குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற முயற்சி என எதிர்க்கட்சிகள் மீது பிமல் ரத்நாயக்க கடும் விமர்சனம்
நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பொய்யான பிரசாரங்களை பரப்பி, அதனை பயன்படுத்தி குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற சில அரசியல் தரப்புகள் முயற்சிக்கின்றன என ஆளும் தரப்பின் முக்கிய உறுப்பினர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் குறிப்பிட்டதாவது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவும், நாமல் ராஜபக்ச தரப்பும் இணைந்து நாட்டில் தேவையற்ற அச்சத்தை உருவாக்கி அரசியல் இலாபம் பெற முயற்சிக்கின்றன என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேலும் கூறுகையில், தற்போதைய அரசு மக்கள் நலன் சார்ந்த பொருளாதார கொள்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், அதனை எதிர்க்கட்சிகள் ஏற்க முடியாமல் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் மக்கள் ஆணையை பெற்றுள்ள தற்போதைய அரசை எந்த அரசியல் சக்தியும் பொய்யான பிரசாரங்களால் வீழ்த்த முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் நாட்டை மீண்டும் பொருளாதார வீழ்ச்சிக்குள் கொண்டு செல்லும் வகையில் செயற்படுகின்றன எனவும், ஆனால் அரசு தனது திட்டங்களை தடையின்றி தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!