குவைத் மீது ஈரான் இன்று புதன்கிழமை (3) அதிகாலை மீண்டும் ட்ரோன்கள், ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்காவும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் மேற்காசியாவில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டுத் தாக்குதல் நடத்தி வந்தன.
ஈரான் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் அந்நாட்டின் உயர்தலைவர் அலி காமேனி உயிரிழந்ததோடு, அடுத்தடுத்து, பல முக்கிய தலைவர்கள் ஈரானில் பலியாகினர்.
ஈரானின் பல பிரதேசங்களில் நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதல்களில் பொதுமக்களில் பலர் உயிரிழந்ததோடு, ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் தற்காலிக போர்நிறுத்தமும் அமுல்படுத்தப்பட்டது.
ஈரான் நிபந்தனைகளுடனான கோரிக்கைகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் முன்வைத்துள்ள நிலையில் உடன்படிக்கை, ஒப்பந்தம் குறித்த கலந்துரையாடல்களும் பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், தற்காலிக போர்நிறுத்தத்தையும் மீறி தற்போது இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மீண்டுமொரு பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் மேற்காசிய, மத்திய கிழக்கு நாடுகள் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!