news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கறை படிந்து வரும் புனித உடைகள்….!

18 May, 2026
இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள பெளத்த மக்கள் அதிக சனத்தொகையை கொண்ட மக்களாக காணப்படுகின்றனர். 

அதிகமானோர் வழிபடும் நெறியாக பெளத்தம் விளங்குகின்றது. இலங்கையில் வேறு எந்த மதத்துக்கும் இல்லாத செல்வாக்கும் முன்னுரிமைகளும் பெளத்தத்துக்கு வழங்கப்படுகின்றன.  


அதற்குக் காரணம் பெளத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும் என்ற சரத்துகள் இலங்கை அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதைGeographic Reference


அடிப்படையாக வைத்தே கடந்த கால ஆட்சியாளர்கள் தமது அரசியலை முன்னெடுத்து வந்துள்ளனர். சிங்கள பெளத்த மக்களை கவர்வதற்கும் அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கும், சிங்கள அரசியல் தலைவர்களுக்கு வேறு தெரிவுகள் இன்று வரை இருப்பதாகத் தெரியவில்லை.

ஆகையால் பெளத்த சாசனங்களுக்கும் பிக்குகளுக்கும் நாட்டில் தனி மரியாதை உள்ளது. பஸ்ஸில் பயணிக்கும் போது அவர்களுக்கு தனி ஆசனங்கள் உள்ளன. 

வேறு எந்த மதகுருமார்களும் குறித்த ஆசனங்களில் அமர்ந்து செல்கின்றமை மிகவும் குறைவு. இலங்ஙகை அரசியலிலும் பெளத்த பிக்குகளின் தலையீடு மிகவும் அதிகமாகும். 


ஒரு காலத்தில் பெளத்த பிக்குகளை உறுப்பினர்களாக் கொண்ட ஹெல உறுமய என்ற கட்சி தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திலும் தமது உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. 

இதன் காரணமாக நாட்டின் ஆட்சியை கைப்பற்றும் எந்த கட்சிகளானாலும் பெளத்தத்துக்கும் பிக்குகளுக்கும் மகா பீடங்களுக்கும் அடிபணிந்தே ஆட்சி செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர்.

 தாமே நாட்டின் பெளத்த பண்பாட்டையும் தர்மத்தையும் பாதுகாக்கும் பாதுகாவலர்கள் என்ற இறுமாப்பில் வாழ்ந்து வருகின்றனர் பெளத்த பிக்குகள். அரசியல் பகுப்பாய்வு

பெளத்தத்தை போற்றினால் மாத்திரமே தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ளலாம்  என்பதை புரிந்து கொண்ட  கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த தேசிய தலைவர்கள் பலரும், சுதந்திரத்துக்குப் பிறகு  பெளத்த மதத்தை தழுவிக் கொண்ட வரலாறுகளை நாம் கடந்து செல்ல முடியாது. 

இவ்வாறு பெளத்த தர்மத்தின்  காவலர்களாக  விளங்கும் பெளத்த பிக்குகளின் அண்மைக்கால செயற்பாடுகள் நாட்டின் சிங்கள பெளத்தர்கள் மத்தியில் விசனத்தையும் வேதனையையும் உருவாக்கியுள்ளன. 

தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த 22 பிக்குகள் கடந்த  மாதம் 25 ஆம் திகதி நாட்டுக்கு திரும்பிய போது    பெருந்தொகை போதை பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காவி உடை அணிந்து வந்தவர்களே போதை பொருட்களை கொண்டு வந்தனர் என  அப்போது இச்சம்பவத்தை சிலர் திசை திருப்ப பார்த்தானர். பின்பு  இவர்கள்  பக்குவமடையாத மாணவ பிக்குகள் என சமாதானம் கூறப்பட்டது.

அதன் பின்னர் அட்டமாஸ்தானங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட நிலையில் உள்ள பிக்கு ஒருவர் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காக இம்மாதம் 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 

2022 ஆம் ஆண்டு அச்சிறுமிக்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தற்போதே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

பெளத்த தர்மத்தை போதிக்க வேண்டிய புனிதமான  காவி உடையணிந்த பெளத்த பிக்குகள் சிலரின் மறுபக்கம் எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதற்கு பல சம்பவங்களை கூறலாம். 

பெளத்த பிக்குகளைப் போன்றே இலங்கையில் சிங்கள சமூக ஆசிரியர்களுக்கு பெளத்தர்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. 

விகாரைகளில் பெளத்த பிக்குகளையடுத்து அவர்கள் அதிகமாக வழிபடும் தரப்பினராக  ஆசிரியர்கள் இருக்கின்றனர். 

அவர்கள் பாடசாலை அதிபர்களாக இருந்தால் என்ன, ஆசிரியர்களாக இருந்தால் என்ன, பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக இருந்தால் என்ன? தமக்கு கற்பித்த ஆசான்களை வீதிகளில் சந்தித்தாலும் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் ஒரு கலாசாரம்  சிங்கள பெளத்த மாணவர்களிடையே இன்னும் உள்ளது. 

அவர்கள் எத்தகைய உயர்ந்த தொழிலில் இருந்தாலும் எப்போதும் இந்த பழக்கத்தை பின்பற்றுபவர்களாகவே உள்ளனர்.

 இவ்வாறாக   மாணாக்கருக்கு  கல்வியறிவூட்டி, சமூகத்தில்  அவர்களை மாண்புறச்செய்யும் வண்ணம்  கல்வி போதிக்கும் ஆசான்களும் கோரமான  மறுபக்கத்தை கொண்டிருப்பதையும் சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன. பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவம் உயர்நீதிமன்றால் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இலங்கையின் எந்த பல்கலைக்கழகத்திலும் பணி புரிவதற்கான தடையை நீதிமன்றம் விதித்துள்ளது.


பேராசிரியர் பொறுப்பாகவிருந்த பீடத்தின்,  சக பெண் மாணவ கல்வியாளர் மீது 2017 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை மேற்படி பேராசிரியர் பாலியல் ரீதியாகவும் மனரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்ததாக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஆராய்ந்த  பல்கலைக்கழக விசாரணைக்குழு  அறிக்கையொன்றை சமர்ப்பித்தாலும், 2020 ஆம் ஆண்டு குறித்த அறிக்கையை பல்கலைக்கழக பேரவை நிராகரித்திருந்தமை முக்கிய விடயம். அதன் பின்னரே பாதிக்கப்பட்டவர் உயர் நீதிமன்றில் அடிப்படை  உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இலங்கையில் ஆன்மிக வழிபாட்டிடங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் மாத்திரமின்றி பல சட்டவிரோத செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. 

ஆனால் அதை வெளிப்படுத்த எவரும் முன் வருவதில்லை. சமூகத்தின் மத்தியில் குறித்த ஆன்மிக மற்றும் கல்வி நிறுவனங்களின்  மீதுள்ள கீர்த்திக்கு பங்கம் ஏற்படும் என்ற காரணத்தினால் உள்ளக விசாரணைகள் மற்றும் சமாதானப்படுத்தல்களில் பல குற்றச்சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. 

 ஒரு சில சம்பவங்களில் பாதிக்கப்பட நபர்களின் குடும்ப உறுப்பினர்களே அதை மூடி மறைக்கின்றனர், 

அல்லது பெருந்தொகை பணம் அவர்களின் வாயை அடைக்கின்றது.   சில ‘இரும்பு அரசியல் கரங்களும்’ இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் செயற்படும் அதே வேளை குற்றவாளிகளை பாதுகாப்பதில் முன்னிற்கின்றன. Geographic Reference

இவ்வாறான குற்றப் பின்னணி கொண்டவர்களால் இளம் சமூகம் எந்தளவுக்கு கலாசார சீர்கேடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது என்பதை கூறத்தேவையில்லை. ஒரு நாகரிகமான சமூகத்தை அரசியலிலும், கல்விபுலத்திலும் ஏன் ஆன்மிகத்திலும்  கட்டியெழுப்புவதிலிருந்து எமது நாடு தோல்வியை நோக்கிச் செல்வதற்கு இவ்வாறான  ‘புனித ஆடைகளை’ அணிந்திருப்பவர்களின் திரை மறைவு செயற்பாடுகளே காரணம் என உறுதியாகக் கூறலாம். 

தமக்கு நடந்த அநீதிகளை வாய் திறந்து கூறுவதற்கும் நாட்டின் அரசியல் சூழல் ஒத்துழைக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது. 

மிகவும் போற்றப்படும் காவி உடை அணிந்து பெளத்த பிக்குகளும் மாணாக்கருக்கு கல்வி அறிவை ஊட்டி அவர்களை  உயர்த்தும்  ஆசிரியர்களும் சட்டவிரோதமாகவும் துஷ்பிரயோக செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன. 

பெளத்த மதத்தை தலையில் தூக்கி வைத்து பேரினவாதம் பேசி வரும் சில அரசியல் பிரமுகர்களும் இதனால் சங்கடங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

இலங்கையின் பிரசித்த பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க பல்கலைக்கழகங்களும் தமது கீர்த்தியை இழந்து வருகின்றன. இன்று ஆன்மிக கல்வியை கற்க (தாம் பாசல்) தமது பிள்ளைகளை விகாரைகளுக்கு அனுப்புவதற்கு எந்தளவுக்கு சிங்கள பெளத்த பெற்றோர் பயப்படுகின்றார்களோ அதே போன்று தற்போது பல்கலைக்கழகங்களுக்கு தமது பிள்ளைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் யோசிக்கின்றனர். அரசியல் பகுப்பாய்வு

கூறப்போனால் இலங்கை வாழ் பெற்றோர்களுக்கு இரண்டு விடயங்களில் தற்போது அச்சங்கள் எழுந்துள்ளன….! 

பகிடி வதை சம்பவங்களை விட சில கோரமுகங்களைக் கொண்ட பேராசிரியர்கள் விரிவுரையாளர்களை நினைத்து தமது பிள்ளைகளை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புவதற்கும்,  ஆன்மிக கல்வியை கற்க மத நிறுவனங்களுக்கு பிள்ளைகளை அனுப்பவும் அவர்கள் யோசிக்கின்றனர்….

துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து முறையிட்டால் பல்கலைக்கழக உள்ளக விசாரணைகளில் நீதியை எதிர்ப்பார்க்க முடியாத சூழல் நிலவுகின்றது. குற்றம் செய்த  காவி உடைகளை காப்பாற்ற ஆதரவாக திரளும் சில சட்டதரணிகளும் அரசியல்வாதிகளும் பாடசாலை சீருடைகளை மிதித்து கடந்து  செல்கின்றனர். 


பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அட்டமாஸ்தானத்தின் தலைமை தேரர்  தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்காக சுமார் 22 சட்டதரணிகள் ஆஜராகியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்காக எவரும் ஆஜராகவில்லையென்பது எத்தகைய துயரம்? 

தமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் தரப்பினர் யார் என்ற குழப்பத்தில் பெற்றோர்கள் உள்ளனர்….!

-சி.சி.என் -

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!