எடப்பாடி="" பழனிசாமியின்="" தலைமையிலான="" செயல்பாடு="" குறித்து="" கட்சிக்குள்="" அதிருப்திகள்="" நிலவுகின்றன.="" சூழ்நிலையால்="" இழுப்பது="" எளிதாக="" தரப்பினர்="" வாதத்தை="" முன்வைக்கிறார்கள்.="" அதாவது,="" \"அவர்கள்="" இருப்பது="" குற்றச்சாட்டுகள்.="" நீதிமன்றத்தில்="" குற்றம்="" நிரூபிக்கப்படவில்லை.="" குற்றவாளிகள்="" எப்படி="" முடியும்?\"="" என்பதுதான்="" வாதம்.<="" p>
சட்டப்படி="" பார்த்தால்="" வாதம்="" சரியாக="" தாக்கல்="" செய்யப்பட்டுள்ள="" தகவல்="" அறிக்கைகள்,="" குறிப்பாக="" சி.பி.ஐ="" செய்த="" வழக்கின்="" ஆவணங்களைப்="" பார்த்தால்,="" குற்றச்சாட்டுகள்="" தெளிவாகப்="" செய்யப்பட்டுள்ளன.="" இறுதி="" தீர்ப்பு="" வரவில்லை="" என்பதற்காக="" மட்டும்,="" மனதிலிருக்கும்="" கருத்து="" மாறிவிடாது.="" பொதுமக்களின்="" பார்வையில்="" உள்ளன="" எண்ணம்="" ஏற்கனவே="" உருவாகியுள்ளது.<="" p>.
அவர்கள்="" ஊழலில்="" ஈடுபட்டதாக="" நம்புகிறார்கள்.="" வென்றார்கள்="" வேறு="" விஷயம்.="" மறுக்க="" முடியாத="" ஒன்று.="" தன்னை="" தூய="" சக்தி="" சொல்லிக்கொள்கிறது.="" இதுவரை="" ஆட்சியில்="" தங்களை="" இப்போதைக்கு="" சொல்லிக்கொள்ளலாம்.="" ஐந்தாண்டுகளுக்குப்="" முடியும்="" நேரத்தில்தான்,="" நடத்தினார்கள்="" என்பதைப்="" பார்க்க="" முடியும்.<="" p>
அதே="" நேரத்தில்,="" வருமான="" வரி,="" கார்="" வரி="" சட்டரீதியான="" உள்ளன.="" அவை="" அரசுப்="" பணத்தை="" முறைகேடாக="" பயன்படுத்தியதாகக்="" கூறப்படும்="" வழக்குகளுக்கு="" இணையானவை="" அல்ல="" கட்சியினர்="" கூறுகிறார்கள்.="" இருக்கட்டும்.="" ‘பொதுமக்களின்="" பணத்தைத்="" தொட="" மாட்டோம்;="" தொட்டவர்களை="" விட="" மாட்டோம்‘="" கூறிவிட்டு,="" குற்றச்சாட்டுகளின்="" கீழ்="" விசாரணையை="" எதிர்கொண்டு="" வருபவர்களை="" ஏன்="" சேர்க்க="" வேண்டும்?="" விசாரணை="" நடைபெற்றுக்கொண்டிருக்கும்="" நிலையில்="" இணைக்க="" என்ன?<="" p>.
.
ஆனால்,="" இங்கே="" நோக்கத்தில்="" வித்தியாசம்="" ஆட்சியைத்="" தக்கவைத்துக்கொள்ளவோ,="" அதிகரிப்பதற்காகவோ="" இணைப்புகளை="" மேற்கொள்ளவில்லை.="" மாறாக,="" மண்டலத்தில்="" கட்சியை="" ரீதியாக="" வலுப்படுத்த="" நோக்கத்தில்தான்="" செந்தில்பாலாஜி="" சிலரை="" இணைத்ததாகக்="" அதேபோல="" எம்.எல்.ஏ="" இளையராஜாவை="" குதிரை="" பேரத்தில்="" இழுக்க="" முயன்றதாக="" பாலாஜி="" புகார்="" எழுந்ததும்="" குறிப்பிடத்தக்கது.<="" p>
அதாவது,="" குற்றச்சாட்டு="" உள்ளவர்களை="" சேர்த்துக்கொண்டது.="" காப்பாற்ற="" அத்தனை="" நபர்களை="" சேர்த்துக்கொள்கிறது.="" இதுதான்="" வித்தியாசம்.<="" p>.
அ.தி.மு.க-வைச்="" ஆறு="" செய்திருக்கிறார்கள்.="" அந்தத்="" தொகுதிகளுக்கு="" இடைத்தேர்தல்="" நடத்த="" வேண்டும்.="" தேர்தல்="" ஆணையம்,="" மாதங்கள்,="" அதற்கு="" தேர்தலைத்="" தள்ளிவைத்தால்,="" பரபரப்பு="" குறைய="" வாய்ப்பு="" அதற்குள்="" சூழல்கள்="" உருவாகக்கூடும்.<="" p>.
தற்போதைய="" நிலையில்,="" காலியான="" அறிவிக்கப்படவில்லை.="" ஒருவேளை,="" செய்கிறார்களா="" பார்த்து,="" தமிழ்நாட்டுக்கான="" அனைத்து="" இடைத்தேர்தல்களையும்="" ஒரே="" கட்டமாக="" அறிவிக்கலாம்="" ஆணையம்="" நினைக்கலாம்.="" அல்லது,="" நகர்வுகளுக்கு="" ‘செக்’="" வைக்க="" அதற்காக,="" இடைத்தேர்தலை="" அறிவிக்காமல்="" ஆணையத்தின்="" அடுத்தகட்ட="" நடவடிக்கைகளில்="" நிலைமை="" தெளிவாகும்="" எதிர்பார்க்கலாம்.<="" blockquote>","datecreated":"2026-07-04t06:37:09z","datemodified":"2026-07-04t06:37:09z","name":"குதிரை="" பேரம்="" டு="" சக்தி’யின்="" சாயம்="" வெளுக்கிறதா?""https:="" image.vikatan.com="" "="" crossorigin="">
‘குட்கா’ புகழ் சி.விஜயபாஸ்கரையும், ‘நில மோசடி‘ புகழ்
எம்.ஆர்.விஜயபாஸ்கரையும் த.வெ.க-வில் சேர்த்துக்கொண்டிருக்கிறார் முதல்வர்
விஜய். இனிமேல், ‘தீயசக்தி‘, ‘தூர்ந்த சக்தி‘ என்றெல்லாம் பிற கட்சிகளை
விமர்சிக்க த.வெ.க-வுக்கு தகுதி இருக்கிறதா?
;‘குதிரை பேரம் நடத்துகிறார்கள்’ என்று ஆளும் த.வெ.க-வை விமர்சித்துவந்த தி.மு.க உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், தற்போது ‘வாஷிங் மெஷின்’ என்று த.வெ.க-வை விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
மரகதம் குமாரவேல், இசக்கி சுப்பையா உள்ளிட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்து, த.வெ.க-வில் இணைந்தனர்.
அதைத்தான், ‘குதிரை பேரம்’ என்று தி.மு.க விமர்சித்தது. தற்போது ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கும் அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் ஆகியோரை த.வெ.க-வில் இணைந்துக்கொண்டதைத் தொடர்ந்து, ‘த.வெ.க வாஷிங் மெஷின்’ என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
இரு விஜயபாஸ்கர்களுடன் த.வெ.க-வில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத் ஆகியோர் மீது பெரிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
பா.ஜ.க மாடல்!
எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்கு இருக்கிறது. அவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியபோது, கணக்கில் வராத சுமார் 21 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. மேலும், வருமானத்திற்கு அதிகமாக சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு, 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. சி.விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல் வழக்கு இருக்கிறது.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளும் இருக்கின்றன.;இவர்கள் மீதான வழக்குகளில், குட்கா வழக்கைத் தவிர மற்ற பெரும்பாலான வழக்குகளை மாநில அரசின் அமைப்புகள்தான் விசாரித்து வருகின்றன. எனவே, இவர்கள் ஆளும் கட்சியான த.வெ.க-வில் இணைந்திருப்பதால், இவர்கள் மீதான வழக்குகளின் கதி என்னவாகும் என்பது கேள்விக்குறிதான்.
;பல மாநிலங்களில் பா.ஜ.க என்ன செய்தது என்றால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்து, அவர்களை மீண்டும் தேர்தலில் நிறுத்தி பெரும்பான்மையை அதிகரிப்பது, அல்லது ஆட்சியைக் கவிழ்த்து புதிய ஆட்சி அமைப்பது என்பதைத்தான். இந்த வேலையைத்தான் பா.ஜ.க நீண்ட காலமாக செய்துவருகிறது.
அதே போல, ஊழல் வழக்குகளில் சிக்கிய மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரை பா.ஜ.க-வில் இணைத்து, தனது வாஷிங்மெஷினில் அவர்களைத் தூய்மைப்படுத்தும் வேலையையும் பா.ஜ.க செய்துவருகிறது.
அந்த வேலையை இப்போது த.வெ.க-வும் செய்வதால், இதை ‘பா.ஜ.க மாடல்’ என்று எதிர்க்கட்சியினரும், அரசியல் பார்வையாளர்களும் விமர்சிக்கிறார்கள்
.த.வெ.க-வுக்கு தனிப் பெரும்பான்மை இல்லை. சட்டப்பேரவையில் தங்களது எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் த.வெ.க-வுக்கு இருக்கிறது.
காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவு இருந்தாலும், த.வெ.க தனது சொந்த எம்.எல்.ஏ-க்கள் 120 பேருக்கு மேல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது.
அந்த இலக்குடன் த.வெ.க செயல்படுவதாகத்தான் தெரிகிறது
டார்கெட் அ.தி.மு.க!
அதனால்தான், அ.தி.மு.க-வைக் குறிவைத்து ஆட்களை இழுக்கிறார்கள். இதன் மூலம், தி.மு.க – த.வெ.க என்ற இரு துருவ அரசியலாக தமிழக அரசியலை மாற்ற வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
தேர்தலுக்கு முன்பே, ‘எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி இன்று மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது’, ‘அ.தி.மு.க ஊழல் கூட்டணியாக மாறிவிட்டது’ என்பன போன்ற விமர்சனங்களை விஜய் தொடர்ந்து முன்வைத்தார்.
எடப்பாடி பழனிசாமியை நேரடியாக, கடுமையாக விஜய் விமர்சித்தார்.அதேபோல், ‘தமிழ்நாட்டில் உண்மையான போட்டி தி.மு.க-வுக்கும் த.வெ.க-வுக்கும் மட்டுமே‘ என்ற கருத்தை விஜய் தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்குப் பிறகும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
‘தூய சக்திக்கும் தீய சக்திக்கும் இடையேயான போட்டிதான் இது’ என்றும் அவரது அரசியல் முழக்கம் இருந்தது.
;அ.தி.மு.க-வை பலவீனப்படுத்தி, அந்தக் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகளை தங்கள் கட்சியில் இணைப்பதில் த.வெ.க தெளிவான திட்டத்துடன் செயல்படுகிறது.
ஆரம்பத்தில், அ.தி.மு.க-விலிருந்து சுமார் 32 எம்.எல்.ஏ-க்கள் வரை த.வெ.க-வை ஆதரிப்பார்கள் என்று சொல்லப்பட்டது.
சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால், கட்சித் தாவல் தடைச் சட்டம் பொருந்தும் என்ற சூழல் உருவானபோது, த.வெ.க-வுக்குத் தாவலாம் என்று முயன்ற சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடமே திரும்பிச் சென்றனர்.
ஆனால், அவர்கள் எதிர்பார்த்த பதவிகள் மீண்டும் அங்கு வழங்கப்படவில்லை. அதனால், அவர்கள் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தனர்.
த.வெ.க-வில் இணைந்தால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற உறுதிமொழியை சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால், ‘முதலில் கட்சியில் சேருங்கள். பிறகு பார்க்கலாம்’ என்று த.வெ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது
;அப்போதுதான், ‘குதிரைப் பேரம்‘ என்ற விமர்சனம் தீவிரமாக எழுந்தது. அந்த 25 எம்.எல்.ஏ-க்கள் பிரிந்து வந்தபோது, விஜய் நேரடியாக அவர்களைச் சந்தித்தார். மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை விட, அதிருப்தி எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்தார்.
அதுதான், `குதிரைப் பேரம்' என்ற விமர்சனம் தீவிரமாக எழக் காரணமாக இருந்தது.
|பா.ஜ.க வாஷிங் மெஷின்!
;எம்.ஆர். விஜயபாஸ்கரும், சி. விஜயபாஸ்கரும் த.வெ.க-வில் இணைந்த பிறகுதான், ‘வாஷிங் மெஷின்‘ என்ற விமர்சனம் பெரிதாக எழுந்தது.
ஏனென்றால், மற்ற எம்.எல்.ஏ-க்கள் மீது பெரிய அளவிலான ஊழல் வழக்குகள் இல்லை. ஆனால், இந்த இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
அதனால்தான், ‘வாஷிங் மெஷின்‘ என்ற விமர்சனம் தீவிரமடைந்தது.
‘வாஷிங் மெஷின்‘ என்ற விமர்சனத்துக்குப் பெயர்போன கட்சி எது என்றால், அது பா.ஜ.க-தான். மேற்கு வங்கத்தின் தற்போதைய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸில் இருந்தவர். முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் வலதுகரமாகச் செயல்பட்டுவந்த அவரை பா.ஜ.க தூக்கிவந்தது.
அதேபோல, திரிணாமுல் காங்கிரஸில் ஊழல் வழக்கில் சிக்கியிருந்த சில முன்னாள் அமைச்சர்களையும், முக்கியத் தலைவர்களையும் பா.ஜ.க இழுத்துவந்தது
.அதேபோல, அஸ்ஸாம் மாநிலத்தின் இன்றைய முதலமைச்சரான ஹிமந்த பிஸ்வா சர்மா, காங்கிரஸில் இருந்தவர். அவரை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார்கள்.
சிவசேனா உட்பட பல கட்சிகளில் ஊழல் வழக்கில் சிக்கிய பெரிய முதலைகளை பா.ஜ.க தன் பக்கம் இழுத்தது. அதன் காரணமாகத்தான், பா.ஜ.க வாஷிங் மெஷின் பிரபலம் அடைந்தது.
பா.ஜ.க செய்துகொண்டிருக்கும் அந்த அரசியல் அறமற்ற வேலையை இப்போது த.வெ.க செய்யத் தொடங்கியிருக்கிறது. அப்படியென்றால், ‘தூய சக்திக்கும் தீய சக்திக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது’ என்று முதல்வர் விஜய் தொடர்ந்து கூறி வந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போகிறது.
ஊழல் கறை படிந்த இருவரை இணைத்துக்கொண்டதன் மூலம், ’தூயசக்தி’ என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை த.வெ.க இழந்திருக்கிறது.
;தற்போது, த.வெ.க-வை ஆதரித்துவரும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள், \"ஐந்து ஆண்டுகள் முழுவதும் த.வெ.க அரசை ஆதரிப்போம்\" என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கின்றன.
அப்படியிருக்கும்போது, இந்த இருவரை இணைத்துக்கொள்ள வேண்டிய அரசியல் அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
ஒருவேளை, ஐந்து ஆண்டுகளுக்கு தங்கள் ஆட்சியை இந்தக் கட்சிகள் ஆதரிக்கும் என்றாலும், த.வெ.க-வுக்கு சில சந்தேகங்களும் இருக்கலாம்.
த.வெ.க-வுக்குத் தற்போது அடிப்படை அமைப்பு கட்டுமானங்கள் தேவைப்படுகின்றன. கடந்த தேர்தலில் மக்கள் விஜய் முகத்திற்காகவோ, மாற்றம் வேண்டும் என்ற விருப்பத்திற்காகவோ, த.வெ.க-வுக்கு மக்கள் வாக்களித்திருக்கலாம். ஆனால் அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் இதே நிலை தொடரும் என்று சொல்ல முடியாது.
ஏனென்றால், இனிமேல் மக்களின் வாக்கு, விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் கட்சியின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டே அமையும். தற்போது அவரது பல நடவடிக்கைகள் விமர்சனத்திற்குள்ளாகி வருவதால், எதிர்காலத்தில் வாக்குகளைப் பெற வலுவான கட்சி அமைப்பு அவசியமாகிறது.
குற்றம் நிரூபிக்கப்படவில்லை!
tஅ.தி.மு.க-வைச் சேர்ந்த பல தலைவர்கள் இன்னும் வலுவான உள்ளூர் செல்வாக்கைக் கொண்டிருக்கிறார்கள். உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கடலூர் சம்பத் போன்றோர் தங்கள் மாவட்டங்களில் கணிசமான ஆதிக்கத்தையும் அமைப்பு வலிமையையும் கொண்டவர்கள்.
அவர்கள் விரும்பினால், ஒரு மாவட்டத்தின் அரசியல் கட்டமைப்பை தங்களுக்குச் சாதகமாக மாற்றும் அளவுக்கு செல்வாக்கு உடையவர்கள்.
அந்த அமைப்பு வலிமைதான் தற்போது த.வெ.க-வுக்கு தேவைப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான செயல்பாடு குறித்து கட்சிக்குள் பல்வேறு அதிருப்திகள் நிலவுகின்றன. இந்த சூழ்நிலையால் அ.தி.மு.க-விலிருந்து நிர்வாகிகளை இழுப்பது த.வெ.க-வுக்கு எளிதாக இருக்கிறது.
த.வெ.க தரப்பினர் ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். அதாவது, "அவர்கள் மீது இருப்பது குற்றச்சாட்டுகள். நீதிமன்றத்தில் இன்னும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, அவர்களை குற்றவாளிகள் என்று எப்படி சொல்ல முடியும்?\" என்பதுதான் அந்த வாதம்.
சட்டப்படி பார்த்தால் அந்த வாதம் சரியாக இருக்கலாம். ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகள், குறிப்பாக சி.பி.ஐ தாக்கல் செய்த குட்கா வழக்கின் ஆவணங்களைப் பார்த்தால், பல்வேறு குற்றச்சாட்டுகள் மிகவும் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த வழக்குகளில் இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை என்பதற்காக மட்டும், மக்கள் மனதிலிருக்கும் கருத்து மாறிவிடாது.
பொதுமக்களின் பார்வையில் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தீவிரமாக உள்ளன என்ற எண்ணம் ஏற்கனவே உருவாகியுள்ளது.
;அவர்கள் ஊழலில் ஈடுபட்டதாக மக்கள் நம்புகிறார்கள். அவர்கள் தேர்தலில் வென்றார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், அவர்கள் மீது வலுவான ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பது மறுக்க முடியாத ஒன்று. த.வெ.க தன்னை ஒரு தூய சக்தி என்று சொல்லிக்கொள்கிறது.
இந்தக் கட்சி இதுவரை ஆட்சியில் இல்லை. எனவே, தங்களை தூய சக்தி என்று த.வெ.க இப்போதைக்கு சொல்லிக்கொள்ளலாம்.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சி முடியும் நேரத்தில்தான், இவர்கள் எப்படி ஆட்சி நடத்தினார்கள் என்பதைப் பார்க்க முடியும்.
அதே நேரத்தில், முதல்வர் விஜய் மீதும் வருமான வரி, கார் வரி உள்ளிட்ட சில சட்டரீதியான வழக்குகள் உள்ளன. அவை அரசுப் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குகளுக்கு இணையானவை அல்ல என்று அந்தக் கட்சியினர் கூறுகிறார்கள்.
அது இருக்கட்டும். ‘பொதுமக்களின் பணத்தைத் தொட மாட்டோம்; தொட்டவர்களை விட மாட்டோம்‘ என்று கூறிவிட்டு, ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணையை எதிர்கொண்டு வருபவர்களை ஏன் கட்சியில் சேர்க்க வேண்டும்?
விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களை இணைக்க வேண்டிய அவசியம் என்ன?
;‘தி.மு.க வாஷிங் மெஷின்‘<
த.வெ.க மீது இப்போது வைக்கப்படும் குற்றச்சாட்டு, தி.மு.க மீதும், அ.தி.மு.க மீதும் இருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில், போக்குவரத்துத் துறையில் வேலைவாய்ப்பு தருவதாக லஞ்சம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர் செந்தில் பாலாஜி.
அவரை கடுமையான விமர்சித்தவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின். அதே செந்தில் பாலாஜியை தி.மு.க-வில் சேர்த்துக்கொண்டார்கள்.
அதுபோல, அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளின் விசாரணைகள் இருக்கின்றன. அவரை தி.மு.க-வில் இணைத்துக்கொண்டார்கள்.
அப்படியென்றால், இது ‘தி.மு.க வாஷிங் மெஷின்‘ என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், இங்கே அரசியல் நோக்கத்தில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. தி.மு.க தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவோ, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை அதிகரிப்பதற்காகவோ அந்த இணைப்புகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, மேற்கு மண்டலத்தில் கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செந்தில்பாலாஜி உள்ளிட்ட சிலரை தி.மு.க-வில் இணைத்ததாகக் கூறுகிறார்கள்.
அதேபோல த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜாவை குதிரை பேரத்தில் இழுக்க முயன்றதாக செந்தில் பாலாஜி மீது புகார் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதாவது, கட்சியை வலுப்படுத்த ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களை தி.மு.க சேர்த்துக்கொண்டது. ஆட்சியைக் காப்பாற்ற அத்தனை நபர்களை த.வெ.க சேர்த்துக்கொள்கிறது. இதுதான் வித்தியாசம்.
அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் ஆணையம், இன்னும் ஆறு மாதங்கள், அல்லது அதற்கு மேல் தேர்தலைத் தள்ளிவைத்தால், தற்போதைய அரசியல் பரபரப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது.
அதற்குள் பல புதிய அரசியல் சூழல்கள் உருவாகக்கூடும். தற்போதைய நிலையில், காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
ஒருவேளை, இன்னும் சில எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்கிறார்களா என்பதைப் பார்த்து, அதன் பிறகு தமிழ்நாட்டுக்கான அனைத்து இடைத்தேர்தல்களையும் ஒரே கட்டமாக அறிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் நினைக்கலாம்.
அல்லது, விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு ஒரு ‘செக்’ வைக்க வேண்டும் என்று பா.ஜ.க நினைக்கலாம். அதற்காக, இப்போது இடைத்தேர்தலை அறிவிக்காமல் இருக்கலாம். தேர்தல் ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் நிலைமை தெளிவாகும் என்று எதிர்பார்க்கலாம்