news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சுவிட்சர்லாந்து அல்ஜீரியாவை எளிதாக வீழ்த்தியது

03 Jul, 2026

வான்கூவர் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற சுவிட்ஸர்லாந்துக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையிலான பீபா உலகக் கிண்ண 32 அணிகள் சுற்று போட்டியில் ஆட்டத்தின் இரண்டு பகுதிகளிலும் தலா ஒரு கோலைப் புகுத்திய சுவிட்ஸர்லாந்து 2 - 0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்றது.



போட்டியின் 10ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்குள்ளிருந்து  ஜோன் மன்ஸாம்பி  பரிமாறிய பந்தை  ப்றீல் எம்போலா கோலாக்கினார்.


ஆறு யார் எல்லைக்குள்ளிருந்தவாறு அவர் கோலை நோக்கி உதைத்த பந்தை யாராலும் தடுக்க முடியாமல் போனது.

இதற்கு முன்னர் 2014இலிருந்து 7 வருடங்கள்  சுவிட்ஸர்லாந்து   அணியின் பயிற்றுநராக இருந்த தற்போதைய அல்ஜீரிய   பயிற்றுநர் விலடிமர் பெட்கோவிச் இடைவேளையின்போது தனது அணி வீரர்களுக்கு எவ்வாறு எதிரணியைக் கட்டுப்படுத்தலாம் என அறிவுரை வழங்கி இருந்தார்.



ஆனால், இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்த முதலாவது நிமிடத்திலேயே சுவிட்ஸர்லாந்து வீரர் டான் எண்டோய் மேலும் ஒரு கோலைப் போட்டு அணியை மேலும் பலப்படுத்தினார்.


அதனைத் தொடர்ந்து கோல் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு சுவிட்ஸர்லாந்து கடுமையாக முயற்சித்தது.

ஆனால், அல்ஜீரியாவின் தடுத்தாடல் வியூகத்தால் அதன் முயற்சிகள் கைகூடவில்லை.


இந்தப் போட்டியில் வெற்றியீட்டிய சுவிட்ஸர்லாந்து, அடுத்த சுற்றில் கோலம்பியா அல்லது கானாவை எதிர்த்தாடும்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!