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதுதான் கடினமான பணியாகும். அமெரிக்க படைகள் அங்கு சென்றடைந்ததும் அவர்களை பாதுகாப்பது கடினம்" என அந்த அதிகாரி தகவல் தெரிவித்திருக்கிறார்.
வீரர்களுக்கு பறந்த உத்தரவு
சமீபத்திய அமெரிக்காவின் நகர்வுகளும் இந்த செய்தியை ஓரளவு வலுப்படுத்துகின்றன எனலாம். மார்ச் 26ஆம் தேதியிட்ட கடிதம் ஒன்று அமெரிக்க மரைன் கார்ப்ஸ் ரிசர்வஸ் படையின் தளபதியிடம் இருந்து வெளியாகி உள்ளது.
அதில் கடற்படை வீரர்கள் போர் ஏற்படும் சூழலுக்கு தயாராக இருக்குமாறு வலியுறுத்தி உள்ளது. அதாவது, எப்போது போர் வெடித்தாலும் அதற்கு தயாராக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அணிதிரட்டப்பட வாய்ப்புள்ளது என்பதால் வீரர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தங்களை தயார்படுத்திக்கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் ஆயுதங்கள், உபகரணங்களை சரிபார்த்து வைத்துக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் USS Tripoli
USS Tripoli என்ற விமானம் தாங்கி போர் கப்பல் மத்திய கிழக்கு பகுதிக்குள் கடந்த மார்ச் 27ஆம் தேதி அன்று நுழைந்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதில் 3,500 கடற்படை வீரர்களையும், மாலுமிகளையும் ஏற்றிச் செல்லும் திறன்கொண்டது. அதுமட்டுமின்றி 2,500 நீர்மூழ்கி கப்பல்கள், Seahawk ஹெலிகாப்டர்கள், F-35 போர் விமானம், Osprey tilt-rotor aircraft எனும் ஹெலிகாப்டர் போன்ற போர் விமானம் ஆகியவை உடன் USS Tripoli கப்பல் வருகை தந்ததாக கூறப்படுகிறது.
மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்கெனவே இருக்கும் அமெரிக்காவின் படைகளுக்கு இது வலுசேர்க்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் போர் நிறைவடையும் நிலையில் இல்லை என கூறப்படுகிறது. இதற்கு ஈரான் எவ்வாறு தயாராகி வருகிறது என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!